வரி சேமிக்கும் வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் இதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வருமான வரி சட்டத்தின் படி பிர்வி 80 சி-ன் கீழ் வரி சேமிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெறலாம்.
இப்படி வரி சேமிக்கும் வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் இதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
யாரெல்லாம் முதலீடு செய்ய இயலும்...?
தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் மட்டும் வரி சேமிக்க கூடிய வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய இயலும்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு..?
நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒவ்வொரு வங்கிகளிலும் குறைந்தபட்ச தொகையில் மாற்றம் உண்டு.
வைப்புக் காலம்
இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் போது குறைந்தது 5 வருடங்களுக்கு முன்பு பணத்தை எடுக்கக் கூடாது. மேலும் இந்த வைப்பு நிதி திட்டங்கள் மூலம் கடன் ஏதும் பெற இயலாது.
எங்கு முதலீடு செய்ய வேண்டும்
கூட்டுறவு அல்லது ரூரல் வங்கிகளைத் தவிர்த்து பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் வைப்பு நிதி திட்ட கணக்குகளில் முதலீடு செய்யலாம்.
தபால் நிலையம்
வருமான வரி சட்டப் பிரிவு 80-சி இன் கீழ் தபால் நிலையத்தில் உள்ள 5 வருட கால வைப்பு நிதி திட்டங்களிலும் வரி விலக்கு பெற இயலும்.
தபால் நிலையத்தில் உள்ள வைப்பு நிதி திட்ட முதலீடு கணக்குகளை ஒரு கிளையில் இருந்து பிற கிளைக்கு எளிதாக மாற்ற முடியும்.
நன்மை
ஒருவரால் தனிநபர் அல்லது இணை கணக்காக வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் முதல் நபருக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும்.
வைப்பு நிதி திட்டங்கள் மூலம் பெறும் வட்டி லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டி வரும். டிடிஎஸ் ஏற்றுக்கொள்ளப்படும்.
வட்டி விகிதம்
பல வங்கிகள் வைப்பு நிதி திட்டங்களுக்கு சிறிய வட்டி விகித மாற்றங்களுடன் திட்டங்களை அளிக்கின்றது. மேலும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு அதிக வட்டி விகிதமும் அளிக்கின்றன.
பணிநியமன
நிரந்தர வைப்பு நிதி திட்ட கணக்குகளில் பணிநியமன வசதியான நாமினி சேவையும் உண்டு.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications