நிகரச் சொத்து மதிப்பு என்பது குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு பங்கின் விலை ஆகும்.
மும்பை: 21 வருடங்களுக்கு முன்பு 1995-ம் ஆண்டு முதல் முறையாக 1,000 மதிப்பில் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் 1 லட்சம் ரூபாய் முதலீடு.. 21 வருடத்தில் 1 கோடியாகி இருக்கும்.
100 மடங்கு உயர்வு
10 ரூபாய் முதல் 1,000 ரூபாயாக இருந்து நிகரச் சொத்து மதிப்பு 21 வருடத்தில் 100 மடங்கு அதிகரித்துள்ளது என்றார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் சிக்கா.
நிகரச் சொத்து மதிப்பு
நிகரச் சொத்து மதிப்பு என்பது குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு பங்கின் விலை ஆகும்.
மிட் கேப் சார்ந்த பங்கு
ரிலையன்ஸ் க்ரோத் ஃபண்டு ஒரு மிட் கேப் சார்ந்த பங்கு முதலீடு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி, தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் துவக்கக் காலத்தில் இருந்து முதலீடு செய்து வந்தவர்கள் இன்று 100 மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளனர்.
சொத்துக்களின் அடிப்படை மதிப்பு
இந்த முதலீடு திட்டம் 6 லட்சம் முதலீட்டாளர்களுடன் 5,000 கோடிக்கும் அதிகமாகக் கார்பஸ் பெற்றுள்ளது. மார்ச் மாத காலாண்டு வரை ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படை சொத்து மதிப்பு 2,10,890 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications