பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன.
உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும்.
இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்.
அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா?
நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொத்துக்களை கவனித்துக் கொள்ளும் நபராக மட்டுமே இருப்பதால் அனைத்துச் சொத்துக்களும் சட்டப்பூர்வமாக வாரிசுதாரருக்கு மாற்றப்படுகிறது. உயில் எழுதப்படாத பட்சத்தில் வாரிசுகளை சட்டம் தீர்மானிக்கிறது. நியமனப்பட்டவர்கள் வாரிசுதாரர்களாக இல்லாத பட்சத்தில் அது தகராறில் முடியும்.
உயில் எப்படி தயாரிக்க வேண்டும்?
உயிலை சாதாரண காகிதத்திலோ இல்லையெனில் முத்திரைத் தாளிலிலோ எழுதலாம். கையிலும் எழுதலாம். அச்சிடப்படலாம். உயில் சாசனம் எழுதுபவர் வெவ்வேறு நிறங்களான மையை பயன்படுத்தக் கூடாது.
உயில் சாசனம் எழுதுபவர் கடைசி வாக்கியத்திற்கு சற்று கீழே கையெழுத்திட வேண்டும். ஏனென்றால் அந்த கையெழுத்திற்கு கீழே உயிலில் எழுதப்படும் எதுவும் உயிலின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது.
இரண்டு சாட்சிதாரர்களால் கையெழுத்திடப்பட வேண்டும். உயில் சாசனம் எழுதியவர் மற்றும் உயிலின் பயனாளர் இருவரின் பெயர், வயது, முகவரி மற்றும் பல விவரங்கள் விவரமாக எழுதப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு சொத்தின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
உயிலை மாற்றி எழுதலாமா?
ஆமாம், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். ஆனால் வேறு காகிதத்தில் தான் மாற்றி எழுத வேண்டும். (உயில் இணைப்புகள் என்று அழைக்கப்படுகிறது) மாற்றி எழுதிய அந்தத் தேதியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாறுபடியும் கடைசி வரிக்கு கீழே இடைவெளி இல்லாமல் கையெத்திட வேண்டும். சாட்சிதாரர்களின் இருவர் கையெழுத்துகளும் இணைக்கப்பட வேண்டும்.
உயிலை பதிவு செய்வது கட்டாயமா?
பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் அது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் செய்வது நல்லது. சட்டப்படி பதிவு செய்த பிறகு சிக்கல்கள் வராது. இதையும் கூட முத்திரைத் தாளிலோ பத்திரங்களிலோ எழுத தேவையில்லை அல்லது சான்றுருதியும் அளிக்கத் தேவையில்லை.
இணையத்தில் உயில் தயாரிக்க முடியுமா?
ஆமாம், இணையத்தில் சாதாரணக் கட்டணத்திற்குத் தயாரித்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. இதனால் அதிக விவரங்களுடன், மதிப்புடைய தவறுகள் இல்லாத உயில்கள் தயாரிக்க முடியும் என்பதால் இது சிறந்த வழியாகும்.
இணையத்தில் உயில் தயாரிக்க வழக்கறிஞர் தேவையா?
வழக்கறிஞர்கள் தேவையில்லை. ஆனால் எந்தவிதமான சட்ட ஓட்டைகள் இல்லாமல் மதிப்புடைய உயிலைத் தயாரிப்பதற்கு அவருடைய உதவி தேவை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications