திருமண பந்தத்திற்கு 'இன்சூரன்ஸ்' எவ்வளவு முக்கியம் தெரியுமா உங்களுக்கு..?

கோடிக் கணக்கான பணத்தை இறைத்து திருமணத்தை ஏற்பாடு செய்த பிறகு அந்தத் திருமணம், இயற்கைச் சீற்றத்தின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ நின்று போனால்?

உலக அளவில் இந்திய திருமணங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்தியர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த இந்திய நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்திற்காக கோடிக் கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றனர்.

திருமண பந்தத்திற்கு 'இன்சூரன்ஸ்' எவ்வளவு முக்கியம் தெரியுமா உங்களுக்கு..?

இதைப் பார்த்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலும் திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. இதன் மூலம் கோடிக் கணக்கான பணத்தை இறைத்து திருமணத்தை ஏற்பாடு செய்த பிறகு அந்தத் திருமணம், இயற்கைச் சீற்றத்தின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ நின்று போனால், அந்த இழப்பை இந்த இன்சூரன்ஸ் திட்டம் சரிசெய்துவிடும்.

வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்தத் திருமண இன்சூரன்ஸ் திட்டம் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கிறது.

திருமண இன்சூரன்ஸ் என்றால் என்ன?

திருமண இன்சூரன்ஸ் என்றால் என்ன?

திருமணம் என்றால் பெரும் அளவில் பணம் விளையாடும், சில நேரத்தில் பணத்தை இலக்க கூடிய நிலைமைக்கும் தள்ளப்படுவார்கள். எனவே திருமணம் நடக்கும் போது ஏற்படும் பெறும் இழப்பை தவிர்ப்பதற்காகவே திருமண இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் திருமண இன்சூரன்ஸ்

இந்தியாவில் திருமண இன்சூரன்ஸ்

இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகின்றன. இந்த திருமண இன்சூரனஸ் திட்டம் ஒரு நிகழ்வு சார்ந்த திட்டம் ஆகும். அதாவது இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம், திருமணத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தொடங்கி அந்த திருமணம் முழுமையாக முடிந்தவுடன் முடிந்துவிடுகிறது.

தனிப்பட்ட கருத்து

தனிப்பட்ட கருத்து

ஒருவேளை மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் இடையில் நின்று போனால் அந்த திருமண நிகழ்வுக்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்ப்படாது.

ரத்து அல்லது ஒத்திவைப்பு

ரத்து அல்லது ஒத்திவைப்பு

இயற்கை இடர்பாடுகள், விபத்துகள், தீ விபத்து, நிலநடுக்கம், நகைத் திருடு போதல், பணம் திருடு போதல் போன்ற காரணங்களால் திருமணம் தடைப்படும் போது அந்த இழப்பிற்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்குகின்றன.

மேலும் திருமணம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளிப் போனாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ அதில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கௌரவக் குறைச்சல் நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கவிடாது.

அதுபோல் திருமணம் நடைபெறும் போது சொத்துக்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அல்லது திருமண விருந்து விஷமாகி அது விருந்தினர்களைப் பாதித்தால் அதற்கான இழைப்பையும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் அளிக்கின்றன.

 

இன்சூரன்ஸ் திட்டம்

இன்சூரன்ஸ் திட்டம்

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம் முதல் 4 மட்சம் ரூபாய் வரையிலான திருமண இன்சூரன்சுகளை வழங்குகிறது. இந்த இன்சூரன்சுகளுக்கான பிரீமியத் தொகை 3,770 முதல் 14,275 ரூபாய் வரை இருக்கும். திருமணத் தேதிக்கு முன் 7 நாட்களில் இருந்து திருமணம் முடியும் வரை இயற்கை இடர்பாடுகள், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு ஏற்படும் விபத்து, இரத்த உறவினர்களுக்கு ஏற்படும் விபத்து, நகை காணாமல் போதல் போன்றவற்றால் திருமணம் தள்ளிப் போனால் அல்லது நின்று போனால் இந்த திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பைச் சரிசெய்யும்.

டிவோர்ஸ் இன்சூரன்ஸ்

டிவோர்ஸ் இன்சூரன்ஸ்

திருமணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி ‘வெட்டிங் இன்சூரன்ஸ்" திட்டம் உள்ளதோ அதே போன்று விவாகரத்து செய்யும் போது இன்சூரன்ஸ் திட்டம் வேண்டும் என்பது குறித்து ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் மூலம் 2014 ஆம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அதில் விவாகரத்தின் போது பெண்களுக்குத் தர வேண்டிய இழப்புத் தொகைக்கு இது பெரிதும் உதவும் என்றும் அதன் கீழ் அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+