உங்களுக்கான சிறந்த சேவை அளிக்கும் வங்கியை தேர்ந்தெடுப்பது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒரு புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? சிறந்த வங்கியைத் தேர்ந்தெடுப்பதும் சிறந்த வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுப்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது ஆகும்.

இந்த முடிவு உங்கள் மிகப்பெரிய நிதி சார்ந்த இலக்குகளை நிறைவேற்ற உதவுவதோடு மேலும் பெருமளவு கட்டணப் பணத்தைச் சேமிக்கவும் உதவும். நீங்கள் உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு அல்லது குறுகிய காலத்திற்கு வைப்பு நிதியாகச் சேமிக்க விரும்பினால், உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் ஒரு வங்கிக் கணக்கை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சிறந்த வங்கிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சேவைகள்

முதலாவதாக உங்கள் வங்கியிலிருந்து எந்த வகைச் சேவைகள் உங்களுக்கு வேண்டும் என்பதைப் பற்றித் தெளிவான ஒரு யோசனையை வைத்திருங்கள். ஒரு வங்கியைத் தேர்ந்தெடுக்கும் போது பின்வரும் சேவைகளை வழங்குகிறதா என்பதைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்: அவை ஈ - பேங்கிங், மொபைல் பேங்கிங், நேரடி வைப்பு நிதிகள் போன்ற சேவைகளாகும். இந்தச் சோதனைகளுக்குப் பிறகு எந்த வங்கி இந்தச் சேவைகளையும் மற்றும் சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறதோ அந்த வங்கியைத் தேர்ந்தெடுங்கள்.

2. அமைவிடம்

உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்க உங்களுக்கு விருப்பமா? வங்கி எங்கே அமைந்துள்ளது என்பதைச் சோதியுங்கள்? உங்கள் வீடு மற்றும் அலுவலகத்திற்கு அருகாமையில் அதன் கிளைகள் அமைந்துள்ளனவா? இது நீங்கள் மிகப்பெரிய பிரசித்தி பெற்ற வங்கியைத் தேர்ந்தெடுக்கிறீர்களா அல்லது தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கேற்ப வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் ஒரு சிறிய வங்கியைத் தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதைப் பொறுத்தது. தேசிய வங்கிகள் நாடு முழுவதும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் உங்களுடைய வங்கியை மிக எளிதாக அணுகலாம்.

3. கட்டணங்கள்

சில வங்கிகள் இணைய வழி வங்கி சேவைகள், கார்ட் வழியாகப் பணம் செலுத்துதல், மின்னணு பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்குக் கட்டணங்களை விதிப்பதில்லை. அதே நேரத்தில் இதர சில வங்கிகள் ஒவ்வொரு திருப்பத்திலும் அதன் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணங்களை விதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வங்கியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அந்த வங்கியின் கட்டண அட்டவணையை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சில வங்கிகள் அவர்களது ஆண்டு விழா மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இலவச சேவைக் கட்டணங்களை வழங்குகின்றன. சில வங்கிகள் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையைப் பராமரிக்குமாறு வலியுறுத்துகின்றன. சில வங்கிகள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையைக் கேட்பதில்லை.

வெவ்வேறு வங்கிகள் என்னென்ன கட்டணங்களை விதிக்கின்றன மற்றும் ஒவ்வொரு வங்கியின் கட்டணங்கள் எவ்வளவு என்பதை ஒப்பிட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

பல்வேறு கட்டணங்களின் பட்டியல்:

1) குறைந்த பட்ச நிலுவைத் தொகையைப் பராமரிக்காததற்கான கட்டணம்.
2) இணைய வங்கி போன்ற பணப் பரிமாற்றங்களைச் செயல்படுத்துதலுக்கான கட்டணங்கள்.
3) திரும்பப் பெறப்பட்ட காசோலைகளுக்கான கட்டணங்கள்.
4) செல்லாத காசோலைகளுக்கான கட்டணங்கள்.
5) இதர வங்கிகளின் ஏடிஎம் களை பயன்படுத்தியதற்கான கட்டணங்கள்.

4. தொடர்பு இணைப்புகள்

பெரிய அளவில் ஏடிஎம் மற்றும் சேவை மைய தொடர்பு இணைப்புகளைக் கொண்ட அல்லது கூடுதல் கட்டணங்களை வசூலிக்காத வங்கியில் கணக்கு தொடங்க விரும்புகிறீர்களா? நீங்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது எந்த வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை வழங்குகின்றன, அமெரிக்காவிற்கு வெளியே என்ன சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன, மேலும் அங்கு உங்கள் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுவீர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கண்டறிந்து கொள்ளுங்கள்.

5. வட்டி விகிதங்கள்

ஒவ்வொருவரும் தங்களது முதலீட்டிற்கு வருவாயைப் பெறவே விரும்புவார்கள். நீங்கள் வட்டியை ஈட்டித் தருவதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் தேடுகிறீர்கள் என்றால், அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிடுங்கள். எந்த வங்கி உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றதோ அந்த வங்கியைத் தேர்ந்தெடுங்கள்.

6. சட்டப் பூர்வ முறைமை

இறுதியான ஆனால் குறைவற்ற ஒரு ஆலோசனை, சட்டப்பூர்வமான ஒரு வங்கியைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். ஒரு பெரிய, பரவலாக அறியப்பட்ட வங்கியுடன் தொடர்பு வைத்துக் கொள்வது பாதுகாப்பான தேர்வாகும். நற்பெயர் கொண்ட வங்கிகளைத் தேர்ந்தெடுப்பது சுலபமாகும். சில சமயம் புகழ் பெற்ற பெரிய வங்கிகள் கூடத் தோல்வியடைகின்றன, ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் காப்பீடு உங்களைக் காக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank, வங்கி
English summary

How To Choose The Best Bank For You?

How To Choose The Best Bank For You?
Story first published: Thursday, July 6, 2017, 12:23 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns