அட இதற்கு இதுதான் அர்த்தமா..? நிதி சந்தையில் நம்மை குழப்பும் வார்த்தகள்..!

By: Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil

நிதி சார்ந்த வார்த்தைகள், நிதி நிலை சந்தைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றது. எனினும் சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

நாம் ஒரு அர்த்தத்தை புரிந்து கொண்டால், அதற்கான உண்மையான அர்த்தம் நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றன. இங்கு நிதி நிலை சந்தைகளில் ஒரு வார்த்தைக்கும் வேறு ஒரு வார்த்தைக்கும் சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அந்த வேறுபாடுகள் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன.

எனவே நாங்கள் இங்கே வார்த்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விளக்க முற்பட்டுள்ளோம்.

வரி விலக்கு மற்றும் வரிப் பிடித்தம்

இந்த இரண்டுமே மொத்த வரியை குறைக்க உதவுகின்றன. ஆனால் இவை இரண்டும் வருமான வரி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெவ்வேறு வழிகளில் வரியை குறைக்க உதவுகின்றன.

வரி விலக்கு: இது ஒருவருடைய மொத்த வருமானத்தில் கழித்துக்கொள்ளப்படும். அதன் பிறகே ஒருவருடைய வருமான வரி கணக்கிடப்படும். எனினும் இது ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இது ஒரு சில பிரிவுகளில் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும். மொத்த வருமானத்திற்கும் இது பொருந்தாது. இவை அனைத்தும் வருமான வரிச் சட்டம் பிரிவு 10 அல்லது 54 கீழ் வருகின்றன. விடுமுறை தின பயணப்படி, வரியற்ற பிணைப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டி, அல்லது பங்குகளில் இருந்து கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயம் போன்றவை இந்தப் பிரிவின் கீழ் அடங்கும்.

 

வரி விலக்கு மற்றும் வரிப் பிடித்தம்

வரிப் பிடித்தம்: இது வருமான வரிச் சட்ட பிரிவு 80 (80U முதல 80 சி) கீழ் மொத்த வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் நிதிகளை குறிப்பிடுகின்றது. இது வருமான வரி கணக்கிடும் போது செய்யப்படுகிறது; இந்தப் பிரிவுகள் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் அதிலிருந்து கழிக்கப்படும்.

டெர்ம் ப்ளான் மற்றும் பாரம்பரிய திட்டம்

டெர்ம் ப்ளான்: இது உங்களுடைய உயிருக்கு ஏற்படும் அபாயங்களளை உள்ளடக்கி உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தூய காப்பீடு திட்டமாகும். இந்த திட்டம் முதிர்ச்சி அடையும் பொழுது காப்பீட்டாளருக்கு முதிர்ச்சி தொகை கிடைப்பதில்லை. காப்பீட்டாளர் மரணம் அடையும் பொழுது, காப்பீட்டாளர் குறிப்பிட்ட நபருக்கு காப்பீடு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் பிரீமியம் அளவு குறைவாக உள்ளது.

டெர்ம் ப்ளான் மற்றும் பாரம்பரிய திட்டம்

பாரம்பரிய திட்டம்: இது காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டும் இணைந்த ஒரு கலவையாக உள்ளது. இந்த திட்டத்தில் முதிர்ச்சி காலத்தில் போனஸ் அல்லது உத்தரவாதத் தொகை கிடைக்கும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீடு இருப்பதால், இந்தத் திட்டத்தின் பிரீமிய தொகை அதிகமாக உள்ளது.

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் (சந்தையில் வர்த்தகமாகும் நிதி) மற்றும் இண்டெக்ஸ் பண்ட் (குறியீட்டு எண் சார்ந்த நிதி)

குறியீட்டு எண் சார்ந்த நிதி: இந்த பரஸ்பர நிதியில் ஒருவருடைய போர்ட்ஃபோலியோ பங்குகள் சென்செக்ஸ் போன்ற ஒரு சந்தைக் குறியீட்டெண் சார்ந்து இயங்குகின்றது. எனவே இது மறைமுகமாக கண்காணிக்கபடும் ஒரு நிதி திட்டம் ஆகும். பங்குச் சந்தை குறியீட்டு எண்ணிற்கு பயன்படும் அதே விகிதாசாரம் இங்கே பயன்படுத்தப்படுகின்றது. எனவே இதில் குறைந்தளவு இயக்க விலையும் குறைவான போர்ட்ஃபோலியோ விற்பனைத் திறன் உள்ளது.

