எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி தான் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எஸ்ஐபி மூலமாக 5,000 கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றது.

எஸ்ஐபி தான் முதலீட்டாளர்களுக்கான அதிலும் ரிடெய்ல் முதலீட்டாளர்களுக்கான சிறந்த திட்டம் ஆகும். எனவே எஸ்ஐபி செப்படி செயல்படுகின்றது என்று இங்குப் பார்ப்போம்.

எஸ்ஐபி என்றால் என்ன?

எஸ்ஐபி என்றால் என்ன?

எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட தொகையினைத் தொடர் இடைவெளியில் தொடர்ச்சியான காலத்திற்கு முதலீடு செய்யப்படுகின்றது, பொதுவாக ஒவ்வொரு மாதமும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் மூலம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் ஒரு அலகினை முதலீட்டாளர் வாங்குகின்றார் எனலாம். எஸ்ஐபி முதலீட்டாளர்களை எப்போது சந்தையினைக் கண்காணிக்காமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதினை ஊக்குவிக்கின்றது. மேலும் முதலீட்டு முறைக்கு ஒரு ஒழுக்கத்தை எஸ்ஐபி திட்டங்கள் அளிக்கின்றன.

எப்போது உங்களால் எஸ்ஐபி-ல் முதலீட்டைத் துவங்கப்படும்?

எப்போது உங்களால் எஸ்ஐபி-ல் முதலீட்டைத் துவங்கப்படும்?

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்த வரையில் எஸ்ஐபி மூலம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எனவே எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதன் மூலம் முதலீடு செய்ய முடியும். பொதுவாக இது 10முதல் 30 நாட்களுக்கு வங்கிகளில் பதிவு செய்வதன் மூலம் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யத் துவங்களாம்.

எஸ்ஐபி திட்டங்களில் எவ்வளவு காலம் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம்?

எஸ்ஐபி திட்டங்களில் எவ்வளவு காலம் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம்?

பல முதலீட்டு நிறுவனங்கள் குறைந்தது 6 மாதம் வரை எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர். முதலீடு செய்யும் ஃபண்டு நிறுவனம் முதலீடுகள் போதும் என நிறுத்தும் வரை முதலீடு செய்ய முடியும். ஆனால் ஒரு இலக்கை முடிவு செய்துகொண்டு எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

எஸ்ஐபி-ல் முதலீடு செய்யும் தொகையினை மாற்றி அமைக்க முடியுமா?

எஸ்ஐபி-ல் முதலீடு செய்யும் தொகையினை மாற்றி அமைக்க முடியுமா?

முதலீட்டாளர் எஸ்ஐபி திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கலாம், குறைக்கலாம் ஆனால் அதற்கும் முதலில் முன்பு சமர்ப்பித்த கோரிக்கை ரத்து செய்துவிட்டுப் புதிதாக மறு சீரமைக்கப்பட்ட கோரிக்கையினை வைக்க வேண்டும். இதற்கு ஃபண்டு நிறுவனங்கள் எந்த அபராதமும் விதிக்காது.

மொத்தமாக ஒரு தொகையினை எஸ்ஐபி திட்டத்தினில் முதலீடு செய்ய முடியுமா?

மொத்தமாக ஒரு தொகையினை எஸ்ஐபி திட்டத்தினில் முதலீடு செய்ய முடியுமா?

ஆம், உங்களால் மொத்தமாக ஓர் தொகையினை நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்து வரும் ஒரு எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+