அதிக லாபம் தரும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய சிறந்த நிறுவனங்கள்..!

அதிக லாபம் தரும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய சிறந்த நிறுவனங்கள்..!

வட்டி விகிதங்கள் மிகவும் சரிந்துள்ள நிலையில் மேலும் சரிவதற்கான வாய்ப்புகளே தெரிகின்றன. நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் நிலையான வைப்புநிதிகள்.

இந்த வைப்பு நிதி திட்டங்கள் வங்கிகள் வழங்குவதை விட ஒரு சதவீதத்திற்கும் மேலான வட்டிவிகிதத்தை அளிக்கவல்லவை.

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமானது 8.05 சதவீத வட்டிவிகிதத்தில் 3 ஆண்டுக் கால அளவில் நிலையான வைப்புநிதி வழங்குகிறது. வட்டி விகிதமானது இரண்டு ஆண்டுகளுக்கு 8 சதவீதமாகவும், 1 ஆண்டுக்கு 7.80 சதவீதமாகவும் குறைகிறது. வைப்புநிதிகள் அனைத்தும் AAA தரமதிப்பீடு கொண்டவை. மேலும் தற்போதைய குறைந்த வட்டிவிகித காலத்தில் சிறந்த வைப்புநிதி திட்டமாக அறியப்படுகிறது.

கேரள போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம்

கேரள போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம்

கேரள அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனமானது வட்டிவிகிதத்தில் மிகச் சிறந்த முறையில் 8.50 சதவீத வட்டியை 3 ஆண்டுக்கால அளவில் வழங்குகிறது. வைப்புநிதிக்கு எந்தவித தரமதிப்பீடும் இல்லையென்றாலும் கேரள அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாதலால் வைப்புநிதிகள் பாதுகாப்பாகவே இருக்கும். 1 வருட மற்றும் 2 வருட வைப்புநிதிகளுக்கும் அதே 8.50 சதவீத வட்டிவிகிதம் தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25 சதவீதம் அதிகப்படியான வட்டிவிகிதம் தரப்படுகிறது.

டிஎச்எப்எல் அஷ்ராய் டெப்பாசிட் பிளஸ்

டிஎச்எப்எல் அஷ்ராய் டெப்பாசிட் பிளஸ்

டிஎச்எப்எல் நிறுவனம் அளிக்கும் வைப்புநிதி திட்டமானது தரமதிப்பீடு நிறுவனங்களால் AAA சான்று பெற்றது. 4 மற்றும் 5 வருட கால வைப்புநிதிக்கு நிறுவனமானது 8 சதவீத வட்டிவிகிதம் .தருகிறது. 3 வருட முதிர்வானது 7.85 சதவீத வட்டிவிகிதத்தையும், 1 வருட முதிர்வு 7.80 சதவீத வட்டிவிகிதத்தையும் பெற்றுத்தரும். வங்கிகளுடன் ஒப்பிடும்போது மோசமான நிலையல்ல.

நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்ய சிறந்த நிறுவனம்

நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்ய சிறந்த நிறுவனம்

இந்த நிறுவனத்தின் நிலையான வைப்புநிதி 8.25 சதவீத வட்டிவிகிதத்தை 5 ஆண்டுக் கால அளவிற்கு அளிக்கின்றது. கேரள போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து சிறந்த திட்டமாக அறியப்படுகிறது. வைப்புநிதிகள் அனைத்தும் AAA தரமதிப்பீடு கொண்டதானாலும், நிறுவன வைப்புநிதிகள் பாதுகாப்பானது அல்ல என்பதைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டும். 3 வருட வைப்புநிதி 8.15 சதவீத வட்டிவிகிதத்தை பெற்றுத்தரும்.

கிருஹ் பைனான்ஸ்

கிருஹ் பைனான்ஸ்

கிருஹ் பைனான்ஸ் நிறுவனமானது எச்டிஎப்சியின் துணை நிறுவனமாகும். 2,3,4 மற்றும் 5 வருட வைப்புநிதிகள் 7.50 சதவீத வட்டிவிகிதத்தை பெற்றுத்தரும். நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் அளிக்கும் வட்டிவிகிதத்தை விட சற்றே சிறந்ததாகும். தற்போதைய குறைந்த வட்டிவிகித சூழலில் மோசமான நிலையல்ல.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி

எச்டிஎப்சி நிறுவனத்தின் வைப்புநிதிகள் AAA தரமதிப்பீடு கொண்டவை மற்றும் பாதுகாப்பானவையுமாகும். இந்த நிறுவனம் தன் அனைத்து முதிர்வுகளுக்கும் 7.40 சதவீத வட்டிவிகிதம் அளிக்கிறது. நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவன வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டு ஒன்றைத் தெரிவு செய்யலாம். எச்டிஎப்சி சிறந்த ஒன்றாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பாதுகாப்பான நிலையான வைப்புநிதியாகும்.

மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ்

மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ்

இந்நிறுவனத்தின் நிலையான வைப்புநிதிகள் மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களைப் போலவே AAA தரமதிப்பீடு பெற்றவை. முதல் மற்றும் இரண்டாம் வருட முதிர்வுகளுக்கு 7.50 சதவீதமும் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வருட முதிர்வுகளுக்கு 7.55 சதவீத வட்டிவிகிதம் தரப்படுகிறது. இன்றைய சூழலில் மோசமான நிலை இல்லை.

நிறுவன நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கு வரிவிதிப்பு முறை

நிறுவன நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கு வரிவிதிப்பு முறை

நிலையான வைப்புநிதிகளின் வட்டி வருமானம் ரூ. 5000ஐ தாண்டினால் மூலத்திலிருந்து வரிப்பிடித்தம் செய்யப்படும். வட்டி வருமானம் ரூ. 10000ஐ தாண்டினால் வங்கிகள் தங்கள் நிலையிலிருந்து மூலத்திலிருந்து வரிப்பிடித்தம் செய்யும். வட்டி விகிதமானது வங்கி வைப்புத்தொகையை விட நிறுவன நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் சற்று அதிகமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+