மெடிக் கிளைம் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன..??

மெடிக் கிளைம் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன..??

இன்று மக்கள் மத்தியில் உடல்நல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் ஒன்று வியாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, மற்றொன்று மருத்துவச் சேவைகளின் கட்டணங்கள் கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளது.

இத்தகைய நிலையில் தான் மருத்துவப் பாதுகாப்புக்கு உதவும் காப்பீடும் பிரபலம் அடைந்துள்ளது.

மெடிக்ளைம் பாலிசி

மெடிக்ளைம் பாலிசி

மெடிக்ளைம் பாலிசி என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் காப்பீட்டுதாரருக்கு திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதும் அல்லது விபத்துக்களினால் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் செலவுகளுக்கான கட்டணங்களை வழங்குகிறது.

காப்பீட்டிற்குப் பணம்

காப்பீட்டிற்குப் பணம்

மெடிக்ளைம் பாலிசி திட்டத்தின் கீழ், காப்பீட்டுதாரர் மருத்துவமனையில் பெற்ற மருத்துவச் சிகிச்சைகள் அல்லது மருத்துவமனையில் தங்கி பெற்ற உள்ளிருப்புச் சிகிச்சைகள் போன்றவற்றிற்கான காப்பீட்டிற்குப் பணம் செலுத்துகிறார்.

தனியாக அல்லது குடும்பம்

தனியாக அல்லது குடும்பம்

மெடிக்ளைம் பாலிசியை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் தனித்தனியாகவும் அல்லது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு கூட்டாகவும் வாங்கலாம்.

தனிநபர் திட்டம்

தனிநபர் திட்டம்

தனிநபர் திட்டத்தில், ஒவ்வொரு தனி நபரும் ஒரு குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகைக்குத் தனியாகக் காப்பீடு செய்யப்படுகிறார், அதே சமயத்தில், ஒரு குடும்ப மிதவை திட்டத்தில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் முன்கூட்டி முடிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காப்பீடு பெறுகின்றனர்.

2 வகைக் காப்பீடுகள்

2 வகைக் காப்பீடுகள்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இரண்டு வகைக் காப்பீடுகள் உள்ளன. அவை பணமில்லா முறை மற்றும் பாலிசிதாரர் முன்கூட்டி செலவு செய்த பணத்தைக் காப்பீட்டு நிறுவனம் திருப்பிக் கொடுத்து ஈடு செய்யும் முறை என்பதாகும். இந்த இரண்டு வகைக் காப்பீட்டுத் திட்டங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

பணமில்லா முறை

பணமில்லா முறை

பணமில்லா காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு எந்த விதமான முன் கட்டணத்தையும் செலுத்தாமல் சிகிச்சை பெற அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

காப்பீட்டு நிறுவன இணைப்பில்

காப்பீட்டு நிறுவன இணைப்பில்

இந்த வகைத் திட்டத்தில், நோயாளி காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கு ஆன கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பகுதியாகவோ அல்லது சிகிச்சைக்கான முழுத் தொகையையோ நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தி விடுகிறது.

அத்தியாவசிய தகவல்கள்

அத்தியாவசிய தகவல்கள்

இந்தப் பணமில்லா திட்டத்தின் பயன்களைப் பெற பாலிசிதாரர் அனைத்து அத்தியாவசிய தகவல்களுடன் முன் அங்கீகார படிவத்தை நிரப்பிப் பின்பு அதைக் காப்பீட்டு நிறுவனத்திற்கோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு நிர்வாகிகளுக்கோ சமர்ப்பிக்க வேண்டும்.

செலவான பணத்தைத் திருப்பியளிக்கும் முறை

செலவான பணத்தைத் திருப்பியளிக்கும் முறை

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், தொடக்கத்தில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் மற்றும் சிகிச்சைக்கான செலவுகளுக்கும் தனது சொந்த பணத்திலிருந்து மருத்துவமனைக்குக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். பின்பு, செலவுகளைத் திரும்பப் பெற காப்பீட்டு நிறுவனத்திலிருந்து ஈடு செய்யும் பணத்திற்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

செலவு மற்றும் கட்டண சீட்டுகள்

செலவு மற்றும் கட்டண சீட்டுகள்

செலவுகளுக்கு ஈடு செய்யும் பணத்திற்குத் தாக்கல் செய்ய, காப்பீட்டுதாரர் அனைத்து மருத்துவமனை செலவு சீட்டுகள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகள், மருத்துவமனையில் அல்லது வெளிப்புற மருந்தகங்களில் மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் ஆகியவற்றைக் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தகவல் அளிக்க வேண்டும்

தகவல் அளிக்க வேண்டும்

இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் பயன்களைத் தடையின்றி முழுமையாகப் பெற, பாலிசிதாரரோ அல்லது அவரது பிரதிநிதியோ நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அல்லது அனுமதிக்கப்பட்ட அந்த நேரத்திலேயோ பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பற்றிக் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு தகவலை தெரியப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+