பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினாலும் அதில் உள்ள ரிஸ்க்கை பார்த்துப் பயப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட முதலீட்டாளர்களுக்குக் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சிறந்ததாக இருக்கும்.
பெயருக்கு ஏற்றார் போல லார்ஜ் கேப் திட்டங்கள் மிகப் பெரிய திட்டங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. உதாரணத்திற்குச் சில லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மும்பை பங்கு சந்தையில் உள்ள டாப் 100 பங்குகளில் முதலீடுகளைச் செய்துள்ளன.
இந்த நிறுவனங்கள் அவர்கள் இருக்கும் துறையில் சிறந்தவர்களாகவும் உள்ளனர். சந்தை மோசமான நிலையில் இருந்தாலும் இந்த நிறுவனங்களில் பெரிய பாதிப்பு இருக்காது.
குறைந்த ரிஸ்க்
எனவே குறைந்த ரிஸ்க் உடன் முதலீடு செய்வதற்கு ஏற்றத் திட்டமாக லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன. லார்ஜ் கேப் மியூச்சிவல் ஃபண்டு திட்டங்கள் கலவையான வருவாயினை அளிக்கும்.
அதிக லாபம்
ஒருவேலை உங்களுக்குக் குறைந்த காலத்தில் பல மடங்கு லாபம் வேண்டும் என்றால், ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை என்றால் நீங்கள் லார்ஜ் கேப் திட்த்தினை தவிர்த்து ஸ்மால் கேப் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.
ரிஸ்க் வேண்டாம்
இதுவே ரிஸ்க் வேண்டாம் என்று பிற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் ஓய்வூதியம், குழந்தைகளின் கல்வி போன்ற நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்பும் போது இந்த லார்ஜ் கேப் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பெறலாம்.
எனவே உங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல லாபத்தினை அளிக்கக் கூடிய லார்ஜ் கேப் திட்டங்களை இங்குப் பரிந்துரைக்கின்றோம். அவற்றைப் பற்றின் இங்குப் பார்ப்போம்.
எஸ்பிஐ புளூசிப் ஃபண்டு
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதல் இடத்தில் எஸ்பிஐ புளூசிப் ஃபண்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு வருடத்தில் 11.76 சதவிதம் அரையிலும், இரண்டு வருடத்தில் 14 சதவீதம் வரையிலும், 3 வருடத்தில் 13.47 சதவீதம் வரையிலும், 5 வருடம் என்றால் 18.97 சதவீதம் வரையிலும் லாபம் அளிக்கும்.
எஸ்ஐபி மூலம் இந்தத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் என முதலீடு செய்ய முடியும். இதுவே மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
ஆதித்யா பிர்லா சன் லைப் டாப் 100
ஆதித்யா பிர்லா சன் லைப் டாப் 100 திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு வருடத்தில் 15.32 சதவீதமும், 3 வருடத்தில் 12.28 சதவீதமும், 5 வருடத்தில் 18.36 சதவீதமும், 10 வருடத்தில் 11.49 சதவீதமும் லாபம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு மொத்தமாகவும் எஸ்ஐபி முலாமாகவும் செய்ய முடியும்.
ஆதித்யா பிர்லா சன் லைப் ஃபர்ண்ட்லைன் ஈவிட்டி
ஆதித்யா பிர்லா சன் லைப் ஃபர்ண்ட்லைன் ஈவிட்டி திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு வருடத்தில் 13.86 சதவீதமும், 3 வருடத்தில் 12.41 சதவீதமும், 5 வருடத்தில் 18.31 சதவீதமும், 10 வருடத்தில் 12.69 சதவீதமும் லாபம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு மொத்தமாக முதலீடு செய்யும் போது குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபி முலாமாகவும் செய்ய முடியும். இதுவே எஸ்ஐபி என்றால் 1000 ரூபாய் மாதம் என முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications