சில மணி நேரம் ‘பார்ட் டைம் ஜாப்’ செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்கள் கைவசம் சிறிது ஓய்வு நேரம் இருந்தால் அந்த நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் நேரம் என்பது செல்வத்தைச் சம்பாதிக்கும் நேரத்தை இழப்பதாகப் பொருளாகும்.

பணம் சம்பாதிக்கப் பல்வேறு பாதைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதில் வேலை செய்யும் வாய்ப்புகள், பகுதி நேர வேலைகள், மற்றும் உங்கள் பொழுது போக்குகளும் அடங்கும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனை வைத்தே கூடுதல் பணத்தைச் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன.

இந்த வார இறுதியில் சில மணி நேரங்களிலேயே அதிகப் பணத்தைச் சம்பாதிக்கும் சில வழிகளின் இந்தப் பட்டியலை சரிபாருங்கள்.

உங்கள் பிளாஸ்மாவை தானம் செய்யுங்கள்

இந்த முறையைப் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. பிளாஸ்மா எனப்படும் ஊன்ம உயிர்ச்சத்து நீரை தானம் செய்வது இரத்ததானம் செய்வது போன்றதே ஆகும். இந்தச் செயல்முறைக்குச் சில நேரங்களில் 90 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால் ஒரு பிளாஸ்மா தான மையத்தை நீங்கள் கண்டறிந்தால் செயல்முறையை எளிதில் முடித்துவிடலாம்.

உபர் நிறுவனத்திற்கு வாகனம் ஓட்டுங்கள்

உங்களுக்குக் கார் ஓட்டத் தெரிந்திருந்தால் வார இறுதிகளில் சிறிது கூடுதல் பணத்தைச் சம்பாதிக்கும் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். மக்களில் சிலர் தனியார் கால் டாக்ஸி நிறுவனங்களுக்குச் சவாரி சேவைகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். உங்களுக்கு இந்த வேலையைத் தினமும் செய்ய விருப்பம் இல்லையென்றால் விடுமுறை நாட்களில் மட்டும் இந்த வேலையைச் செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்கலாம்.

ஃப்ரீலான்ஸ்

ஃப்ரீலான்சிங் எனப்படும் பகுதி நேரத் தனிப்பட்ட தற்காலிக எழுத்தாளர் பணியானது, திறமையான தரமான எழுத்தாளர்களுக்குப் பணம் சம்பாதிக்க ஒரு எளிமையான வழியாகும். நீங்கள் இதை இணையத்திலேயே செய்யலாம். பணியில் உங்களுக்கிருக்கும் திறமை, அனுபவம் போன்ற சுயவிவரங்கள் மற்றும் இணையத்தில் உங்கள் வெற்றி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் உங்களுக்குக் கதைகளையும் செய்திகளையும் எழுதும் பணிகளை ஒதுக்கீடு செய்கின்றன. ஒருமுறை இந்த எழுதும் பணி சேவைகளைச் செய்யத் தொடங்கிவிட்டால் நீங்கள் ஓரளவு கணிசமான பணத்தைச் சம்பாதிக்கலாம்.

வாடிக்கையாளர் சேவை

நீங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வல்லவராக இருந்தால், வாடிக்கையாளர் சேவைப் பணியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சில மணி நேரங்களில் பணம் சம்பாதிக்கலாம். வாடிக்கையாளர் சேவை வேலைகளில் அதிகாலை நேரங்கள், மாலை நேரங்கள் மற்றும் வார இறுதிகள் உங்கள் வேலையின் உச்சபட்ச நேரமாக இருக்கும். எனவே இது உங்கள் வழக்கமான தினசரி அலுவலக வேலைகளைப் பாதிக்காது.

விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்

உங்களிடம் ஒரு நல்ல கணினியும் தகவல் தொடர்பு திறமைகளும் இருந்தால், விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் எனப்படும் இணைய மெய்நிகர் உதவியாளராகப் பணிபுரிந்து சிறிதளவு பணத்தைச் சம்பாதிக்கலாம். இணைய மெய்நிகர் உதவியாளர்கள் நிறையப் பணிகளைச் செய்கின்றனர். முன்பதிவுகளைச் செய்து கொடுத்தல், மின்னஞ்சல்களைத் தட்டச்சுச் செய்து கொடுத்தல் மற்றும் விநியோகப் பொருட்களை வாங்குதல் போன்ற வேலைகளும் இதில் உள்ளடங்கும். நீங்கள் இந்த அனைத்து வேலைகளையும் வீட்டில் உட்கார்ந்தபடியே செய்யலாம்.

பேக்கேஜ் டெலிவரி

சரியான நேரத்தில் பொருட்களை விநியோகம் செய்யும் செயலிகளுடன் உங்களைத் தொடர்புப்படுத்திக் கொண்டு விநியோகம் தேவைப்படும் மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்யும் பணியைச் செய்யலாம். இந்த வேலை உங்களுக்குப் பணம் மற்றும் தள்ளுபடிகள் இரண்டையும் பெற்றுத் தருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Make Extra Money Within Few Hours

How To Make Extra Money Within Few Hours
Story first published: Wednesday, July 12, 2017, 16:05 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns