உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கப்பெறும் பரஸ்பர நிதிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், நீங்கள் விரும்பும் பங்குக் கலவை, பத்திரம், பணச் சந்தை நிதிகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பது சிறந்தது. ஒரு நிதித் திட்டத்தை வாங்குவதற்கு முன்னால், முதலீட்டாளர் முதலில் அவர் அல்லது அவளது இலக்குகளை அடையாளம் காண வேண்டியது கட்டாயமாகும்.

உங்கள் முதலீட்டு உத்திகள் என்ன என்பதைத் தீர்மானிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில பொதுவான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

பலவக்கைப்படுத்துங்கள்

பலவக்கைப்படுத்துங்கள்

உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள். வெவ்வேறு காப்பாவணங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் உங்கள் முதலீட்டைப் பரப்புங்கள். பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணப் பத்திர காப்பாவணங்கள் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன. ஒவ்வொரு முதலீடும் வெவ்வேறு விதமான சாதகங்களையும் பாதகங்களையும் வழங்குகின்றன. உங்கள் முதலீடுகளைப் பலவக்கைப்படுத்தி வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்தல் நீண்ட கால வரையறையில் உங்கள் வருவாயை அதிகரிக்கச் செய்யும்.

நிதி மேலாளர்

நிதி மேலாளர்

நிதி மேலாளர் என்பவர் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உடையவர். அவர் நிதியின் செயல்திறனில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறார். ஒரு பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, நிதி மேலாளரின் செயல்திறன், அனுபவம் மற்றும் பதவி காலம் ஆகியவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர் நிர்வகிக்கும் இதர நிதிகளில் அவருடைய செயல்திறனைப் பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். அவருடைய கடந்த காலச் சாதனைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

 

அபாயம்

அபாயம்

அபாயம் என்பது முதலீட்டுடன் தொடர்புடைய நிச்சயமற்றத்தன்மையைக் குறிக்கிறது. ஒரு பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் எவ்வளவு அபாயம் வரை வசதியாக உணர்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வுக் காலத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைச் சோதியுங்கள். நீங்கள் ஓய்வு பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் மிகக் குறைந்த அபாயமுள்ள ஒரு ஃபோர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் இளம் வயதில் இருந்தால், சந்தையின் ஏற்ற இறக்கங்களுடன் இயங்குவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது. நீங்கள் அதித் தீவிரமான முதலீட்டு உத்தியைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

 

உங்கள் வயதைப் பாருங்கள்

உங்கள் வயதைப் பாருங்கள்

இளைய முதலீட்டாளர்கள் பங்கு நிதிகளில் முதலீடு செய்வதை விரும்பலாம். ஏனென்றால் அவர்களுக்குப் பங்கு விலைகளின் குறுகிய கால ஏற்ற இறக்கங்களுக்காகக் காத்திருக்க நிறைய நேரம் இருக்கிறது. நீண்ட கால முதலீடுகளில் அவர்கள் நல்ல வருவாயைப் பெறுகின்றனர். ஓய்வுக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மக்கள் அபாயகரமான பங்கு முதலீடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தங்கள் பணத்தைச் சாத்துமான வீழ்ச்சிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். உங்கள் வயதிற்குப் பொருத்தமான ஒரு முதலீட்டு கலவைத் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்கம் மற்றும் அதன் பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள். பணவீக்கம் முதலீட்டாளர்களின் தலையாய எதிரிகளில் ஒன்று. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வதால், இந்தக் கண்ணுக்குத் தெரியாத வலிமை உங்கள் கொள்முதல் செய்யும் ஆற்றல் மற்றும் உங்கள் முதலீடுகளின் மீது நீங்கள் பெறும் வருவாய் ஆகிய இரண்டையும் அழித்துவிடுகின்றது. பணவீக்கத்தின் விளைவாக நீண்ட கால வரையறையில் உங்கள் சேமிப்பின் மதிப்புச் சுருங்காமல் பாதுகாப்பது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். உங்களை வெவ்வேறு வழிகளில் பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பல்வேறு வகைப் பரஸ்பர நிதிகள் இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+