ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை குறைத்து சலுகைகளை பெற்று லாபம் பெறலாம் என்றும், அவை அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததில் இருந்து இன்றுடன் ஒரு மாதம் முடிந்துள்ளது.

எனவே அதற்கான ஒரு மாத கால அறிக்கையை வாசிக்க வந்த
அருண் ஜேட்லி டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வோருக்குப் பல சலுகைகளை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை குறைத்து சலுகைகளை பெற்று லாபம் பெறலாம் என்றும், அவை அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரொல், டீசல் சலுகை
கார்டுகள், இ-வாலெட்டுகள் மூலம் பணம் செலுத்துவோருக்கு பெட்ரொல் மற்றும் டீசல் விலையில் 0.75 சதவீதம் சலுகை பெறலாம்.
விற்பனை இயந்திரங்கள் இலவசம்
10,000-க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் பிஓஎஸ் எனப்படு விற்பனை இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
ரயில் டிக்கெட்
ரயில் டிக்கெட் எடுக்கும் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் அல்லது இணையம் மூலம் டிக்கெட் வாங்கினால் 0.50 சதவீத கட்டணம் சலுகை வழங்கப்படும்.
இணையம் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ்.
மாத சீசன் டிக்கெட்களிலும் 0.5 சதவீதம் சலுகை.
ரயில் கேட்டரிங்
ரயில் செல்லும் போது உணவு மற்றும் தங்கு அறை போன்றவற்றை புக் செய்யும் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
இன்சூரன்ஸ்
அரசு துறை நிறுவனங்களில் இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 8 சதவீதமும், பொது இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு 10 சதவீதமும் சலுகை அறிவித்துள்ளார்.
சேவை வரி
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது 2,000 ரூபாய்க்கும் குறைவான தொகைக்குச் சேவை வரி ரத்து.
நெடுஞ்சாலை டோல்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை விலை.
கிசான் கிரெடிட் கார்டு
கிசான் கிரெடி கார்டு வைத்துள்ளவர்களுக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டுகள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications