புயல், வெள்ளம், மழை, பூகம்பம் போன்றவற்றில் இருந்து உங்கள் வீட்டைப் பாதுகாக்க ‘ஹோம் இன்சூரன்ஸ்’..!

உலகம் முழுவதும் சென்று வந்தாலும் நமது வீடு போல இருக்குமா என்று கூறுபவர்கள் நாம்.

வீட்டை கற்கள் மற்றும் பீம்கள் கொண்டு கட்டலாம் ஆனால் இரு இல்லம் அன்பு மற்றும் கனவு நிறைந்தது. உலகம் முழுவதும் சென்று வந்தாலும் நமது வீடு போல இருக்குமா என்று கூறுபவர்கள் நாம்.

இங்கு தான் நாம் அன்புடனும், ஆயிரம் நினைவுகளுடன் வாழ்நாளைக் கழிக்கிறோம். மேலும் நாம் சேமித்த பணத்தில் அல்லது வருமானத்தில் இருந்து வீடு கட்ட தான் அதிக முதலீடும் செய்கின்றோம். ஆனால் வீட்டிற்கு இன்சூரன்ஸ் வேண்டும் என்று என்றாவது நாம் நினைத்துப் பார்க்கின்றோமா..?

சென்னையில் 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம், இந்த ஆண்டு வந்த புயல் என இயற்கை சீற்றங்களில் நமது வீடு சேதம் அடைந்த போதும் பலர் இன்னும் வீட்டிற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கவில்லை.

ஒரு நல்ல வீடு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தீ, பூகம்பம், கொள்ளை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றின் சேதத்தில் இருந்து உங்களை எளிதாகத் தற்காத்துக்கொள்ள இயலும்.

எனவே வீடு கட்டுவது மட்டும் இல்லாமல் அதற்கு இன்சூரன்ஸ் எடுப்பது எப்படி, அதன் பயன் என்ன போன்றவற்றை பார்ப்போம்.

வீடு இன்சூரன்ஸில் உள்ள 5 நன்மைகள்

வீடு இன்சூரன்ஸில் உள்ள 5 நன்மைகள்

வீட்டிற்கு இன்சூரன்ஸ் தேவை என்பதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது, அதில் என்னென்ன நன்மைகள் எல்லாம் உள்ளன என்று நீங்கள் பார்த்தால் இது மொத்தமாக உங்களை மாற்றிவிடும்.

1. வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் வீட்டின் வெளிப்புறம் இரண்டும் இந்தக் காப்பீடு திட்டத்தில் அடங்கும்.

2. திருடு போன்றவற்றில் இருந்தும் உங்களது சொத்தை பாதுகாக்கலாம்.

3. பிற காப்பீடு பாலிசிகளை விட குறைவான் விலையில் வீட்டிற்கு இன்சூரன்ஸ் எடுக்க இயலும்.

4. வீட்டிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனைப் புதுப்பிக்க இயலும்.

 

வீட்டிற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?

வீட்டிற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?

வீட்டிற்கு இன்சூரன்ஸ் வழங்க இந்தியாவில் பல நிறுவனங்கள் உள்ளன. நாம் எப்படிச் சரியான இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்து பாலிசி வாங்குவது என்று இங்குப் பார்ப்போம்.

பிரீமியம் மற்றும் கவரேஜ்

பிரீமியம் மற்றும் கவரேஜ்

உங்கள் வீடு என்ன ரிஸ்க்கிற்கெல்லாம் உட்படலாம் என்பதை முதலில் முடிவு செய்து பிறகு பாலிசி வாங்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு வீட்டை வெள்ளம் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது என்றால் நீங்கள் எடுக்கும் பாலிசி அதற்கு உட்படுகின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

உரிமை கோரல் தீர்வு விகிதம்

உரிமை கோரல் தீர்வு விகிதம்

ஒரு நிறுவனம் எவ்வளவு விரைவாக வீடு பாதிக்கப்பட்டுள்ள போது பணத்தை அளிக்கிறது என்பதை வைத்து இதனை அளவிடலாம். ஒருவேலை உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை, எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்று கணக்கு கேட்கப்படுகின்றது என்றால் கொடுப்பனவு விவரங்களைச் சரிபார்த்து அளிக்க வேண்டும். எனவே முன்னதாகவே நிறுவனம் எவ்வளவு பணம் அளிக்கும் என்பதைக் கணித்து உரிமை கோர வேண்டும்.

நிறுவனத்தின் நற்பெயர்

நிறுவனத்தின் நற்பெயர்

பாலிசி எடுக்கும் போது நிறுவனத்தின் ஊழியர் எந்த அளவிற்கு உங்களுடன் நட்பாகப் பேசுகின்றார், உதவுகின்றார் என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் பாலிசி எடுக்கும் போது நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் பாலிசிகளையும் சரிபார்த்து எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

வீட்டிற்கான காப்பீடு எதற்கெல்லாம் கிடைக்கும்

வீட்டிற்கான காப்பீடு எதற்கெல்லாம் கிடைக்கும்

வீட்டிற்கான காப்பீடு வீட்டின் தொற்றாம் மற்றும், வீட்டினில் உள்ள பொருட்கள் சேதங்கள் எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே கிடைக்கும். எனவே நாம்

வீட்டுக்கிறகான காப்பீடு எதற்கெல்லாம் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

 

தீ மற்றும் ஆபத்துக்களுக்கான கவர்

தீ மற்றும் ஆபத்துக்களுக்கான கவர்

விமான சேதம்
தீ
மின்னல்
கலகம், வேலைநிறுத்தம்
புயல், சூறாவளி, வெள்ளம்
ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை

நிலநடுக்கம் கவர்

நிலநடுக்கம் கவர்

வீட்டின் மீது பாலிசி எடுக்கும் போது அது சில பாலிசிகள் கடல், ஆறு, ஏறி மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றால் ஏற்படும் சேதத்திற்குக் காப்பீடு வழங்குவதில்லை. எனவே அதனைச் சரிபார்த்து பாலிசி எடுப்பது அவசியம்.

கொள்ளை மற்றும் திருட்டு

கொள்ளை மற்றும் திருட்டு

வீட்டில் கொள்ளை, திருட்டு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கும் காப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீடு தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கும் சேர்ந்து கிடைக்கும்.

எப்போது காப்பீட்டை பெற இயலாது

எப்போது காப்பீட்டை பெற இயலாது

1. உடைகள், காலப்போக்கில் தேயக்கூடிய பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு கிடைக்காது.
2. பணம் இழப்பு
3. போர், அணு ஆயுத போரின் போது ஏற்படும் இழப்புகளுக்குக் காப்பீடு கிடைக்காது.
4. எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிக நேரங்கள் பயன்படுத்தியதினால் ஏற்படும் விபத்திற்குக் காப்பீடு கிடையாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+