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் (சந்தையில் வர்த்தகமாகும் நிதி) மற்றும் இண்டெக்ஸ் பண்ட் (குறியீட்டு எண் சார்ந்த நிதி)

சந்தையில் வர்த்தகமாகும் நிதி: இந்த பரஸ்பர நிதி திட்டங்களும் சந்தை குறியீட்டு எண்கள், கமாடிட்டி, அல்லது பந்திரங்களை சார்ந்து இயங்குகின்றது. எனினும், இங்கு உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவெனில் இந்த பரஸ்பர நிதியானது, பங்குகளைப் போன்று சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றது. எனவே ஒருவருக்கு டிமேட் கணக்கு இருந்தால் மட்டுமே இந்த நிதிகளில் முதலீடு செய்ய இயலும்.

சுய மதிப்பீடு வரி மற்றும் அட்வான்ஸ் வரி

அட்வான்ஸ் வரி: நீங்கள் ஒரு மாத சம்பளகாரர். உங்களுடைய நிறுவனம் உங்களிடம் வரிப் பிடித்தம் செய்கின்றது. உங்களுக்கு மாதச் சம்பளத்தை தவிர்த்து பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கின்றது. அந்த வருமனத்திற்கான வரி மதிப்பு ஒரு வருடத்திற்கு ரூ 10000 க்கும் அதிகம் எனில் நீங்கள் இந்த அட்வான்ஸ் வரியைச் செலுத்த வேண்டும். நீங்கள் நடப்பு நிதி ஆண்டில் மூன்று தவணையில் இந்த வரியைச் செலுத்த வேண்டும். 15 செப்டம்பர், 15 டிசம்பர் மற்றும் 15 மார்ச் ஆகிய மூன்றும் தவணைத் தேதிகள் ஆகும்.

சுய மதிப்பீடு வரி மற்றும் அட்வான்ஸ் வரி

சுய மதிப்பீடு வரி: இந்த வரியை வருமன வரிப் படிவத்தை தாக்கல் செய்யும் முன்னர் செலுத்த வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி, வரி பிடித்தத்தை விட அதிகம் எனில் நீங்கள் இந்த வரியைச் செலுத்த வேண்டும். இந்த வரியைச் செலுத்த ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயம் கிடையாது. வரித் தாக்கலுக்கு முன்னர் இதைச் செலுத்த வேண்டும். இதைச் செலுத்த ITNS 280 படிவத்தை நிரப்பி ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் அல்லது ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

என்ஏவி மற்றும் ஈடிஎப்-ன் சந்தை மதிப்பு

நிகர சொத்து மதிப்பு (என்ஏவி): ஒரு வர்த்தக நாளின் முடிவில் பரஸ்பர நிதியின் சொத்துகளில் ஒவ்வொரு பங்கிற்கும் சொந்தமான பண மதிப்பை இது பிரதிபலிக்கிறது. ஒரு பரஸ்பர நிதிக்கு சொந்தமான மொத்த சொத்துக்களின் மதிப்பை கூட்டி, அதில் இருந்து அந்த நிதிக்கு உள்ள மொத்த கடன்களையும் கழித்த பின்னர், அந்த மதிப்பை நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் இந்த நிகர சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது.

என்ஏவி மற்றும் ஈடிஎப்-ன் சந்தை மதிப்பு

சந்தை விலை: ஒரு வர்த்தக நாளில், ஒரு பரஸ்பர நிதியின் பங்கை வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும் விலையை இது குறிக்கின்றது. இந்த விலை என்பது வாங்க நினைப்பவர்கள் குறிப்பிடும் மிக உயர்ந்த விலை அல்லது விற்க நினைப்பவர் விற்க நினைக்கும் மிகக் குறைந்த விலையை குறிக்கின்றது. எனவே இந்த விலை சந்தையில் ஒரு நிதியின் தேவையைப் பொருத்து மாறுபடுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do financial terms confuse you? A look at 5 such pairs

Do financial terms confuse you? A look at 5 such pairs- Tamil Goodreturns
Story first published: Sunday, April 16, 2017, 16:50 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns