2014-2015 ஆம் நிதி ஆண்டில் மட்டும் 88,723 கோடி ரூபாய் பிஎப் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 27,000 கோடி செயல்படா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிஎப் கணக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செயல்படாமல் இருக்கும் ஊழியர்களின் பிஎப் கணக்குகளுக்கும் இனி வட்டி அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நடப்பு முறை
இப்போது ஊழியர்களின் பிஎப் கணக்குகள் 36 மாதங்கள் செயல்படாமல் இருந்தால் அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது அதே நேரத்தில் எப்போது தேவை என்றாலும் மீண்டும் தொடரும் நிலை உள்ளது.
நவம்பர் 11 ஆம் தேதி தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
8.8 சதவீத வட்டி
நிறுவனத்தில் பணி செய்யும் போது ஊழியர்கள் நீக்கப்படும் போதும், பின்பு பணி புரியும் இடங்களில் பிஎப் கணக்கு இல்லை என்றாலும் பழைய கணக்கை மூடாமல் இருந்தால் அதில் உள்ள பணத்திற்கு 2015-16 ஆ ஆண்டு 8.8 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
பழைய விதிமுறை
2011 ஆம் ஆண்டு முதல் 36 மாதங்கள் பிஎப் கணக்கில் பங்களிப்பு இல்லாத போது அதற்கு பிந்தைய காலத்திற்கு வட்டி அளிக்கப்படாது என்ற விதி பின்பற்றி வந்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் மட்டும் இல்லாமல் 3,000-க்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளும் செயல்பட்டு வருகின்றன.
செயல்படா நிலையில் 27,000 கோடி
2014-2015 ஆம் நிதி ஆண்டில் மட்டும் 88,723 கோடி ரூபாய் பிஎப் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 27,000 கோடி செயல்படா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications