பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பெறும் லாபத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்!

கடந்த சில ஆண்டுகளாக நிரந்த வைப்பு நிதி திட்டம் மீதான வரி விகிதம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆனாலும் இது பாதுகாப்பான ஒரு முதலீடு திட்டம் என்பதால் மிகவும் பிரபலமாகவே உள்ளது.

நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் காலாண்டிலும் மீதான வட்டி விகிதத்தில் லாபத்தினைப் பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 அண்டுகள் வரை இத்திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உதாரணம்

உதாரணம்

உதாரணத்திற்கு இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ ஒரு ஆண்டு வரை முதலீடு செய்யும் போது 6.75 சதவீதமும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் போது 6.25 சதவீதமும் வட்டி விகிதத்தில் லாபம் அளிக்கப்படுகின்றது. இதுவே மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.50 சதவீதம் வரை லாபம் அளிக்கின்றது.

எனவே இங்கு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் முக்கியமாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்குப் பார்ப்போம்.

 

டெபாசிட் இன்சூரன்ஸ்

டெபாசிட் இன்சூரன்ஸ்

நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்யும் அனைவருக்கும் 1 லட்சம் ரூபாய் வரை ஆர்பிஐ கட்டுப்பாட்டில் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்ட்டி கார்ப்ரேஷன் கீழ் வழங்கப்படுகின்றது. இதற்கான பிரீமியம் தொகையினை வங்கிகள் ஏற்றுக்கொள்கின்றன. ஒருவேலை வங்கி திவால் ஆனால் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை முதலீட்டாளர்கள் பெற முடியும்.

கடன் அல்லது ஓவர் டிராப்ட்

கடன் அல்லது ஓவர் டிராப்ட்

எச்பிஐ மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டுத் தொகையில் 90 சதவீதம் வரை கடன் அளிக்கின்றன. அளிக்கப்படும் கடன் தொகைக்கு நிரந்தர வைப்பு நிதி கணக்குகளுக்கு அளிக்கப்படும் வட்டியை விடக் கூடுதலாக 1 சதவீதம் வட்டியினை வங்கிகள் வசூலிக்கின்றன.

டிடிஎஸ்

டிடிஎஸ்

நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் லாபத்திற்கு வருமான வரி உண்டு. அது அவர் அவர் வருமானத்தினைப் பொருத்து. வட்டியாக அளிக்கப்படும் தொகை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வங்கிகள் 10 சதவீதம் வரை வரிப் பிடித்தம் செய்கின்றன. வருமான வரி செலுத்துவதற்கும் குறைவாகவே உங்கள் வருமானம் இருக்கின்றது என்றால் வரி தாக்கல் செய்வதன் மூலம் வரிப் பிடித்தத்தினை வட்டியுடன் திரும்பப்பெறலாம். வருமானம் குறைவாக இருக்கும் போது வரிப் பிடித்தத்தினை வங்கிகள் பிடிக்காமல் இருக்கப் படிவம் 15ஜி அல்லது 15 எச்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது.

ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி)

ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி)

2015-ம் ஆண்டு முதல் ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) திட்டத்தில் முதலீடு செய்து அதன் மூலம் பெறப்படும் வருவாய்க்கும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

 வட்டி வருமானம் கிளப்பிங்

வட்டி வருமானம் கிளப்பிங்

அனைத்து வங்கி கிளைகளில் வைத்துள்ள நிரந்தர வைப்பு நிதி அல்லது ஆர்டி முதலீடுகள் மூலம் பெறப்பட்ட வட்டிக்கும் டிடிஎஸ் பிடித்தம் ஒன்றாகச் செய்யப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+