இந்தியாவில் சொத்துக்களை வாங்கும் முன் என்ஆர்ஐ தெரிந்துகொள்ள வேண்டியவை..!

என்ஆர்ஐ-களைப் புலம் பெயர்ந்த இந்தியர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது இந்தியாவை வசிப்பிடமாகக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் அழைக்கலாம்.

அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்களுக்கு உடைமையாகச் சொத்துக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனாலேயே இளைஞர்களும் சரி, அங்கேயே செட்டிலாகி விட்டவர்களும் சரி தங்கள் வருமானத்தை இந்திய சொத்துக்களில் முதலீடு செய்து தங்களது ஒய்வு காலத்திற்குப் புகலிடமாக ஒரு வீடு கட்டவும் ஆசைப்படுகின்றனர்.

கடல் கடந்து வாழும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது உள்ள சாதகப் பாதக அம்சங்கள் குறித்தே பார்க்கப்போகிறோம்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட ஒழுங்குமுறைகள்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட ஒழுங்குமுறைகள்

நீங்கள் ஒரு புலம் பெயர்ந்த இந்தியராக இருந்து, இந்தியாவில் ஒரு அசையா சொத்து வாங்க விரும்பினால் அது தொடர்பான சட்ட விஷயங்கள் குறித்த தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.

இந்தியாவில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் அசையா சொத்து வாங்குவதற்கான சட்ட அனுமதிகளை அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களும், பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்களும் இந்திய சொத்துக்களில் முதலீடு செய்யும்போது உங்களது உரிமைகள், சட்ட வாய்ப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டிருந்தீர்களானால் அவற்றினால் ஏற்படும் வழக்கு தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபட்டிருக்க முடியும்.

 

என்ஆர்ஐ-கள் முதலீட்டில் ஆர்பிஐ-யின் பங்கு

என்ஆர்ஐ-கள் முதலீட்டில் ஆர்பிஐ-யின் பங்கு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ஆர்ஐ களை இந்தியாவின் குடியிருப்புகள் அல்லது வர்த்தகச் சொத்துக்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கும் அதே நேரத்தில் அவர்களை இந்தியாவின் விவசாய நிலங்களிலோ அல்லது சாகுபடி நிலங்களிலோ முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை.

எந்த ஒரு என்ஆர்ஐ யும் இந்தியாவின் வீடுகள் மற்றும் வர்த்தகச் சொத்துக்களில் முதலீடு செய்ய ஆர்பிஐ-யிடம் சிறப்பு அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

 

கட்டுப்பாடு ஏதுமில்லை

கட்டுப்பாடு ஏதுமில்லை

ஒரு என்ஆர்ஐ எவ்வளவு அசையா சொத்துக்கள் வைத்திருக்கலாம் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை. முதலீட்டாளர்கள் அவர்கள் விரும்பும் அளவிற்குச் சொத்துக்களை வாங்கலாம். எந்த விதமான வருமான வரி விதிமுறைகளும் இதற்கு இல்லை.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்கள்

ஒரு என்ஆர்ஐ முதலீட்டாளர் பண்ணை நிலங்களிலோ அல்லது விவசாய நிலங்களிலோ முதலீடு செய்ய விரும்பினால், ரிசர்வ் வங்கியின் சிறப்பு அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி உள்ளூர் நிலங்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் ஆகியவற்றின் முடிவுகளைப் பொறுத்தே வழங்கப்படும்.

 

கூட்டு முதலீடு

கூட்டு முதலீடு

இந்தியாவை வசிப்பிடமாகக் கொள்ளாதவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து முதலீடு செய்யும்போது அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமே என்ஆர்ஐ களாக இருக்கலாம்.

தொடர் உரிமையாளர்

தொடர் உரிமையாளர்

நீங்கள் ஒரு என்ஆர்ஐ ஆக மாறுவதற்கு முன் உங்கள் பெயரில் உரிமை பெற்றிருந்த ஒரு விவசாய நிலத்தைத் தொடர்ந்து உங்கள் பெயரிலான உரிமையாகத் தொடர்ந்து பராமரிக்கலாம். ஆனால், என்ஆர்ஐ ஆன பிறகு அவ்வாறான அனுமதி உங்களுக்குக் கிடையாது.

வரி விதிப்பு

வரி விதிப்பு

இந்தியாவை வசிப்பிடமாகக் கொள்ளாத முதலீட்டாளர்கள் அவர்கள் சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் பெறும்போது இந்தியாவின் வரிச் சட்டங்களுக்குட்பட்டு வரிகளைச் செலுத்தி பயன் அடையலாம்.

பவர் ஆப் அட்டர்னி

பவர் ஆப் அட்டர்னி

ஏதாவதொரு நபர் இந்தியாவிற்குச் சொத்துத் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வர முடியாத நிலைமையில் இருந்தால் அவர்களின் விற்றல், வாங்குதல் முயற்சிகளுக்கு இன்னொரு நபருக்கு அனுமதி அளிக்கும் பவர் ஆப் அட்டர்னி முறையைப் பயன்படுத்தி ஈடுபடலாம்.

பாராட்டு..

பாராட்டு..

இந்தியர்களின் வரிப்பணத்தில் படித்து அயல்நாட்டில் உழைத்து இந்தியாவையே மறப்பவர்களுக்கு மத்தியில் சொந்த மண்ணை நினைத்துத் தங்கள் வருமானத்தை இங்கு முதலீடு செய்து இந்த நாட்டிற்கு வரி செலுத்த விரும்பும் சில என்ஆர்ஐ களை பாராட்டி வரவேற்கலாம்தானே?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+