வீட்டு கடன் வாங்க போறிங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!

வீட்டு கடன் வாங்க போறிங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!

வங்கியின் பணமதிப்பை தாண்டிக் கொடுக்கப்பட்ட வாராக் கடன்கள் மற்றும் நிலுவையில் செலுத்தப்படாமல் உள்ள வாராக்கடன், வட்டி, மற்றும் தவணைகள் போன்ற பிரச்சனைகளால் வங்கித்துறை மோசமாகப் பாதிப்படைந்துள்ளது, எனவே வங்கிகள் தற்போது கடன் கொடுத்தலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றன.

இதனுடன் கடன் வாங்குபரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்று முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் வங்கிகள் கடன் விண்ணப்பங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் ஆராய்கின்றது.

மக்கள் எண்ணம்

மக்கள் எண்ணம்

சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் மற்றும் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு கனவு இல்லத்தைப் பெற வேண்டுமென்ற மக்களின் ஆர்வத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஆகியவை வீட்டுக் கடனுக்கான தேவையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனித்துக் கொள்ள வேண்டியவை

கவனித்துக் கொள்ள வேண்டியவை

ரியல் எஸ்டேட் துறையின் நிபுணர்களின் கருத்துப்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் (GDP) வீட்டுக்கடன்கள் கிட்டத்தட்ட 9% பங்களிக்கிறது.

கடன் வாங்குபவர்கள் வங்கிகளிலிருந்து வீட்டுக்கடன் ஒப்புதலை எளிதாகப் பெற பின்வரும் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்:

 

நன்மதிப்பு:

நன்மதிப்பு:

பெரும்பாலும் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு விண்ணப்பதாரர்களின் நன்மதிப்பை (Credit score) பார்க்கின்றன, எனவே அந்த மதிப்பெண் தான் விண்ணப்பதாரரின் கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கங்களைப் பற்றி வங்கியிடம் பேசுகிறது.

வழக்கமாக 750 க்கும் மேல் இருக்கும் நன்மதிப்பு (Credit score) நல்ல மதிப்பெண்ணாகக் கருதப்படுகிறது. எனவே வீட்டுக்கடன் கோருபவர்கள் ஒரு கடனுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக நன்மதிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பராமரிக்க வேண்டும்.

 

வயது மற்றும் தகுதிக்கான கட்டளை விதிகள்:

வயது மற்றும் தகுதிக்கான கட்டளை விதிகள்:

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வங்கிகளின் தகுதி கட்டளை விதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் வெவ்வேறு வங்கிகள் பலவகைத் தகுதி கட்டளை விதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை வங்கி, கடன் விண்ணப்பதாரருக்குக் கடன் கிடைக்கப்பெறுவதற்குப் போதுமான பொருத்தங்கள் இல்லையென்று கண்டறிந்தால், அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

 

நிலையான வருமான ஆதாரம்:

நிலையான வருமான ஆதாரம்:

கடன் விண்ணப்பதாரர் தனியார் துறையில் வேலை செய்பவராக இருந்தால், வங்கி பொதுவாக அதே நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து வேலை செய்துவரும் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேர்ந்தெடுக்கிறது.

உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாகக் கருதப்படும் இரசாயன தொழிற்சாலைகளில் பணிபுரியும் விண்ணப்பதார்களுக்குக் கடன் ஒப்புதல் பெறும் வாய்ப்புகள் குறைகிறது.

 

பழைய கட்டடங்களுக்குக் கடன் கோருதல்:

பழைய கட்டடங்களுக்குக் கடன் கோருதல்:

சில வங்கிகள் சம்பந்தப்பட்ட சொத்து பழமையானது என்று கண்டறிந்தால் அவர்கள் கடன் ஒப்புதல் அளிப்பதில்லை. அத்தகைய கடன் விண்ணப்பங்களுக்கு விண்ணப்பதாரர் பெரிய தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும், இல்லையென்றால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+