பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார அமைச்சர் சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகள்.
பணத்தை மாற்றுவதினால் ஏற்பட்டுவரும் பண தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொருளாதார விவகார மந்திரி சக்திகாந்தா தாஸ் கூறியுள்ள முக்கிய முடிவுகளை இங்குப் பார்ப்போம்.
விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி
கிசான் கிரெடிட் கார்டுகளின் மூலமாகவும் விவசாயிகள் 25,000 ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வர்த்தகர்கள்
பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் தங்களது வணிகத்தில் இடையூறுகள் இல்லாமல் நடத்த வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்.
திருமணம்
உங்கள் வீட்டில் திருமணமா? குடும்பத்தில் தந்தை, தாய் அல்லது யாரேனும் ஒருவர் 2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறையில் பணத்தை பெறுபவர் சுய பிரகடன கடிதம் அளிக்க வேண்டியது கட்டாயம்.
செலாவணி வரம்பு குறைக்கப்பட்டது
500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை 4,500 ரூபாய் வரை மாற்றலாம் என்று இருந்த கட்டுப்பாடு மேலும் குறைக்கப்பட்டு நவம்பர் 18 முதல் 2,000 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களில் பிரிவு சி வரையில் உள்ளவர்கள் 10,000 ரூபாய் வரை சம்பள முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். இது இவர்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications