இதை மட்டும் பாலோ பண்ணுங்க.. உங்கள் 'முதுமை' காலம் முழுவதும் 'பொற்காலம்' தான்..! - பகுதி 2

முதுமை நம்முடைய வருமானத்தையும், மன வலிமையையும் அதிகளவில் பாதிக்கும் ஒரு விஷயம். இதனை எப்படி எதிர்கொள்வது, நம்முடைய முதுமையால் நம்முடைய குடும்பத்தை பாதிக்காத வண்ணம் எப்படி திட்டமிடுவது..?

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இதைக் கிளிக் செய்யவும்.

வங்கி வைப்புகளில் சலுகை

வங்கி வைப்புகளில் சலுகை

60 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வங்கி வைப்புகளுக்குக் கூடுதல் வட்டி கிடைக்கிறது. பெரும்பாலான வங்கிகள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கால நீட்சிக்குப் பொருத்தமான வட்டிக்கும் 0.5% சதவிகிதம் கூடுதல் வட்டியாக வழங்குகின்றன.

வரிச்சலுகை தரும் வங்கி வைப்புக்களுக்கும் இந்தக் கூடுதல் வட்டி விகிதம் பொருந்தும். முதல் முறை வாய்ப்புக்கு கணக்குத் துவங்கும்போது வயது சான்று தேவைப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைப் போலவே இதன் மீது கிடைக்கும் வட்டியும் முழுவதும் வரி விதிப்பிற்குட்பட்டது என்றாலும் வட்டியை மாதா மாதம் பெற இதில் வழியுள்ளது.

இதுவரை நாம் பார்த்த அனைத்தும் நிதி சார்ந்த சலுகைகள், இப்போது அரசு சேவைகளில் கிடைக்கும் சலுகையைப் பார்க்கப்போகிறோம்.

 

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

பொதுவாகப் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது அதற்குக் காவல் துறை விசாரணை இருக்கும். மூத்த குடிமக்களைப் பொருத்த வரை இந்த விசாரணை பாஸ்போர்ட் கொடுத்த பிறகு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செய்ய வழியுள்ளது.

மூத்த குடிமக்கள் தங்களுடைய 18 வயதிற்கும் அதிகமான வெளிநாட்டில் உள்ள வாரிசுகளின் பாஸ்போர்ட் நகலை (அதில் பெயர் இடம்பெற்றுள்ள பக்கம்) கூடுதல் ஆவணமாக விண்ணப்பத்துடன் கொடுப்பதன் மூலம் காவல் துறை அதை ஆய்வு செய்து பாஸ்போர்ட்டை வழங்க முடியும்.

சில பாஸ்போர்ட் மையங்களில் புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் மறு வழங்கலுக்காக விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்கள் நேராகச் சென்று வழங்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துச் சந்திக்கும் நேரத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் ஆன்லைனில் பதிவுசெய்து விண்ணப்ப எண்ணை குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதற்கு முன் அனுமதி தேவை இல்லை என்றாலும் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

 

ஒய்வு ஊதியதாரர் உயிர் சான்று (லைப் சர்டிபிகேட்)

ஒய்வு ஊதியதாரர் உயிர் சான்று (லைப் சர்டிபிகேட்)

ஒய்வு ஊதியம் பெறுபவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டாயமாக இந்தச் சான்றை தரவேண்டியது அவசியம். ஒவ்வொரு வருட நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் எந்த வங்கியில் ஒய்வு ஊதியம் பெரும் வங்கிகளில் அல்லது அஞ்சலகங்களில் இதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.

2014ஆம் ஆண்டு, ஜீவன் பிரமான் எனப்படும் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முறையிலான உயிர் சான்று ஓய்வூதியதாரர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாகச் சென்று சான்றை எழுத்துவடிவில் கொடுக்கும் முறையில் உள்ள சிரமங்களைப் போக்க இது அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு கூடுதல் வசதி என்றாலும் இதுவரை 9.27 லட்சம் ஓய்வு ஊதியக்காரர்கள் இதனைத் தேர்வு செய்துள்ளார்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தனிநபர் சார்ந்த சிக்கல்கள் காரணமாக இது கூடிய விரைவில் நிறுத்தப்பட உள்ளது.

 

கடன்கள் (லோன்)

கடன்கள் (லோன்)

பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு கடன் திட்டங்களைத் தருகின்றன. ஆனால் அவர்கள் அந்தந்த வங்கிகளில் ஓய்வூதியக் கணக்கை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக மாதாந்திர ஓய்வூதிய/சம்பளத் தொகையில் 50 மடங்கு (ஓய்வூதிய அல்லது மாதச் சம்பளக்காரர்கள்) அல்லது வருட வருவாயில் 4 மடங்கையோ (ஓய்வூதியம் பெற்றுப் பின்னர்த் தொழில் புரிபவர்களாக இருப்பவர்கள்) கடனாகப் பெற முடியும்.

இதற்கான உச்ச வரம்பு 75 லட்சம் ரூபாய். வங்கிகள் இதன் மாதாந்திரத் தவணை (இஎம்ஐ) மாத வருவாயில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் கடன் திரும்பிச் செலுத்தும் காலம் பொதுவாக 15 வருடங்களோ அல்லது கடன் வாங்குபவரின் 75 வயது வரையோ இருக்கும் (எது முன்னர் நிகழுமோ அது வரை). கடன் கையாளும் கட்டணம் அல்லது ப்ராசஸிங் கட்டணம் இவர்களுக்குக் குறைவாக வசூலிக்கப்படும்.

 

விமானப் பயணம்

விமானப் பயணம்

மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை என்பது எப்போதும் இருக்காது. ஆனால் விமான நிறுவனங்கள் சில நேரங்களில் சலுகைகளைத் தரவே செய்கின்றன. ஸ்பைஸ் ஜெட் தற்போது அடிப்படைக் கட்டணத்தில் 15% சதவிகித சலுகையை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது. இதற்கான கால அவகாசம் ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை எனவும் இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரயில் பயணம்

ரயில் பயணம்

ரயில் பயணத்தைக் பொறுத்த மட்டில் இந்திய ரயில்வே ஆன் மூத்த குடிமக்களுக்கு 40 சதவிகிதமும் பெண் மூத்த குடிமக்களுக்கு 50 சதவிகிதமும் படுக்கை, முதல் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ஏசி உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் சதாபத்தி மற்றும் ராஜதானி ரயிகளுக்கும் கூடத் தாராளமாக வழங்குகிறது. இதற்கான வயது வரம்பு குறைந்தது ஆண்களுக்கு 60 ஆகவும் பெண்களுக்கு 58 ஆகவும் வரையறுக்கப் பட்டுள்ளது.

கடும் நிதி னிருக்கடியை சமாளிக்கும் வகையில் தற்போது ரயில்வே மூத்த குடிமக்களை ஒருவேளை தங்களுக்குச் சலுகை வேண்டாமென்றால் அதனை விட்டுவிடலாம் என ஒரு தேர்வைத் தருகிறது. படிவத்தில் வயதை ஒரு மூத்த குடிமகன் கொடுத்தவுடன் தானாகவே கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்கும் முறை தற்போது வேண்டுமென்றால் மட்டுமே பெரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

 

கடைசியாக...

கடைசியாக...

மூத்த குடிமக்கள் தங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும்போது குறிப்பாகத் தனியார் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறுகியகாலப் பலன்களுக்காகத் தங்கள் பணத்தின் பாதுகாப்பிற்குப் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ராவோடு ராவாக இவர்கள் பணத்தை ஆட்டையைப் போட நிறையபேர் காத்துக் கிடப்பர்.

அவர்களுக்குப் பலியாகாமல் இது வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சம்பாதித்த காசு என்பதை மனதில் வைத்து பேராசையால் அதற்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+