வீடு வாங்கபவர்களுக்குக் கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகைகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

விழாக்காலம் என்றாலே சலுகைகளில் பொருட்களை வாங்கலாம் என்பது தான் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணமாக இருக்கும். இப்படிப்பட்ட விழாக்காலத்தில் கட்டுமான நிறுவனங்களும் சலுகைகளை மழையாய் அள்ளி வழங்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தச் சலுகைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பணம் மற்றும் பணத்திற்கு ஈடான தள்ளுபடிகள், பணம் அல்லாத தள்ளுபடிகள், பண உதவித் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி வரியிலிருந்து தளர்வு. இந்தச் சலுகைகள் உங்கள் செலவினங்களை உண்மையாகக் குறைக்க முயலுகின்றதா எனப் பார்ப்போம்.

பணத் தள்ளுபடிகள்

அவை என்ன: சலுகையாக வழங்கப்படும் பணமதிப்பு தெளிவாகக் குறிப்பிடப்பட்டு வீட்டின் விலையிலிருந்து நேரடியாகக் குறைத்துக்கொள்ளப்படும். பொதுவாக இந்தச் சலுகைகள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கும் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கு மட்டுமே தரப்படும்.

சிகப்புக் கொடிகள்: வரையறுக்கப்பட்ட காலச் சலுகைகள் துரிதமாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளும். கட்டுமான நிறுவனத்தார் அடிப்படை விலையை உயர்த்தி அதன் பிறகு சலுகையாகத் தள்ளுபடியை அறிவிப்பர். இதைப்பார்த்து நாம் செல்லாமல் இருப்பது நல்லது. உதாரணத்திற்கு, ஒரு சதுர அடிக்கு ரூ 200 தள்ளுபடி என வைத்துக்கொள்வோம். அடிப்படை விலையான சதுர அடி ரூ 5000ல் கழிவு என்பது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் 600 சதுர அடிக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெறும் ரூ1.2 லட்சங்களை மட்டுமே சேமிக்க முடியும்.

எங்கள் மதிப்பீடு: கட்டுமான நிறுவனத்தார் கடந்த 6-12 மாதங்களில் அடிப்படை விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த பணத்தள்ளுபடியானது லாபகரமானது ஆகும்.

 

இலவசப் பரிசுப்பொருட்கள்

அவை என்ன: இலவச நவீன சமையலறை, இலவச இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள், விடுமுறை தொகுப்புகள், தங்க நாணயங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவை அடங்கும்.

சிகப்புக் கொடிகள்: வல்லுநர்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஒட்டுமொத்த சலுகைகளின் செலவினங்கள் அனைத்தும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வீட்டின் விலையில் கூட்டப்படும் என்பதாகும். சில கட்டுமான நிறுவனத்தார் உண்மையான சலுகைகள் தரலாம். ஆனால் அவை சொத்து மதிப்பில் 1-8% அளவிலேயே இருக்கும்.

எங்கள் மதிப்பீடு: இலவசங்கள் சொத்து மதிப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் வாடகைக்கு விடத் தீர்மானித்தவர்களுக்கு உதவியாக இருக்கும். பெரும்பாலான வாடகைதாரர்கள் முழுவதும் நிரம்பிய வீட்டையே விரும்புகின்றனர்.

 

சுலபக் கட்டண திட்டம்

அவை என்ன: அநேக கட்டுமான நிறுவனங்கள் இலகுவான கட்டணத் திட்டங்களை அளிக்கின்றனர். சில நிறுவனத்தார் கட்டுமானம் நடக்கும் காலத்தில் கட்ட வேண்டிய வட்டியை தாங்களே செலுத்தும் உத்தரவாதத்தைச் சலுகையாக அளிக்கின்றனர். மற்றவர்கள் குறிப்பிட்ட சதவீத வீட்டுக்கடன் வட்டியை காட்டுவதாகச் சலுகை தருகின்றனர்.

சிகப்புக் கொடிகள்: இந்தத் திட்டங்கள் மலிவாகக் கிடைக்காது. பண உதவித் திட்டத்தில் வாங்கும் வீட்டின் விலையானது கண்டிப்பாக மொத்தப்பணத்தையும் செலுத்தி வாங்குவதை விட அதிகமாக இருக்கும். பண உதவி திட்டத்தில் ஏதேனும் காலஅளவு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். பண உதவித்திட்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதையும் கவனமாக ஆராயவேண்டும்.

எங்கள் மதிப்பீடு: பண உதவித்திட்டங்களில் கவனமாக இருங்கள். கட்டுமான நிறுவனம் கட்டுமானத்தைத் தாமதப்படுத்த நேர்ந்தால், நீங்கள் தற்போது வசிக்கும் வீட்டின் வாடகையுடன் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையையும் சேர்த்து கட்டும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

 

ஜிஎஸ்டி தளர்த்தல்

அவை என்ன: சில கட்டுமான நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியிலிருந்து தளர்வு அல்லது ஜிஎஸ்டி வரியே இல்லை என்றும் விளம்பரப்படுத்துகின்றனர்.

சிகப்புக் கொடிகள்: ஜிஎஸ்டியானது வசிப்புச் சான்றிதழ் (OC ) பெறாத கட்டுமானம் முழுமை பெறாத வீடுகளுக்கு விதிக்கப்படும். ஆதலால், குடியிருக்கத் தயாராகவுள்ள வீடுகள் "ஜிஎஸ்டி தளர்வு" என்ற பொய்யான விவரத்துடன் விற்பனை செய்ய முடியாது. மேலும் வீட்டின் விலையானது முந்தைய மற்றும் பிந்தைய வசிப்புச் சான்றிதழ் (OC) உடன் ஒப்பிடப்படவேண்டும். முந்தைய வசிப்புச் சான்றிதழ் (OC) ஜிஎஸ்டியுடன் சேர்த்த விலையும் மற்றும் பிந்தைய வசிப்புச் சான்றிதழ் (OC) விலையும் அதே அளவோ அல்லது சிறிது குறைவு என்றால், வாங்குபவருக்கு அதன் பலன் முழுமையாகத் தரப்படவில்லை என்பதே அர்த்தம்.

எங்கள் மதிப்பீடு: ஜிஎஸ்டி வரியானது வசிப்புச் சான்றிதழ் (OC) பெறாத வீடுகளுக்கு விதிக்கப்படுவது. தவறான திசைதிருப்பும் சலுகைகளில் கவனமாயிருங்கள். உண்மையான சலுகைகள் பணவிரயத்தில் இருந்து உங்களைக் காக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How good are these real estate offers?

How good are these real estate offers?
Story first published: Wednesday, October 11, 2017, 14:16 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns