ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ஒரு அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக மதிப்பெண்களைப் பெறுகிறது. ஏனென்றால், முதன்மையாகக் குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை.

வழக்கமான சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையைப் பராமரிக்கவில்லை என்றால், அது அபராதத் தொகையைக் கவரும், இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதே சமயம், பிஎஸ்பிடிஏ வில் அத்தகைய வங்கி நிலுவைத் தொகைகள் தொடர்பான வற்புறுத்தல்கள் இல்லை.

இரண்டாம் வங்கிக் கணக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்

இரண்டாம் வங்கிக் கணக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்

வங்கிக் கணக்கைத் திறக்க விரும்புவோருக்கு அத்தகைய வசதிகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் கட்டாயப்படுத்தப்படுகின்றன. உங்கள் வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கை இன்னும் திறமையாக நிர்வகிக்க இதை இரண்டாம் நிலை கணக்காகப் பயன்படுத்தலாம்.

அதே வட்டி விகிதம்

அதே வட்டி விகிதம்

வழக்கமான சேமிப்புக் கணக்குகளில் இருப்பதைப் போலவே வட்டி விகிதங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். அனைத்து வழக்கமான அம்சங்களான வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் களில் நிதி வைப்பு மற்றும் பணத்தை வெளியெடுத்தல், காசோலை புத்தக வசதி (சமமாய்ச் செலுத்துல் அல்லது பல நகரங்கள்) ஆன்லைன் நிதிப் பரிமாற்றங்கள் உட்பட அனைத்து வசதிகளும் இந்த அடிப்படை சேமிப்புக் கணக்கிலும் கிடைக்கப்பெறும்.

தகுதி

தகுதி

வயது மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் தங்கள் சொந்த தகுதி வரைகூறுகளைக் கொண்டிருக்கும். இருந்தாலும், ஆர்பிஐ இன் வழிகாட்டுதல்களின் படி, பிஎஸ்பிடிஏ வை திறக்கும்போது தனிநபரின் வயது மற்றும் வருமான அளவு போன்ற தகுதி கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று வங்கிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள்

கட்டுப்படுத்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள்

ஆர்பிஐ பண வைப்புகள் மற்றும் பணத்தை வெளியெடுப்பதற்கு எந்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஆனால், வங்கிகள் அதிகபட்சமாக மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை அமைத்திருக்கின்றது. இதில் ஏடிஎம் கள், ஆர்டிஜிஎஸ், என்ஈஎஃப்டி, வங்கிக் கிளைகளில் பணத்தை வெளியெடுத்தல், நிலை கட்டளைகள், ஈஎம்ஐ போன்ற அனைத்து பண எடுப்புகளும் அடங்கும். இருந்தாலும், வங்கிகள் கூடுதல் பண எடுப்புகளை இலவசமாகத் தர விரு்மபுகிறார்களா அல்லது கட்டணம் விதிக்கிறார்களா என்பது வங்கிகளின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. ஆனால் வைப்புத் தொகைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை.

பிஎஸ்பிடிஏ - பிஎஸ்பிடிஏ சிறு சேமிப்புக் கணக்குப் போட்டியிடுகிறது.

பிஎஸ்பிடிஏ - பிஎஸ்பிடிஏ சிறு சேமிப்புக் கணக்குப் போட்டியிடுகிறது.

ஒரு சாதாரணப் பிஎஸ்பிடிஏ கணக்கிற்குக் கேஒய்சி கட்டாயமாகும். ஆனால் எளிமையாக்கப்பட்ட கேஒய்சி ஐ பயன்படுத்திக் கணக்கு தொடங்கப்பட்டால் அது பிஎஸ்பிடிஏ சிறு கணக்காகக் கருதப்படும். அது பின்வரும் வரைமுறைகளுடன் வருகிறது:

1. ஒரு நிதி ஆண்டில் அனைத்துக் வரவுகளின் மொத்த மதிப்பு ரூ. 1 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது.
2. ஒரு மாதத்தில் அனைத்துப் பணத்தை வெளியெடுத்தல் மற்றும் பணப்பரிமாற்றங்களும், மொத்தமாக ரூ. 10,000 க்கு மேல் இருக்கக்கூடாது.
3. எந்தக் காலக் கட்டத்திலும் இருப்புத் தொகை ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.
4. தொடக்கத்தில் சிறிய வங்கிக் கணக்குகள் 12 மாத காலத்திற்கு மதிப்புடையது, ஆனால் கணக்கு தொடங்கிய நபர் கணக்கைத் தொடங்க விண்ணப்பித்ததற்கான அதிகாரப்பூர்வமான மதிப்புள்ள ஆவணத்தின் சான்றை வழங்கினால், மற்றுமொரு 12 மாதங்களுக்கு வங்கிக் கணக்கு நீட்டிக்கப்படும்.

 

ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்

ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்

தற்போதுள்ள சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடிஏ வாக மாற்றிக்கொள்ள முடியாது. நீங்கள் புதிதாக ஒன்றை தொடங்கிக் கொள்ளலாம். ஒரு தனிநபர் ஒரு வங்கியில் ஒரே ஒரு பிஎஸ்பிடிஏ கணக்கை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படுவார். யாரேனும் சேமிப்புக் கணக்கை வைத்திருந்தால் பிஎஸ்பிடிஏ கணக்கு தொடங்கிய 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூடி விட வேண்டும். இல்லையென்றால், 30 நாட்களு்ககுப் பிறகு வங்கி தானாக முன்வந்து அந்தக் கணக்கை மூடிவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+