பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..? இதில் இருக்கும் ஆபத்து என்னென்ன..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

பிட்காயின் என்பது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து பராமரிக்கப்படும் நாணயம் ஆகும். சில நாட்களாகவே செய்திகளில் இடம்பெற்று வரும் இந்த ரகசிய குறியீட்டைக் கொண்ட நாணயமானது, மிகக் குறுகிய வருங்காலத்தில் ஏதேனும் ஒரு வழியில் லாபத்தைப் பெற்று நாணய மதிப்பீட்டை உயர்த்தும் நோக்கில் தங்களிடம் உள்ள உபரிப் பணத்தைத் தாராளமாகச் செலவிடத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ( நீங்கள் யார்..?)

ஆர்வம்

பிட்காயின்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் அதிகக் கவனத்தை அதன் மீது குவிக்கிறது.

டிஜிட்டல் நாணயம்

இந்த நாணயத்தை மிக அதிக அளவில் அச்சிட முடியாது என்று டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குபவர்களால் சொல்லப்படுவதால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயான அதிக இடைவெளியால் டிஜிட்டல் நாணயத்தின் விலை அதி விரைவாக முன்நோக்கி உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

முதலீட்டாளர்கள் கணிசமான விலை மாற்றத்தில் மூலதனமாக முதலீடு செய்துள்ளனர். அதே சமயம் தினசரி அடிப்படையில் அவர்கள் மிகப் பெரிய தொகையை இழந்துள்ளனர்.

 

பந்தயம்

இந்தப் புதிய மாற்று முதலீட்டுத் திட்டத் தேர்வுப் பந்தயத்தில் நீங்கள் பங்கு கொள்ள நேர்ந்தால் இதர நிதி கருவிகளைப் போலவே இதிலும் rupee cost averaging principle பொருந்தும். அதாவது உங்கள் ஃபோர்ட்போலியோவின் ஒரு வணிகத்தில் மட்டும் பிட்காயின்களைச் சேர்க்காதீர்கள்.

ஆனால் அவற்றை வெவ்வேறு விலை நிலவரங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சேர்த்து ஒரு மாதத்திற்கு ஒரு நிலையான தொகையைச் செலுத்தவும். மேலும் பிட்காயின்களில் முதலீடு செய்வது மிகுந்த நிலையற்றத் தன்மையின் காரணமாக உயர் அபாயங்களைக் கொண்டது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் ஆண்டுக்கு 30% வரை வருடாந்திர வருவாயை அளிப்பதாக அறிவுறுத்தியுள்ளது.

பிட்காயின் முதலீட்டுடன் தொடர்புடைய சில அபாயங்கள்.

 

சந்தை அபாயம்:

இந்த டிஜிட்டல் நாணயம் வரையறுக்கப்பட்ட முறையில் சிறிதளவே அச்சிடப்படுவதால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியானது பிட்காயின்களின் மதிப்பில் தீவிர ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.

தொழில்நுட்ப அபாயம்:

பிட்காயின்கள் முற்றிலும் டிஜிட்டல் தயாரிப்புகள் மேலும் தொழில்நுட்பமானது வருங்காலத்தில் எந்த நேரத்திலும் அதைப் பயனற்றதாகச் செய்துவிட முடியும்.

நிதியியல் அபாயம்:

மற்ற நிதியியல் சந்தைகளைப் போலவே, இதிலும் முதலீட்டாளர்கள் நாணய மதிப்பீட்டு உயர்வைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். விலை குறைவாக இருக்கும் போது நாணயங்களின் மீது பந்தயம் கட்டுங்கள். விலை அதிகரிக்கும் போது வெளியில் எடுத்து விடுங்கள்.

சட்ட அபாயம்:

"பிட்காயின் உட்பட மெய்நிகர் நாணயங்கள் பயன்பாட்டில் கொடுக்கல் வாங்கல் தரப்பினர் இல்லாமல் இருப்பதால் பெயரற்ற / போலி பெயர் கொண்ட அமைப்புகளில் செய்யப்படும் தடை செய்யப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் பயனாளர்களை நோக்கங்களற்று சட்ட விரோத பணம் மற்றும் தீவிரவாத சட்டங்களுக்கு எதிராக வரம்புகளை மீறச்செய்யும்," என்று மாநில நிதியமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், ராஜ்ய சபாவில் ஒரு எழுத்துப் பூர்வ பதிலில் தெரிவித்திருக்கிறார். பண மதிப்பீட்டு இழப்பு பிட்காயின்களின் விலையில் தடீர் அதிகரிப்பு ஏற்பட வழி வகுத்துள்ளது. எனவே அது தற்போது சட்டப்பூர்வமாக்கப்படுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முறையாகச் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு முன்பு செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்பு அபாயம்:

பிட்காயின் முதலீடானது அதில் வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் டிஜிட்டல் வாலெட்டில் நாணயங்களைப் பராமரிப்பதை இன்றியமையாததாக்குகிறது. மேலும் அது பாதுகாப்பு அபாயங்களுக்கு உள்ளாகிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தனது கடமையாகப் பயனாளர்கள், வணிகர்கள் மற்றும் இதர தரப்பினர்களைப் பிட்காயின்களில் வணிகம் செய்யும் போது பயனாளர்கள் தங்கள் சொந்த அபாயத்தில் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Investment in Bitcoin Worth The Cost

Is Investment in Bitcoin Worth The Cost
Story first published: Wednesday, August 9, 2017, 17:39 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns