ஓய்வு காலத்திலும் உங்கள் வருமானத்தை உயர்த்துவது எப்படி?

பணி ஓய்வு பெற்ற பிறகான வாழ்க்கை, வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கச் சிறந்த காலமாகும். நீங்கள் விரும்புவதை எல்லாம் செய்ய உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். இனி வேலை எதுவும் செய்யப் போவதில்லை என்பதால் வாழ்க்கை நடத்த போதுமான அளவு வருமானத்தைப் பெறும் வழிகளை நமக்கு நாமே அமைத்துக் கொள்ள வேண்டும்.

பணி ஓய்வு காலத்தில் தான் பெரும்பாலும் உங்களுக்கு இன்னும் மிக அதிகமான வருமானத்தின் தேவை வரக்கூடும். வருமானம் போதாமல் நீங்கள் போராடும் போது, உங்கள் வங்கிப் பண இருப்பை உயர்த்த நிறைய விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன.

பணி ஓய்வு பெற்ற காலத்தில் உங்கள் வருமானத்தை உயர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுக்கு உரிமையானதைப் பெறுங்கள்.

1. உங்களுக்கு உரிமையானதைப் பெறுங்கள்.

மூத்த குடிமக்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய வரம்பால் வருமானங்களும் சலுகைகளும் கிடைக்கின்றன. நிறைய முதலீட்டுத் திட்டங்களில் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்குச் சிறப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்தச் சலுகையால் கிடைக்கும் நற்பயன்கள் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கப் பெறுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. ஒரு பகுதி நேர வேலையைப் பெறுங்கள்.

2. ஒரு பகுதி நேர வேலையைப் பெறுங்கள்.

ஓய்வுபெறுதல் என்பதற்கு உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம் அல்ல. நீங்கள் முழுமையாக வேலை செய்வதை நிறுத்தி விடத் தேவையில்லை. உங்கள் பகுதிநேர வேலையிலிருந்து வரும் வருமானம் நீங்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்ய நிதி சேகரிப்பதில் உங்களுக்கு உதவியாக இருக்கும். தோட்ட வேலை, கை வேலைப்பாடுகள், விவசாயம், பண்ணைத் தொழில், சமையல் போன்ற உங்கள் மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்குகளை வருமானத்தைப் பெற்றுத் தரும் பகுதி நேர வேலையாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு பெற்ற காலத்தில் ஏற்படும் மனச்சலிப்பைத் தவிர்க்கலாம்.

3. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து கடன் பெறலாம்.

3. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து கடன் பெறலாம்.

உங்களிடம் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இருந்தால், உங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீங்கள் கடனுதவி பெறலாம். முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அல்லது உலகளாவிய பொது ஆயுள் காப்பீட்டுத் திட்டம் போன்ற நிரந்தரக் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தால் மட்டுமே இந்த வசதி வேலை செய்யும். நீண்ட காலக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தத் தேர்வை நாம் பெற முடியாது. உங்களைச் சார்ந்து யாரும் இல்லையென்றால் அல்லது உங்கள் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவிட்டிருந்தால், இது உங்களுக்கான சிறந்த தேர்வாகும்.

4. உங்கள் ஓய்வூதியத்தின் மதிப்பை உயர்த்துங்கள்.

4. உங்கள் ஓய்வூதியத்தின் மதிப்பை உயர்த்துங்கள்.

மாநில ஓய்வூதிய உரிமை பெற்றவர்கள் அரசாங்கத்தின் இந்தப் புதிய முனைமத்தின் வாயிலாக அவர்களது வாராந்திர சம்பளக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள முடியும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்த ஊதிய உயர்வை வாங்க நீங்கள் ஒட்டுமொத்த பெரிய அளவு தொகையை உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். உங்களுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் வேண்டும் மற்றும் நீங்கள் பங்களிப்பை செய்யும் போது எவ்வளவு வயதானவர் என்பதைப் பொறுத்து நீங்கள் செலுத்தும் தொகை அமையும்.

 

 

5. உங்கள் வீட்டில் நீங்கள் வசிக்கும் இடத்தைக் குறையுங்கள்.

5. உங்கள் வீட்டில் நீங்கள் வசிக்கும் இடத்தைக் குறையுங்கள்.

நீங்கள் சொந்த வீடு வைத்திருந்தால் உங்கள் வீட்டில் நீங்கள் வசிக்கும் இடத்தைக் குறைப்பதைப் பற்றி யோசிப்பது மற்றொரு தேர்வாகும். நீங்கள் வாழ்வதற்கு மலிவான சிறிய வீட்டை வாங்கலாம். அது பராமரிப்பதற்கும் மலிவானது. கூடுதல் பணத்தை நீங்கள் உங்களுடைய இதர தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பணி ஓய்வுக்குப் பிறகு கூட நீங்கள் ஒரு பெரிய குடும்ப வீட்டில் வாழ்வதைத் தொடர்ந்தால், உங்களிடம் நிறைய இடம் மற்றும் காலியான படுக்கையறைகள் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள சாமான்கள் மற்றும் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற மரச்சாமான்களுடன் கூடிய ஒரு அறையை வாடகைக்கு விடலாம். இது உங்களுக்கு ஒரு தொடர்ச்சியான வருமான ஆதாரத்தை வழங்கும்.

 

 

6. வாகன நிறுத்த இடத்தை வாடகைக்கு விடுங்கள்.

6. வாகன நிறுத்த இடத்தை வாடகைக்கு விடுங்கள்.

உங்கள் வீட்டில் உபரியாக உள்ள வாகன நிறுத்த இடத்தை வாடகைக்கு விடுவதும் பரிசீலிக்கத் தக்க ஒரு யோசனையாகும். இப்போதெல்லாம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களுக்குப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பொறுத்து, அலுவலகப் பகுதி, உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம், காபி கடை போன்ற இடங்கள் பலவற்றிற்கு அருகாமையில் உங்கள் வசிப்பிடம் இருந்தால், உங்கள் வீட்டில் காலியாக உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தை வாடகைக்கு விடுவதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+