இனி அரசு வேலை வேண்டாம்.. மாதம் ரூ. 5000 பென்ஷன் பெற முடியும்..!

இந்தியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் பெறுவதற்கான பென்ஷன் திட்டம்.

சென்னை: மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அமைப்பு சாரா பிரிவில் பணிபுரிபவர்களும் தங்களது ஓய்வூதிய காலத்தில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒரு உத்தரவாத ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வழிநடத்திச் செல்வது குறிப்பிடத்தக்கது.

மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெற இயலும்?

மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெற இயலும்?

உத்தரவாத ஓய்வூதிய திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்து வருவதினால் குறைந்தபட்சம் மாதம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பெற இயலும்.

பிஎஃப் போன்று அரசு ஏதேனும் பங்களிப்பு செலுத்துமா?

பிஎஃப் போன்று அரசு ஏதேனும் பங்களிப்பு செலுத்துமா?

ஆம், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் அனைவருக்கும் மத்திய அரசு உங்களது வருடாந்திர சேமிப்பு தொகையில் இருந்து 50 சதவீதம் வரையும் அதிகபட்சமாக வருடத்திற்கு 1,000 ரூபாய் வரை உங்கள் கணக்கில் கூடுதலாகச் சேர்க்கப்படும்.

இத்திட்டத்தில் சேமிப்பதற்கு வயது வரம்பு ஏதேனும் உள்ளதா?

இத்திட்டத்தில் சேமிப்பதற்கு வயது வரம்பு ஏதேனும் உள்ளதா?

அடல் பென்ஷன் யோஜனா திட்ட சேமிப்பை நீங்கள் துவங்க 10 முதல் 40 வயதிற்குள் நீங்கள் இருத்தல் வேண்டும்.

மேலும் இந்த கணக்கை துவங்க வங்கி கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 

மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

ஓய்வூதிய கணக்கைத் திறப்பவரின் வயதிற்கு ஏற்றவாறும், ஓய்வூதிய தொகை எவ்வளவு வேண்டும் என்பதைப் பொருத்து முதலீடும் மாறும்.

உதாரணத்திற்கு கணக்கு துவங்குபவரின் வயது இப்போது 18 என்று வயது என்று வைத்துக் கொள்ளுங்கள் மாதம் 42 ரூபாய் இத்திட்டத்தில் சேமித்து வந்தால் 60 வயதிற்குப் பிறகு மாதம் 1000 ரூபாய் பெற இயலும்.

அதுவே 210 ரூபாய் முதலீடு செய்து வந்தால் 5000 ரூபாய் பெற இயலும். இந்த சேமிப்பிற்கான மாத தவனை உங்களது வயதைப் பொருத்து மாறும்.

 

அடல் பென்ஷன் யோஜனா கணக்கை எப்படித் துவங்குவது?

அடல் பென்ஷன் யோஜனா கணக்கை எப்படித் துவங்குவது?

உங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கைத் துவங்க வேண்டும். பின்னர் அவர்களிடம் அடல் பென்ஷன் யோஜனா கணக்கிற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தால் போது. ஓய்வூதிய கணக்கை எளிதாகத் திறந்துவிடலாம்.

இணையதள வங்கி கணக்குகள்

இணையதள வங்கி கணக்குகள்

எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் வைத்து இருப்பவர்கள் எளிதாக அவர்களின் இணையதள கணக்கை பயன்படுத்தி கணக்கை திறக்க இயலும்.

அபராதம்

அபராதம்

இத்திட்டத்தின் கீழ் சேமித்து வரும் போது தவணையை செலுத்த தவறினால் 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடலாம். இது தவனைத் தொகையை பொருத்து மாறும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+