30 வயது உடைவார்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய 6 முக்கிய முதலீடுகள்..!

உங்களுக்கு 30 வயது ஆகின்றதா? இது உங்கள் நிதி எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டிய சரியான நேரமாகும். நீங்கள் 30 வயதினை அடைந்து இருக்கும் போது ஒரு நல்ல வேலையில் இருக்கலாம், திருமணம் செய்துகொள்ளலாம், பிள்ளைகளும் பெற்றிருக்கலாம்.

இந்த வயதில், நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு முதலீடு செய்ய வேண்டும், ஒரு வீடு, கார் வாங்க அல்லது உங்கள் ஓய்வூதியத்திற்காகப் பணத்தைச் சேமிக்க வேண்டும். எனவே இங்கு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முதலீடு உத்திகளைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்காக இப்போதே திட்டமிடுங்கள்.

மாதாந்திர முதலீடுகளை அதிகரியுங்கள்

மாதாந்திர முதலீடுகளை அதிகரியுங்கள்

30 ஆண்டுகளில் நீங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்ட பணத்தைப் பரஸ்பர நிதிகள் மற்றும் பிற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும், அதனால் உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களுக்காகப் பொருத்தமான முதலீட்டுத் திட்டங்களை அவர் உங்களுக்குப் பரிந்துரைக்க முடியும். சிறிய அளவு முதலீடு நீண்ட கால நிதி திட்டங்களில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

சம்பளத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்

சம்பளத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்

உங்கள் சம்பளம் கடைசியாக எப்போது உயர்த்தபட்டுள்ளது? இது சம்பள உயர்வு பெறும் நேரம். கண்ணியமாக இருந்து உங்களுடைய அதிகாரியிடம் ஒரு உயர்விற்காகக் கேட்கவும், இந்த உயர்வுக்கு நீங்கள் ஏன் தகுதிவாய்ந்தவர் என்று பல காரணங்களைப் பட்டியலிடுங்கள். மேலும், உங்களுக்குக் கிடைக்கும் பிற வாய்ப்புகளைச் சோதிக்கவும்.

அத்தியவசிய அவசரங்களுக்காக நிதியை வைத்துக்கொள்ளுங்கள்

அத்தியவசிய அவசரங்களுக்காக நிதியை வைத்துக்கொள்ளுங்கள்

வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதால் எப்போது வேண்டுமானாலும் என்ன நேரிட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அவசர நிதி உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, ஆனால் அது ஒரே நாளில் ஆயத்தப்படுத்த முடியாது. வேலை இழப்பு, மருத்துவ அவசரம், மரணம் போன்ற நெருக்கடி சூழ்நிலைகளில் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு உங்கள் பண முதலீடுகளை நீங்கள் திட்டமிட வேண்டும். உங்களிடம் போதுமான நிதி சேமித்து வைத்திருந்தால், இந்தச் சூழ்நிலைகளை நீங்கள் எளிதில் கடந்துவிட முடியும்.

இலக்குகளை அறிந்து கொள்ளுங்கள்

இலக்குகளை அறிந்து கொள்ளுங்கள்

எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் இலக்குகளை வைத்திருப்பார்கள். நீங்கள் அதை நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளாக வகைப்படுத்த வேண்டும். குழந்தைகள் பள்ளி, நகை வாங்குவது உங்கள் குறுகிய கால நிதி இலக்குகளாக இருக்க முடியும். வீடு காட்டுவது, ஒரு கார் வாங்குவது நீண்ட காலம் பயனுள்ள இலக்குகளாக இருக்கும். இந்த நீண்ட கால மற்றும் குறுகிய கால நிதி இலக்குகளின் படி உங்கள் முதலீடுகளைத் திட்டமிடுங்கள். இது அதற்கேற்ப முதலீட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த உதவுகிறது.

உங்கள் கடன் வரம்பைக் கட்டுப்படுத்துங்கள்

உங்கள் கடன் வரம்பைக் கட்டுப்படுத்துங்கள்

கிரெடிட் கார்டுகள் மிகவும் உதவியாக இருக்கும், அவை மிகவும் கவர்ச்சியானவை. இப்போது பணம் கடனாக வாங்குவது கடினமாக இருந்தாலும் சில மாதங்களுக்குள் எப்படியோ மலிவாக மாறும்.

ஒரு உயில் உருவாக்குங்கள்

ஒரு உயில் உருவாக்குங்கள்

உங்கள் மரணத்திற்கான திட்டமிடல் செயல்முறை மற்றும் உங்கள் சொத்து ஆவணங்களை ஒழுங்குபடுத்துவது ஒரு கடினமான விஷயமாகும். உங்கள் உயில் திட்டமிட 50வயது வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளையும் பற்றி அறியட்டும். உயில் ஆனது எதிர்பாரா மரணத்தின் காரணமாக உங்கள் குடும்பத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக வைக்கலாம். உங்கள் சொத்துகள் வளரும் போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உயிலைப் புதுப்பிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+