இந்த 5 தனியார் வங்கி பங்குகளை வாங்கினால் 1 வருடத்தில் 35% வரை லாபம் கிடைக்கும்!

2016-ம் ஆண்டுப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சரிந்த பங்கு சந்தை அதன் பிறகு 2017-ம் ஆண்டு நல்ல லாபத்தினை அளித்துள்ளது. இந்திய பங்கு சந்தையின் இரண்டு முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் முறையே 22% முதல் 24 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது, அதே நேரம் வங்கி துறை பங்குகள் ஜனவரி 2017 முதல் தற்போது வரை 30 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.

தனியார் வங்கித் துறை பங்குகள் அதிக லாபம் அளித்துள்ள அதே வேலையில் பொதுத் துறை வங்கி பங்குகள் 1.32 சதவீதம் வரை நட்டத்தினை அளித்துள்ளன. பொதுத் துறை வங்கியை விடத் தனியார் துறை வங்கிகள் லாபத்தினை உறுதி செய்கின்றன. எனவே 35 சதவீதம் வரை லாபம் அளிக்கக் கூடிய 5 தனியார் நிறுவன பங்குகளைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

ஆர்பிஎல் வங்கி

ஆர்பிஎல் வங்கி

நடப்பு ஆண்டில் ஆர்பிஎல் வங்கியின் பங்கின் மதிப்பு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆர்பிஎல் வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பான 528 ரூபாயில் இருந்து 20 சதவீதம் வரை இந்த ஆண்டில் லாபம் கிடைக்கும் என்று தரவுகள் கூறுகின்றன. கடந்த 5 ஆண்டில் ஆர்பில் வங்கியின் கூட்டாண்டு வளர்ச்சி 70 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது. 10 சதவீதத்திற்கும் அதிகமாக லாபமும் அளித்துள்ளது. எனவே தற்போது நீங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 12 மாதத்தில் 1,600 ரூபாய் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது.

ஃபெடரல் வங்கி

ஃபெடரல் வங்கி

2017-ம் ஆண்டில் இதுவரை ஃபெடரல் வங்கி பங்குகள் 80 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. இதுவே இன்னும் 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது சந்தை மதிப்பில் 124.65 ரூபாயக உள்ள ஒரு பங்கின் மதிப்பு 150 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த வங்கியின் கடன் அளிக்கும் விகிதமும் 20 முதல் 25 சதவீடஹ்ம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 1 வருடத்தில் 1,700 ரூபாய் வரை லாபம் அளிக்கும்.

சவுத் இந்தியன் பாங்க்

சவுத் இந்தியன் பாங்க்

சவுத் இந்தியன் வங்கி நிறுவன பங்குகள் 2017 ஜனவரியில் தற்போது வரை 50 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. இதுவே மேலும் 33 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதால் தற்போது 31 ரூபாயாக உள்ள ஒரு பங்கின் விலை 41 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த 4 காலாண்டில் சவுத் இந்தியன் வங்கியின் சொத்து மதிப்பும் நல்ல வளர்ச்சியினைப் பிடித்துள்ளது. எனவே தற்போது 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 12 மாதத்தில் 1,323 ரூபாய் வரை லாபம் அளிக்கம்.

 இண்டஸ் இன்ட் வங்கி

இண்டஸ் இன்ட் வங்கி

இண்டஸ் இன்ட் வங்கி பங்குகளும் 2017 ஜனவரி முதல் 50 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. பிற வங்கிகளின் சொத்து மதிப்புகள் எல்லாம் ஆட்டம் கண்ட நிலையில் இண்டஸ் இன்ட் வங்கி பங்குகளின் சொத்து மதிப்பு நல்ல வளர்ச்சியினைப் பிடித்துள்ளது. தற்போது இந்தப் பங்குகளில் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்தால் 1,388 ரூபாய் வரை லாபம் அளிக்கும்.

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் இதுவரை 2017 ஆம் ஆண்டில் 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் இலக்கு விலையாக ரூ180 ஐ சந்தை விலை ரூ 143 லிலிருந்து 26% உயர்த்தி நிர்ணயித்துள்ளது. "கேவிபி ஆனது நிதியாண்டு 2011 முதல் 2017 வரை 14.9 சதவிகிதத்திற்கும் அதிகமான வலிமையான கடன் CAGR ஆக இருந்தது. எனினும், நிதியாண்டு 2017 ஒரு ஒருங்கிணைப்பு ஆண்டாக இருந்து கடன் புத்தகம் 4.7% மட்டுமே வளர்ந்தது. கடன் வளர்ச்சியானது நிதியாண்டு 2017 முதல் 2019 வரை 11% வரை உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏஞ்சர் புரோக்கிங்கின் கூற்றுப்படி வைப்புத்தொகை வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது".

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 2017 ஆம் ஆண்டில் 80% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தையின் விலை ரூ. 117 லிருந்து 25% உயர்த்தி ரூ. 147 ஐ இலக்காக விலையாக நிர்ணயித்து உள்ளது. குளோப் கேப்பிட்டல் மார்க்கெட் கூற்றின் படி, நிறுவன மேலாண்மையானது நிறுவனத்தின் கடன் புத்தகத்தின் வளர்ச்சி வருடந்தோறும் 20 முதல் 25 சதவிகித ஆண்டு வளர்ச்சியுடன் 5 சதவிகிதம் பெருநிறுவன வளர்ச்சியைக் கொண்டு தொடர்ந்து லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கிறது.

குறித்த உரிமைத்துறப்பு

குறித்த உரிமைத்துறப்பு

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+