வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான 7 முதலீடு திட்டங்கள்..!

குழந்தைப் பருவத்தில் உண்டியலில் சேமிக்கப் பழகியவர்கள் பெரியவர்களானதும் கூடுதல் ஆதாயம் வேண்டி வட்டியுடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் உடையவர்களாக மாறுகின்றனர்.

அவர்களின் தேவைகள் அவசியங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு பல போலியான சேமிப்பு நிறுவனங்கள் அவர்களின் முதலீடுகளைக் கபளீகரம் செய்வதிலிருந்து தடுத்து அவர்கள் பாதுகாப்பாக எவ்வாறு முதலீடு செய்வது என்பது பற்றியே நாம் இங்குக் காண உள்ளோம்.

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு என்பது ஆபத்து இல்லாத நிலை அல்லது மிகக்குறைந்த அளவிலான ஆபத்து உள்ள நிலையில் செய்யப்படும் முதலீடு ஆகும். இவை பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், ஆபத்துக்களைச் சந்திக்க விரும்பாதவர்களுக்கானதாகும். ஆபத்துக்கள் ஏதும் இல்லாவிட்டால் நல்ல விளைவுடன் கூடிய பயன் ஏதும் இருக்காது என்ற பொதுவான தவறான எண்ணம் பரவலாக உள்ளது. சந்தையில் சிறந்த விளைவைத் தரக்கூடிய பல்வேறு முதலீடு சந்தர்ப்பங்களும் அவற்றுடன் வரி தள்ளுபடி ஆதாயங்களும் உள்ளன. அவற்றில் எவற்றை ஏற்பது, எவற்றைத் தவிர்ப்பது என்று கண்டறிய வேண்டும். சில முதலீடுகள் மிக அதிக லாபத்தையும், சில அப்படியான உயர்வற்ற நிலை இல்லாதனவாகவும் உள்ளன.

இந்தியாவில் ஆபத்துக்களற்ற பல்வேறு முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் சில மற்றவற்றைவிடக் கவர்ச்சிகரமானதாகவும் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றிக் கீழே காண்போம்.

 

நிரந்தர வைப்புத் தொகை

நிரந்தர வைப்புத் தொகை

ஆபத்துக்களற்ற முதலீடு என்றவுடன் நிரந்தர வைப்புத் தொகை முதலீடு தான் முதல் வாய்ப்பாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்படும். அவை சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது 7 முதல் 8 % வரையிலான கூடுதல் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். அதிக வரிச் சேமிப்பினை எதிர்பார்த்தால் முதிர்வு தொகை குறையும்.

தொடர் வைப்புத் தொகை

தொடர் வைப்புத் தொகை

மாதாந்திர ஊதியம் பெறுவோருக்கு இருப்பதிலேயே சிறந்த திட்டம் இதுவாகத்தானிருக்கும். மொத்தமாகச் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் மாதா மாதம் சிறுக சிறுக சேமிக்க உதவும். சில ஆண்டுகள் கழித்து மிகப் பெரிய தொகையாக வளர்ந்திருக்கும். நிரந்தர வைப்பினைப் போன்றே அவையும் வரிகளுக்குட்பட்டவைதான்.

அஞ்சலகச் சேமிப்பு

அஞ்சலகச் சேமிப்பு

இவை 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை வெவ்வேறு அளவிலான திட்டங்களைக் கொண்டது. இப்போதுள்ள சந்தையில் 5 ஆண்டு முதலீட்டுக்கு 7.8 % வட்டி கிடைக்கும் சிறந்த திட்டம் இதுவாகும். அஞ்சலகச் சேமிப்புகளில் 5 ஆண்டுகளுக்குட்பட்ட சேமிப்புகளுக்கு வரிச் சலுகைகள் உண்டு.

நிரந்தர முதிர்வு திட்டங்கள்

நிரந்தர முதிர்வு திட்டங்கள்

இந்தத் திட்டங்கள் 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை செய்யும் முதலீடுகளுக்கானவையாக உள்ளன. இவற்றில் செய்யப்படும் முதலீடுகள் அரசால் பங்கு சந்தை உறுதிப் பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு வைக்கப்படுகின்றன. இவற்றில் முதலீடு செய்யும்போது AAA மதிப்பிடப்பட்ட திட்டங்களிலேயே சேர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பரஸ்பர நிதி கடன் திட்டங்கள்

பரஸ்பர நிதி கடன் திட்டங்கள்

இத்திட்டத்தின் கீழ் உங்கள் முதலீடுகள் பெரிய வர்த்தக நிறுவனங்களின் பத்திரங்கள் மற்றும் அரசின் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இவற்றில் குறிப்பிட்ட கால வரையறை ஏதும் இல்லை. உங்கள் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் நீண்ட கால முதலீடுகளே சாதகமானவையாக இருக்கும்.

நிறுவன முதலீடுகள்

நிறுவன முதலீடுகள்

வங்கி முதலீடுகளை விடச் சிறிதளவு அதிகமாகச் சந்தை ஆபத்துக்களையும், கூடுதல் வட்டியுடன் கிடைக்கக் கூடியவையாக இருக்கும். ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டி AAA மதிப்பிடப்பட்ட நிறுவனங்களிலேயே முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவையும் நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்றவை.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

இவை 8 முதல் 9 % வரையிலான உயர்ந்த வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான நீண்ட கால முதலீடுகளாகும். இவற்றில் ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை ஓராண்டிற்குச் சேமிக்கலாம். இதில் கடன், திரும்ப -பெறுதல், நீடித்தல் முதலிய பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். இவை சந்தையில் உள்ளவற்றிலேயே சிறந்தவையாகவும், அதிக வரிச் சேமிப்பு கொண்டவையாகவும் உள்ளன.
முதலீடுகள் பணத்தின் பாதுகாப்பு மற்றுமின்றி உங்களின் பொருளாதாரத்தை வளர்த்து நீங்கள் வருமானம் ஏதுமின்றி இருக்கின்ற காலத்தில் உங்கள் தேவைகளுக்குக் கை கொடுப்பவையாகவும் உள்ளன. உங்களின் ஒய்வு நாள்களில் உங்களின் உற்ற துணைவனாகவும் இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+