கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தில் தங்கம் வாங்குவதென்றால் அதற்கு வரி செலுத்த தேவை இல்லை.
டெல்லி: விவசாயத்தில் இருந்து வந்த வருமானம் மற்றும் கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தில் தங்கம் வாங்குவதென்றால் அதற்கு வரி செலுத்த தேவை இல்லை என்று வியாழக்கிழமை மத்திய அரசு அறிவித்துள்ளது.
லோக் சபாவில் இந்த வாரம் வரி சட்டத்தின் மீதான இரண்டாவது திருத்த மசோதாவில் கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கு 85 சதவீதம்வரை அபராதம் விதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதா
புதிய சட்ட திருத்த மசோதாவின் படி தங்கமும் நேரடி வருமான வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் வரும் வதந்தியை மறுத்த மத்திய அரசு தங்கம் மீதான பழைய வரி விதிப்பு கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
வரி செலுத்தத் தேவையில்லை
கணக்கில் காட்டப்பட்ட வருமானம் மற்றும் விவசாயம் மூலம் பெற்ற வருமானம் அல்லது சரியான சேமிப்பில் வைத்திருந்த பணம், சரியான கணக்கு உள்ள வருமானத்தின் மூலம் தங்கம் வாங்கினால் வரி செலுத்தத் தேவையில்லை என்று நேரடி மத்திய வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.
எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்
வருமான வரித் துறை இது குறித்து எடுத்த நடவடிக்கையின் பேரில் திருமணம் ஆகிய பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையும், ஆண்கள் 100 கிராம் வரை தங்கமும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
பிரிவு எண் 115BBE
ராஜ்ய சபாவில் இன்னும் நிறைவேற்றப்படாத இந்தச் சட்டத்தில் புதிதாக 115BBE என்ற பிரிவு சேர்க்கப்பட உள்ளது. அதன் மூலம் கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு 60 சதவீதம் வரை வரியும், 25 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
மேலும் இன்னொரு பிரிவின் கீழ்க் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் எப்போது
ஒருவர் வைத்திருக்கும் வருமானத்திற்கோ, சொத்திற்கோ சரியான விளக்கம் இல்லை என்றால் பிரிவு எண் 115BBE-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வருமான வரி ஆணையம் கூறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications