பெரும்பாலான மக்களுக்கு அவர்களுடைய எஸ்ஐபி திட்டத்தை நிறுத்த முடியும் என்பது தெரியாது. உங்கள் எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தை நிறுத்தினாலோ அல்லது ரத்து செய்தாலோ அதற்கு அபராதக் கட்டணங்கள் எதுவும் கிடையாது. எஸ்ஐபி திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை இடைநிறுத்தம் செய்தும் வைக்கலாம்.
உங்கள் எஸ்ஐபி திட்டத்தை நிறுத்துவது மிகவும் சுலபமானதாகும். பயனாளர் எஸ்ஐபி ரத்து படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் மேலும் எஸ்ஐபி இடைநிறுத்தப் படிவம் முதலீட்டாளரால் நிரப்பப்பட வேண்டியது கட்டாயமாகும்.

முதலீட்டாளர் படிவத்தை குறிப்பிட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திடம் அல்லது உங்கள் விநியோகஸ்தர்/இடைத்தரகரிடம் அல்லது அந்த பரஸ்பர நிதி நிறுவனத்தின் பதிவாளரிடமோ சமர்ப்பிக்க வேண்டியது தேவையாகும். இந்தப் படிவத்தை பரஸ்பர நிதி நிறுவனத்தின் இணையத் தளத்தில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. எஸ்ஐபி ரத்துப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பின்னர் அதை ஒரு ஏ4 பக்கத்தில் அச்சடித்துக் கொள்ளவும்.
2. ஆவணங்கள்
இடை நிறுத்தத்தின் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அந்தப் படிவம் தற்போதுள்ள எஸ்ஐபி திட்டத்தின் விவரங்களான முதலீட்டாளரின் பெயர் மற்றும் இணைப் பக்க எண்ணைக் கேட்கும். இந்த பின்வரும் விவரங்களை நிரப்பிய பிறகு நீங்கள் அதில் கையெழுத்திட வேண்டும், முதலீட்டுத் திட்டத்தில் அலகுகளை வைத்திருக்கும் அனைவரும் எஸ்ஐபி இடைநிறுத்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் பின்வரும் விவரங்களை நிரப்ப வேண்டியது தேவையாகும்:
• விண்ணப்பதாரரின் பெயர்
• பான் எண்கள்
• செயல் திட்டம்
• திட்டம்
• தேர்வு
• இணை பக்க எண்.
• எஸ்ஐபி காலம் : தொடக்கத் தேதியிலிருந்து முடிவுத் தேதி வரை
• எஸ்ஐபி முதலீட்டுத் தொகை
• மின்னணு வங்கி வணிக நடவடிக்கை சேவைகளுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் விவரங்கள்
3. ஆவணத்தில் கையெழுத்திட்டப் பிறகு இந்த எஸ்ஐபி ரத்துப் படிவத்தை
பரஸ்பர நிதி இல்லத்தில் அல்லது நிதியின் பதிவாளரிடம் அல்லது உங்கள் விநியோகஸ்தர் / இடைத்தரகர் / ஆலோசகர் / நிதி கலந்தாலோசனையாளர் / முகவர் போன்றவர்களில் ஒருவரிடம் சமர்ப்பியுங்கள்.

4. விண்ணப்பதாரர் அவருடைய விண்ணப்பத்தை தடமறியலாம். உங்கள் எஸ்ஐபி திட்ட ரத்து விண்ணப்பப் படிவத்தின் நிலையைத் தடமறிய, எஸ்ஐபி ரத்து படிவம் மற்றும் ஒப்புதல் சீட்டின் ஒரு நகலை உங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
5. உங்கள் வேண்டுகோளை சமர்ப்பித்த பிறகு, எஸ்ஐபி திட்டத்தின் மின்னணு வணிக சேவைகளை நிறுத்த சுமார் 30 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications