பெற்றோர்கள், முத்தகுடிக்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது சாலச்சிறந்தது.
உயர்ந்து கொண்டிருக்கும் சுகாதார செலவினங்கள் மூத்த குடிமக்களின் தீவிர கரிசனையாக இருந்து வருகிறது. தங்களுடைய பிள்ளைகளுக்கு சுமையைக் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள், முத்தகுடிக்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது சாலச்சிறந்தது.
விதிகள் மற்றும் நிபந்தனைகள் மாறுபட்டாலும், கிட்டத்தட்ட அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
இந்தத் திட்டங்கள் மூத்த குடிமகன் மற்றும் அவரது துணைவியின் மருத்துவ செலவினங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகின்றன.
அவை மருத்துவமனை செலவினங்கள், அவசரக்கால ஊர்தி மற்றும் மருத்துவமனைக்கு முந்திய செலவீனங்களை ஒரு வரையறைக்குட்பட்டு வழங்குகின்றன.
வயது வரைமுறை
இந்தக் காப்பீட்டு திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கென்றே இருப்பதால், ஆரம்ப வயது 60 வயதுக்கு மேல் இருந்தாக வேண்டும்.
மற்ற வழக்கமான காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் உச்ச வயது வரம்பும் அதிகம்.
திட்டப் படிவம்
இந்தக் காப்பீட்டு திட்டத்தை எடுக்க விரும்புவர் காப்பீட்டு நிறுவனத்தையோ அல்லது முகவரையோ அணுக வேண்டும். பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டு திட்டங்களை இணையத்தில் ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு திட்ட படிவத்தை நிரப்ப வேண்டும். பணமற்ற பரிவர்த்தனைக்கு திட்டப் படிவத்தை நிரப்புதல் அவசியம்.
ஏற்கனவே உள்ள நோய்கள்
மூத்த குடிமக்கள் காப்பீடு ஏற்கனவே உள்ள நோய்களுக்கும் சேர்த்துப் பாதுகாப்பு அளிக்கிறது. இருப்பினும் ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருக்கும் காலங்களை இந்தக் காப்பீடு வரையறை செய்கிறது.
மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கான செலவினங்களை காப்பீடு எடுப்பவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இருப்பினும், திட்டப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நிறுவனமே இந்த செலவினங்களை திரும்ப வழங்கி விடும்.
மருத்துவ அறிக்கைகள், மற்றும் திட்ட படிவத்தோடு தேவையான ஆவணங்களோடு முதல் தவணைக்கான காசோலையுடன் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில், நிறுவனங்கள் இதற்கான காப்பீட்டை வழங்கும்.
நினைவில் கொள்ளவேண்டியவை
இந்தக் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமியம் வருமான வரி சட்டம், பிரிவு 80டி யின் படி வரிவிலக்கு அளிக்கப்படும்.
இந்தக் காப்பீடு எடுக்கும் நபரிடம் ஏற்கனவே அவருடைய பெயரில் மருத்துவ காப்பீடு இருந்தால் சில நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications