சம்பளத்தில் சில ஆயிரங்களை உயர்த்த மேனேஜர், டீம் லீடருடன் சண்டை போட்டு தோற்றுப்போன அனைவருக்கும் இந்த கட்டுரை.
தனியார் நிறுவனங்களில் சம்பளம், கொடுப்பனவு போன்றவற்றை நிறுவனங்களே முடிவு செய்தாலும் சில நிறுவனங்கள் சம்பள அமைப்பை ஊழியர்களிடமே விட்டுவிடுகின்றன.
இப்படி ஊழியர்களிடமே சம்பள அமைப்பை அளிப்பதன் மூலம் வரி செலுத்துவதை குறைத்து நீங்கள் இப்போது பெறும் சம்பளத்தை இன்னும் அதிகரிக்க இயலும்.
எனவே நாம் இங்குச் சம்பளத்தை மறுசீறாய்வு செய்து கொடுப்பனவுகள் அமைப்பை மாற்றுவதன் மூலம் எப்படி வரியைக் குறைப்பது என்று இங்குப் பார்ப்போம்.
வீட்டு வாடகைப்படி
சம்பளம் வாங்கும் தனிநபர்கள் வாடகை வீட்டில் வசித்து வரும் போது வரியைக் குறைக்க வீட்டு வாடகைப்படி பெறலாம். இது உங்கள் வரியைக் குறைக்க உதவும். வீட்டு கடன் மற்றும் வீட்டு வாடகைப்படி என இரண்டின் மீதும் ஒரே நேரத்தில் வருமான வரி விலக்கு பெற இயலும்.
இதற்கு நீங்கள் வாடகைக்கு வசித்து வரும் வீடு மற்றும் கடனில் வாங்கும் வீடு இரண்டும் ஒரே நகரத்தில் இருத்தல் வேண்டும்.
நீங்கள் வசித்து வரும் வீடு உங்கள் பெற்றோர் பெயரில் இருந்தால் வாடகை பணத்தைப் பெற்றோருக்கு அளிப்பதன் மூலம் வரி விலக்கு பெறலாம்.
பயண விடுப்புப் படித்தொகை
பயண விடுப்புப் படித்தொகை படிவம் மூலமாக வருடத்திற்கு இரண்டு முறை பயணம் செய்வதற்கான தொகையில் இருந்து வரி விலக்கு பெறலாம். இது இந்தியாவில் பயணம் செய்கிற பயணத்திற்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க.
தேசிய ஓய்வூதிய திட்டம்
கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்த்ற்கு நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்புக்கு வரி விலக்கு பெறலாம்.
மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பிரிவு 80சி கீழ் வருடத்திற்கு 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி செலுத்த தேவை இல்லை.
போனஸ்
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் போனஸ் தொகைக்கு கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். பல நேரங்களில் ஊழியர்களுக்கு பணம் அளிக்கும் போதே நிறுவனங்கள் போனஸ் அளித்தற்கான வரியை ப்டித்தம் செய்த பிறகே அளிக்கின்றன.
இது போன்ற சூழ்நிலையில் ஊழியர்கள் தங்களது வரி சேமிப்பு முதலீடு விவரங்களை அளிப்பதன் மூலம் அதிக போனஸ் பெற இயலும். அவ்வாறு கொடுக்க இயலவில்லை என்றால் செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வரிதாக்கல் செய்யும் போது அளிக்க வேண்டும்.
சம்பள முற்பணம் / கடன்
சம்பளம் முற்பணம் வாங்கும் பொது அதற்கு வரி செலுத்த வேண்டும். ஒரு வேலை வட்டி இல்லாத அல்லது சலுகை கடன்களை நிறுவனம் அளிக்கும் போது 20,000 ரூபாயுக்கும் குறைவாக இல்லை என்றால் வரி செலுத்துவது கட்டாயம் ஆகும்.
வரி சட்டங்களின் படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதத்தின் படி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வட்டி பிடித்தம் செய்யப்படும்.
ஊழியர்கள் பங்குகள் திட்டம்
பல நிறுவனங்கள் தங்கலது ஊழியர்களுக்குப் பங்குகளை அளிக்கத் துவங்கியுள்ளன. இந்தப் பங்குகளுக்கு ஊழியர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும்.
சில நேரங்களில் ஊழியர்களுக்கு நியாயமான சந்தை மதிப்பை விடக் குறைவான விலையில் பங்குகளை நிறுவனங்கள் அளிக்கும். ஆனால் அதற்கும் வரி செலுத்துவது கட்டாயம் ஆகும்.


Click it and Unblock the Notifications