2016 நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற மற்றும் டெபாசிட் செய்ய இயலும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இன்று மட்டுமே மக்களால் செலவு செய்ய முடியும். மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிக்காத வரையில் 2016 நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற மற்றும் டெபாசிட் செய்ய இயலும்.
நவம்பர் 8 தேதி பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து பெட்ரோல் பங்குகள், அரசு பால் கடைகள், அரசு மருத்துவமனைகள், ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் போன்ற இடங்களில் செலவு செய்யக்கூடிய நிலை இருந்து வந்தது.
அந்த அறிவிப்பிற்கு 72 மணி நேரத்திற்குப் பிறகு பழைய நோட்டை மெட்ரோ ரயில் டிக்கெட், ஹைவே டோல், மருந்தகங்கள், எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள், ரயில்வே கேட்டரிங், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 24 காலக்கெடு
முதலில் நவம்பர் 14 ஆம் தேதிவரை பழைய நோட்டுகளை மேலே கூறிய இடங்களில் செலவு செய்யலாம் என்று அறிவித்த மத்திய அரசு நவம்பர் 24 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து அறிவித்தது.
காலக்கெடு நீடிக்க எதிர்பார்ப்பு
வங்கிகள் பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை அளிக்க இன்னும் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில் இன்னும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 நவம்பர் 24 ஆம் தேதி வரை எங்கு எல்லாம் பழைய ரூபாய் நோட்டுகள் செலவு செய்யலாம் என்று இங்குப் பார்ப்போம்.
அரசு மருத்துவமனைகள்
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை, மருத்துவமனை உள்ள மருந்துக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது எல்லாம் பழைய ரூபாய் நோட்டுகளைச் செலவு செய்யலாம்.
டிக்கெட்
ரயில்வே டிக்கெட், பேருந்து கட்டணம் போன்றவற்றைப் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பெறலாம்.
மருந்துக் கடைகள்
மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தனியார் மருந்துக் கடைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி மருந்து அளிக்கப்படும்.
வெளிநாட்டுப் பயணிகள்
வெளிநாட்டுப் பயணிகள் 5000 ரூபாய் வரை தங்களது கரன்சிகளை மற்றி கொள்ளலாம்.
அரசு அங்கீகாரம்
அரசு அங்கீகாரம் பெற்ற பால் கடைகள், புறநகர் ரயில் கவுண்டர்கள், மெட்ரோ ரயில் கவுண்டர்கள் போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளைச் செலவு செய்யலாம்.
கொடுப்பனவுகள்
நீதி மன்ற கட்டணம், அரசு தானியக் கிட்டங்கிகளில் விதைகள் வாங்க, அரசு அலுவலகங்கள், அரசு இடுகாடு போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் நவம்பர் 24 ஆம் தேதி மட்டும் செல்லும்.
எல்பிஜி, மின்சாரம், நீர்
எல்பிஜி சிலிண்டர்கள், மின்சார கட்டணம், நீர் கட்டணம் போன்றவற்றைச் செலுத்தும் போது நவம்பர் 24 ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும்.
விமான நிலையம்
விமான டிக்கெட், மற்றும் விமான நிலையத்தில் செலுத்தும் கட்டணங்கள் போன்றவற்றிற்கு 5000 ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும்.


Click it and Unblock the Notifications