ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் டெப்பாசிட் செய்த பணத்தை எடுக்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..!
டெல்லியில் நிதி அமைசார் அருண் ஜெட்லி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார். இதன் மூலம் 29 மாநிலங்களில் ஏர்டெல் பெமெண்ட்ஸ் வங்கி சேவை துவங்கப்பட்டுள்ளது.
போன் சேவை அளிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கோடாக் மகேந்திரா வங்கியும் இணைந்து 250,000 ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மையங்களை அமைக்க உள்ளன. இதன் முதல் கட்டமாக 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேமெண்ட்ஸ் வங்கிகள்
பேமெண்ட்ஸ் வங்கிகள் பிற வங்கிகளுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானவை. பேமெண்ட்ஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் மட்டுமே துவங்க முடியும். அதுமட்டும் இல்லாமல் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பு வைக்க முடியும். மேலும் வங்கி சேவைகள் போன்றே அனைத்துக் கிளைகளிலும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.
கட்டணம்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை என்றாலும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பணத்தை எடுக்க 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதுவே 4000 ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 0.65 சதவீதம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதாவது 10,00ஒ ரூபாய் எடுக்க 65 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளுக்கு இடையில் பணத்தைப் பரிமாற்ற கட்டணம் ஏதும் இல்லை. இதுவே பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 0.5 சதவீதம் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
வங்கி சேவை மையங்களில் இருந்து பிற ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றாலும் 0.5 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் வங்கி சேவை மையங்களில் இருந்து பிற வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை திறக்க 100 ரூபாய் கட்டணமும், வங்கி கணக்கை மூட 50 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.க வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 49,990 ரூபாய் வரை ஒரே நேரத்தில் டெப்பாசிட் செய்யலாம்.
வட்டி விகிதம்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி சேவை அளித்து வரும் நிறுவனங்களான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவீதமும், குறிப்பிட்ட சில வங்கிகள் மட்டும் 6 சதவீதம் வரை வட்டி விகதம் அளித்து வரும் நிலையில் 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிப்பதாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செயலியும் அட்டையும்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி செயலி மட்டும் இல்லாமல் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் டெபிட் கார்டு சேவையையும் அளிக்கத் துவங்கி உள்ளது. ஆன்லைன் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மாஸ்டர்கார்டினை ஏற்கும் இணையதளங்களில் மட்டும் பரிவர்த்தனை செய்ய இயலும்.
இன்சூரன்ஸ்
சேமிப்புக் கணக்கை துவங்கும் அனைவருக்கும் 1 லர்சம் ரூபாய்க்கான இலவச தனிநபர் விபத்து காப்பிடு வழங்கப்படும் என்றும் இதற்காகப் பார்தி ஆக்சா ஜெனெரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரீசார்ஜ்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் நீங்கள் டெப்பாசிட் செய்யும் ஓவ்வோறு ரூபாய்க்கும் உங்களுக்கு அதிகபட்சம் 500 ரூபாய் வரை டாக்டைம் கிடைக்கும்.
வங்கி கணக்கை எப்படித் திறப்பது?
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை திறக்க ஆதார் அட்டையை ஆவணமாகச் செலுத்த வேண்டும். ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் என் வங்கி கணக்காக அளிக்கப்படும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications