மாணவர்களே ‘கல்வி கடன்’ பெற முடியவில்லையா? கல்லூரி கட்டணங்களை சமாளிப்பது எப்படி?

தங்கள் வாழ்க்கையில் மக்கள் பெறும் சிறந்த அனுபவங்களில் ஒன்றாகப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கையில் இருந்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளில் கலந்துகொள்வதால் மாணவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரி படிப்புகளின் போது அதிகச் செலவினங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். பொதுவாகக் கல்வி கட்டணம், கல்லூரி அல்லது படிப்புக் கட்டணம், பயணச் செலவுகள், விடுதி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் எனப் பட்டியல் நீளும். அதற்குத் தங்களது பட்ஜெட்டினை அவர்கள் போட வேண்டியது அவசியம்.

செலவுகளைத் தவிர்க்க முடியாது

செலவுகளைத் தவிர்க்க முடியாது

பெரும்பான்மையான மாணவர்கள் தங்களுக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் இது போன்ற செலவுகளை அவர்களால் தவிர்க்க முடியாது.

எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?

எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?

எனவே, இந்தப் பள்ளிக்கூடங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகள் ஆகியவற்றின் போது இந்தச் செலவினங்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மலிவானது அல்ல

மலிவானது அல்ல

கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்க்கை ஒன்றும் மலிவானது அல்ல. கல்விக்கான செலவினம் ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

கல்வி கடன்

கல்வி கடன்

அரசு வழங்கும் கல்வி கடனானது மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி/கல்லூரிகளுக்குப் பணம் செலுத்துவதற்கு உதவுவதற்காக ஒரு சிறந்த வழியாகும்.

தாங்கலே பார்த்துக்கொள்ளலாம்

தாங்கலே பார்த்துக்கொள்ளலாம்

தங்களது செலவுகளைப் பல நேரங்களில் தாங்கலே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு வழிகள் எல்லாம் உள்ளன. கல்லூரிக்குச் செல்ல கடணகள் தேவைப்படும் போது அதற்கும் மாணவர்களுக்குப் பல வாய்ப்புகள் உள்ளன.

பல வகையான கல்விக்கடன்

பல வகையான கல்விக்கடன்

கல்விக் கடன் என்பதும் உலகம் முழுவதும் மாணவர்கள் பெற முயலும் ஒரு சேவையாகும். பல வகையான கல்விக்கடன் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி மாணவர்களால் தங்கலது மேற்படிப்பைத் தொடர் முடிகின்றது.

வங்கிகள்

வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும் மாணவர்களுக்கு உள்ள பணச் சிக்கலை தவிர்க்க உதவுகின்றன.

சில ஆக்கப்பூர்வமான வழிகள்

சில ஆக்கப்பூர்வமான வழிகள்

மாணவர்களுக்குக் கடனை தவிர்க்கவும் சந்தையில் பல வழிகள் உள்ளனவா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், உள்ளது. ஆனால் அதனை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கல்விக் கடன் மட்டும் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்லூரி கட்டணத்தினைச் செலுத்த சில ஆக்கப்பூர்வமான வழிகள் உள்ளன.

பின்வருபவை எல்லாம் தான் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கான சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகள் ஆகும்.

 

உதவி தொகை

உதவி தொகை

நிதி சார்ந்த உதவிகள் பல மாணவர்களுக்கு உதவும், அதிலும் முக்கியமான வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு. உதவித் தொகை மாணவர்களுக்கு இதுபோன்ற உதவியைச் செய்யும்.

ஸ்காலார்ஷிப் சலுகைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறந்த நிதி சார்ந்த உதவியாகும். மாணவர்களுக்கு உதவித் தொகை பெறக் கட்டுரை போன்றவற்றை எழுது வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

அந்தக் கட்டுரை உதவித் தொகை குறித்ததாக இருத்தல் வேண்டும். மாணவர்களுக்குக் கல்லூரி படிப்பின் போது நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், படிப்பு சமந்தமான ஆய்வுகள், சாதனைகள் போன்றவற்றை வைத்து உதவித் தொகை கூடுதலாக அளிக்கப்படும்.

எனவே மாணவர்களுக்கு உதவித் தொகை பெறப் படைப்பாற்றலும் முக்கியம் ஆகும்.

 

பகுதி நேர வேலை வாய்ப்பு

பகுதி நேர வேலை வாய்ப்பு

கல்வி கட்டணம், கல்வி ஆய்வுகள் கட்டணம், விடுதி கட்டணம், மற்றும் வாழ்க்கைக்கான செலவு அதிகரிப்பு என, மாணவர்கள் தங்கள் செலவினங்களைச் சந்திக்கக் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும்.

எனவே மாணவர்களுக்குக் கல்லூரி படிப்பைத் தொடரும் போது அவர்கள் செலவை சமாளிக்க அவர்களைச் சுற்றி ஏதேனும் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும். ஏன் தங்களது கல்லூரியில் இது போன்று வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் ஆராய்ந்து கண்டறியலாம்.

இது போன்று கிடைக்கும் வேலை வாய்ப்பினை வைத்தும் மாணவர்களால் தங்களது அனுபவத்தினை வளர்த்துக்கொள்ள உதவும்.

 

நன்கொடை

நன்கொடை

நன்கொடை என்பது உதவித் தொகையினை விட வித்தியாசமானதாகும். இதனைப் பெற மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பில் மெரிட் சான்றிதழ்களைப் பெற்று இருக்க வேண்டும். அப்போது நன்கொடை அளிக்க விரும்புபவர் உங்களது குழ்நிலையைப் புரிந்துகொண்டு உதவுவார்கள்.

அரசு கல்லூரிகள்

அரசு கல்லூரிகள்

அரசு கல்லூரிகளில் தங்களது படிப்பை மாணவர்கள் தொடர விரும்பும் போது கல்விக் கடன் பெறாமல் படிக்க முடியும்.

அரசு கல்லூரிகளில் படிக்கும் போது குறைந்த கட்டணத்தில் படிப்பைத் தொடர முடியும், அதே நேரம் உதவித் தொகைகளும் கிடைக்கும்

 

ஹானர்ஸ் பிரோகிராம்

ஹானர்ஸ் பிரோகிராம்

உங்களது படிப்பில் நல்ல ரெக்கார்டினை நீங்கள் வைத்து உள்ளீர்கள் என்றால் ஹானர்ஸ் பிரோகிராம்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிறையக் கல்லூரிகள் ஹானர்ஸ் பிரோகிராம்களை அளிக்கின்றனர். இதன் மூலம் கல்லூரியில் நீங்கள் படிப்பை தொடரும் போது உங்கள் கல்லூரியே கல்வி கட்டணம், புத்தகம் கட்டணம் மற்றும் வேறு சில கட்டணங்களையும் ஏற்கும்.

குறைந்த கட்டணம் உள்ள கல்லூரிகள்

குறைந்த கட்டணம் உள்ள கல்லூரிகள்

குறைந்த கல்வி கட்டணம் உள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும், அதே நேரம் நல்ல கல்லூரியாக உள்ளதா என்பதையும் ஆராய்ந்து சேர வேண்டும். இதனால் உங்களது செலவுகள் பெறும் அளவில் குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+