மொபைல் செயலி மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க..!

சில செயலிகள் உன்மையாகவும் பணத்தை அளிக்கின்றன. அப்படிப்பட்ட செயலிகள் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்கலாம், ஸ்மார்ட்போன் செயலி மூலமாகச் சம்பாதிக்கலாம் என்ற பல விளம்பரங்களை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துவருகிறோம். இதில் பல போலியான விளம்பரங்களும் உண்டு.

அதே நேரம் சில செயலிகள் உன்மையாகவும் பணத்தை அளிக்கின்றன. அப்படிப்பட்ட செயலிகள் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

யம்செக் (Yumchek)

யம்செக் (Yumchek)

யம்செக் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓஸ் இரண்டிலும் தங்களது சேவையை அளிக்கின்றன.

இந்தச் செயலி மூலம் நீங்கள் பெறும் பணம் அனைத்தும் உங்களுடைய பேடிஎம் கணக்கின் வாலெட்டுக்கு பரிவர்த்தனை செய்யப்படும்.

ஒவ்வொரு ரசீதுக்கும் இந்தச் செயலி 5 ரூபாயினை உங்கள் வாலெட்டுகளுக்கு அளிக்கும்.

மேலும் அனைத்து ரசீதுகளுக்கும் பற்றுறவு லோயாலிடி போன்றவையும் நீங்கள் பெறலாம்.

இந்தச் செயலியின் மூலம் நீங்கள் உங்கள் அருகில் உள்ள உணவகங்கள் பற்றிய விவரங்களையும் பெறலாம்.

 

கீடூ (Keetoo)

கீடூ (Keetoo)

இந்த இலவச செயலியை நீங்கள் மொபைலில் நிறுவிய உடன் உங்களுக்கு சில விளம்பரங்களை அறிவிப்பாகத் தொடர்ந்து அளிக்கும். இந்த விளம்பரங்களை நீங்கள் திறந்து பார்ப்பதன் மூலம் உங்கள் கீடூ கணக்கில் 1 ரூபாய் சேரும்.

இந்தச் செயலியின் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்களது பேடிஎம் கணக்கு மற்றும் மோபிவிக் வாலெட்டுகளில் சேர்க்கப்படும்.

 

டெங்கி (Tengi)

டெங்கி (Tengi)

டெங்கி ஒரு அரட்டை அடுக்கும் செயலியாகும். இது நேரடியாக உங்களுக்கு பணத்தை அளிக்காது.

அதற்குப் பதிலாக அரட்டை அடிப்பது மற்றும் உங்கள் நண்பர்களை இந்தச் செயலையை பார்க்க அழைப்பதன் மூலம் வாரக் கடைசியில் பயன்படுத்தக்கூடிய டிக்கெட்களைப் பெறலாம்.

ஒரு வேலை உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் செயலியில் இருந்து வரும் சில அறிவிப்புகளின் மூலம் பணத்தை உங்களது கணக்கிற்கு அல்லது அன்பளிப்பு வவுச்சர்களாக பெற்றுக்கொள்ளலாம்.

 

ஃபோப் (Foap)

ஃபோப் (Foap)

ஃபோப் செயலி நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உங்களுக்கு விற்று பணத்தை அளிக்கும்.

இலவசமாக இந்தச் செயலியில் கணக்கைத் துவங்கலாம். பின்னர் ஃபோப் மார்க்கெட் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் விருப்பமானவர்கள் இதனை வாங்கலாம்.

இந்தச் செயலி மூலமாக உங்கள் படங்கள் விற்கப்பட்டால் படத்திற்கு 5 டாலர் அதாவது 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை நீங்கள் பெறலாம்.

இந்த பணம் அனைத்தும் பேபால்(Paypal) கணக்கின் மூலமாக உங்கள் அளிக்கப்படும்.

 

ஸ்லைடுஜாய் (Slidejoy)

ஸ்லைடுஜாய் (Slidejoy)

இலவச செயலியான இது உங்கள் ஆண்ட்ராடு ஃபோனில் பதிவேற்றிய உடன் போனின் திரைப்பூட்டில் விளம்பரங்களைக் காண்பிக்கும்.

இதற்கான தீம்மினை உங்கள் செயலியில் கணக்கைத் துவங்கிய உடன் மாற்றிக்கொள்ளலாம். வலது பக்கமாக ஸ்வைப் செய்யும் போது பூட்டு திறக்கப்படும், இடது பக்கமாக ஸ்வைப் செய்யும் போது விளம்பரத்தின் விவரங்களைக் காணலாம்.

இப்படி நீங்கல் பார்க்கும் விளம்பரங்கள் மூலம் 1,000 கார்டாஸ் புள்ளிகளைப் பெறும் போது 1 டாலர் அதாவது 66 ரூபாயினை நீங்கள் பெற இயலும்.

இதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை பேபால் கணக்கின் மூலமாக 15 நாட்களுக்கு ஒருமுறை பெறலாம்.

 

1 பைசா/ எம்செண்ட்

1 பைசா/ எம்செண்ட்

இரண்டின் மூலமாகவும் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து உங்கள் பீரிபெய்டு மொபைல் போனினை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இலவசமாக இந்தச் செயலியில் கணக்கைத் துவங்கி புள்ளிகள் சம்பாதித்து அதன் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

எம்செண்ட் செயலியில் நீங்கள் அழைத்த நண்பர்கள் சேர்ந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும். ஆனால் 1 பைசா செயலியில் உள்ள வீடியோவினை பார்த்தால் புள்ளிகள் கிடைக்கும்.

 

வாலெட்டுகள்

வாலெட்டுகள்

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பல டிஜிட்டல் வாலெட்டுகள் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பல கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்குகின்றன.

உதாரணத்திற்கு இப்போது பேடிஎம் வாலெட்டுகள் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தும் போது 300 ரூபாய் கேஷ்பேக்காக பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+