வாடகை வீட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு என்றால் அது என்றாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதாகவே இருக்கும்.
வாடகை வீட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு என்றால் அது என்றாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதாகவே இருக்கும்.
இப்படி வாடகை விட்டில் இருந்த பல கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிட்டு அதற்கான வட்டி மட்டும் அசலைக் கட்டுவதற்கு முன்பு தங்களது வாழ்க்கையில் பாதியை தொலைத்துவிடுவர்.
இப்படி ஏற்கனவே வீட்டுக் கடனை வாங்கியவர்கள் தாங்கள் கட்டும் வட்டியைக் குறைத்து எப்படி எளிதாகக் கடனை அடைக்கலாம் என்று இங்குப் பார்ப்போம்.
வங்கியில் கடன் பெற்றுள்ளீர்களா
வீட்டிற்கான கடனை வங்கியில் பெற்று உள்ளிர்களா. நீங்கள் வங்கிய கடன் மீதான வட்டி நிலையான வட்டியா அல்லது மாறக்கூடிய வட்டியா என்று தெரிந்துகொள்ளவும்.
நிலையான வட்டி என்றால் மாறக்கூடிய வட்டி முறைக்கு உங்கள் கடனை மாற்றிக்கொள்ளலாம்.இதன் மூலம் ரெப்பொ விகிதம் குறையும் போது எல்லாம் உங்கள் கடன் மீதான வட்டியும் குறையும்.
வங்கி அல்லாத நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்று உள்ளீர்களா..?
இங்குக் கடன் பெறும் போது மாறும் வட்டி விகிதத்திற்கு மாற்ற இயலாது. ஆனால் அதிகமான தவனை தொகையைச் செலுத்தி வட்டியைக் குறைக்கலாம்.
நீங்கள் செலுத்தி வரும் தவனை தொகையிலிருந்து கூடுதல் தவணையை செலுத்துவதனால் கடன் மீதான வட்டியை கணிசமான அளவு குறைக்கலாம்.
செலவு பயன் பகுப்பாய்வு
உங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க முதலீடு செய்யும் மொத்த தொகை மற்றும் உங்களின் சேமிப்புகள் பற்றி ஆராயவும். செலுத்தும் தொகை சேமிப்பை விட கூடுதலாக இருக்கும் போது மாற்றவோ மறு நிர்ணயம் செய்யவோ அவசியம் இல்லை.
மறுநிதி விருப்பங்கள்
புதிய கடன் மற்றும் ஏற்கனவே கடன் அளித்த வங்கிக்கும் இடையிலான வட்டி விகிதம் 0.75 சதவீதம் வித்தியாசம் இருக்கும் நிலையில் மறுநிதி சீராய்வு விருப்பம் ஊர்ஜிதமானது.


Click it and Unblock the Notifications