டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்றால் நாம் பொதுவாக வாகனங்கள், ரியல் எஸ்டேட், ஹெல்த் இன்சூரன்ஸ் என்று மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் மக்கள் பலர் அட நமக்கு என்ன நேர்ந்துவிடப் போகிறது என்று கவலைப்படாமல் இன்சூரன்ஸ் பாலிசி ஏதும் எடுக்க மாட்டார்கள்.
ஆனால் சிலர் தங்களது வீடு, கார், பைக் என அனைத்திற்கும் பாலிசிகள் எடுப்பர். டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்றால் நாம் பொதுவாக வாகனங்கள், ரியல் எஸ்டேட், ஹெல்த் இன்சூரன்ஸ் என்று மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
இதுவே நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால், பாடகராக இருந்தால் உங்கள் குரல், உடல் பாகங்கள் என ஒவ்வொன்றுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.
இது போன்று சில பிரபலங்கள் எதற்கெல்லாம் காப்பீடு எடுத்துள்ளார்கள் மற்றும் வேறு எதற்கெல்லாம் இந்தியாவில் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன என்று இங்குப் பார்ப்போம்.
உடல் பாகங்கள்
பல பிரபலங்கள் தங்களது உடல் பாகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். அதில் விளையாட்டு வீரர்களும் அடக்கம். சானியா மிர்சா மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இருவரும் தங்களது கைகளுக்கு காப்பீடு எடுத்துள்ளனர்.
குரல் இன்சூரன்ஸ்
இசையைப் பெரிதாக நினைப்பவர்கள் பலர் தங்களது குரலுக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். இந்தியாவின் தலை சிறந்த பாடகரான லதா மங்கேஷ்கர் தனது குரலுக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார்.
அதே போன்று நடிகர்களில் ரஜினிகாந்த் தனது குரலுக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்லப்பிராணிகள் காப்பீடு திட்டம்
செல்லப்பிராணிகளை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் பலர் அவற்றுக்கும் இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். இப்போது சில காலமாகச் செல்லப்பிராணிகள் காப்பீடு எடுப்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்று கூறுகின்றனர்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போட்டிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நபர் ஒரு கோடியை வென்றால் இன்சூரன்ஸ் நிறுவனம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு ஒரு கோடியை அளிக்கும்.
திருமண இன்சூரன்ஸ்
பணத்தை இறைத்து திருமணத்தை ஏற்பாடு செய்த பிறகு அந்தத் திருமணம், இயற்கைச் சீற்றத்தின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ நின்று போனால், அந்த இழப்பை இந்த இன்சூரன்ஸ் திட்டம் சரிசெய்துவிடும்.


Click it and Unblock the Notifications