புத்திசாலித்தனமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

பெரும்பாலோனோர், புத்திசாலியாக மற்றும் அறிவாளியாக விளங்க, அதிகமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்தக் கூற்று உண்மைக்குச் சற்று அருகில் இருந்தாலும், இது முற்றிலும் உண்மை இல்லை.

எனினும் ஒருவர் மிகவும் எளிதாகத் தன்னுடைய சிறிய நடவடிக்கைகள் மூலம், தன்னுடைய புத்திசாலித்தனத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி, தன்னுடைய நுண்ணறிவின் ஆற்றலை அதிகரிக்க முடியும்.

நீங்கள் எப்படி ஒரு சில சூழ்நிலைகளை அணுகுகின்றீர்கள் என்பதில் உங்களுடைய மன ஆற்றல் மேம்படுகின்றது. நீங்கள் புத்திசாலி மற்றும் அறிவாளியாக, உங்களுடைய ஈடுபாடும், ஆற்றலும் மட்டுமே தேவை. வேறு எதுவும் தேவையில்லை.

தினந்தோறும் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களுடைய சிறிய முயற்சி கூட உங்களுடைய தேடலில் உங்களை நீண்ட தூரம் கூட்டிச் செல்லும். இது உங்கள் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல், உங்களது வேலை, வியாபாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவும்.

நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக, உங்களுடைய தனிப்பட்ட புத்திசாலித்தனத்தை அதிகரிக்கக்கூடிய 10 சிறந்த தனிப்பட்ட எளியச் செயல்களின் பட்டியலைப் தொகுத்துள்ளோம். அதைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

நாளிதழ்களைத் தினந்தோறும் படித்திடுங்கள்

நாளிதழ்களைத் தினந்தோறும் படித்திடுங்கள்

நீங்கள் உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பொழுது, யாருடனும் எதைப் பற்றியும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட முடியும். அதோடு மட்டுமல்ல, நீங்கள் அரசியல் மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இருந்து, வல்லுநர்களின் கருத்துக்களை அறிந்து உங்களுடைய அறிவைப் பட்டை தீட்டிக் கொள்ள முடியும்.

உங்களுக்குப் பிடித்தமான சுவாரஸ்யமான மக்களைப் பின்பற்றுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான சுவாரஸ்யமான மக்களைப் பின்பற்றுங்கள்

நாம் இன்று சமூக ஊடகங்களின் மூலம் வேறொரு உலகில் வாழ்ந்து வருகின்றோம். சமூக ஊடகங்கள் இன்று நம் விரல் நுனியில் பல்வேறு தகவல்களைக் கொட்டுகின்றன. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான மற்றும் சுவாரஸ்யமான பிரபலங்களைப் பின்தொடருங்கள். அவ்வாறு செய்யும் பொழுது அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டி, உங்களை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

புத்திசாலிகளுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்

புத்திசாலிகளுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்

உங்களைக் கவர்ந்த புத்திசாலியுடன், ஒரு சிறிய நடைப் பயிற்சி, அல்லது அவர்களுடன் இணைந்து காபி அருந்த வெளியே செல்லுங்கள். நீங்கள் அறிவார்ந்த மக்களுடன் நேரத்தைச் செலவிடும் பொழுது, அவர்களிடம் கேள்விகளைக் கேட்கும் போது, உங்களை அறியாமல் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்.

அறிவு சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுங்கள்

அறிவு சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுங்கள்

குறுக்கெழுத்து, மற்றும் செஸ் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுங்கள். இது உங்களுடைய புத்திசாலித்தனத்தை விரிவாக்கும். அதோடு ஒவ்வொரு நாளும் சுடோகு மற்றும் புதிர்களை அவிழ்த்திடுங்கள். இது உங்களின் படைப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

 உங்களுடைய பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடுங்கள்

உங்களுடைய பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடுங்கள்

உங்களுக்கு இசைக் கருவிகளை வாசித்தல், அல்லது சமையல் போன்ற பொழுதுபோக்குகள் இருந்தால் அதைத் தினந்தோறும் பழகிடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது, நீங்கள் ஒரு புதிய இசை அல்லது புதிய பதார்த்தத்தைக் கற்றிடலாம். அதோடு இது உங்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அதிகரிக்கும். மற்றும் இது உங்களுடைய மனதை என்றென்டும் இளமையாக வைத்திருக்கும்.

நீங்கள் கற்றுக் கொண்டதை தினந்தோறும் பழகிடுங்கள்

நீங்கள் கற்றுக் கொண்டதை தினந்தோறும் பழகிடுங்கள்

நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வார்த்தை கற்றுக் கொண்டீர்கள் என்றால், ஒரு உரையாடலில் அதைப் பயன்படுத்த முயற்சி செய்திடுங்கள். இதேபோல், நீங்கள் ஒரு புதிய கருவியைப் பயன்படுத்தக் கற்றுள்ளீர்கள் என்றால், அதை உங்களுடைய நண்பர்களுக்காக இசைத்திடுங்கள். நீங்கள் கற்றுக் கொண்டவற்றைத் தினந்தோறும் பயன்படுத்த தொடங்கும் பொழுது உங்களை அறியாமல் உங்களுடைய அறிவாற்றால் அதிகரிக்கும்.

நீங்கள் செய்த சாதனைகளைப் பட்டியலிடுங்கள்

நீங்கள் செய்த சாதனைகளைப் பட்டியலிடுங்கள்

நீங்கள் ஒரு நாள் முழுவதும் புரிந்த சாதனைகளைப் பட்டியலிடும் பொழுது அது உங்களுடைய நினைவில் தங்கிவிடும். மேலும் இவ்வாறு செய்யும் பொழுது உங்களுடைய சாதனைகள் உங்களை மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் இன்னும் அதிக நம்பிக்கையுடனும் வைத்திருக்கும்.

உங்கள் ஆறுதல் மண்டலத்தைத் தாண்டி வெளியே வாருங்கள்

உங்கள் ஆறுதல் மண்டலத்தைத் தாண்டி வெளியே வாருங்கள்

நீங்கள் இதுவரை செய்திடாத அல்லது செய்யத்துணியாத விஷயங்களைச் செய்யப் பழகுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய பயத்தைப் போக்கி, உங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்களுடைய ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.

சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

வேலையில் இருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்து, நீங்கள் உண்மையில் என்ன அனுபவிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை அனுபவிக்க முயற்சி செய்திடுங்கள். அது பயணமாக இருக்கலாம் அல்லது அரசு சாரா நிறுவனத்தில் உங்களுடைய சேவையாகக் கூட இருக்கலாம். இவ்வாறு செய்வது பல்வேறு விஷயங்களில் உங்களுடைய எண்ண ஓட்டத்தை மாற்றி உங்களுடைய புத்தியை கூர் தீட்டும்.

எப்பொழுதும் ஆர்வத்துடன் இருங்கள்

எப்பொழுதும் ஆர்வத்துடன் இருங்கள்

உங்களுடைய ஆற்றல் மற்றும் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடிய ஒரு எளிய வழி எல்லாவற்றையும் கேள்வி கேட்பது தான். வாழ்நாள் முழுவதும் நீங்கள் கற்றக் கொண்டாலும் உங்களால் பரிபூரண ஞானத்தைப் பெற முடியாது. எனவே கற்றலை எப்பொழுதும் கை விடாதீர்கள்

ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடிய செயல்பாடுகளை உருவாக்கி அதைத் தினந்தோறும் பின்பற்றுங்கள். சரியான உணவு மற்றும் திட்டமிட்ட உடல் உழைப்பு உங்களைப் புத்திசாலியாக்கி, உங்களுடைய அறிவாற்றலை அதிகரிக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+