தீபாவளி சிறப்பாக வர இருக்கும் ‘முகூர்த் டிரேடிங்’ எந்தப் பங்குகளை எல்லாம் வாங்கலாம்!

இந்தியாவின் முதன்மை பங்கு சந்தைக் குறியீடுகளான மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் தீபாவளி சமயத்தில் முகூர்த் டிரேடிங் என்ற முறையினைச் செயல்படுத்தும். எனவே முகூர்த் டிரேடிங்கில் எந்தப் பங்குகளை எல்லாம் வாங்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கின்றோம்.

பொதுவாகத் தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் இந்த முகூர்த் டிரேடிங் சேவை 2017-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

சுந்தரம் ஃபாஸ்டினர்ஸ்

சுந்தரம் ஃபாஸ்டினர்ஸ்

சுந்தரம் ஃபாஸ்டினர்ஸ் நிறுவனம் சென்னையினைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டிவிஎஸ் குழுமத்தின் ஒரு பிரிவாகும். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக அஷோக் லைலாந்து, மகேந்திரா & மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டைம்லர், சீமன்ஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

டிரேடிங் நிறுவங்கள் சுந்தரம் ஃபாஸ்டினர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது உள்ள 510 ரூபாய் மதிப்பில் இருந்து 590 ரூபாய் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

லூபின்

லூபின்

பங்கு சந்தை தரகர் நிறுவனங்கள் பார்மா நிறுவனமான லூபின் தங்களது சந்தையில் பெறும் வளர்ச்சியினை அடையும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

லூபின் நிறுவனப் பங்குகள் தற்போது 1,061.40 ரூபாயில் இருந்து 1,572 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

 

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசிக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தனியார் லைப் இன்சூரன்ஸ் நிறுவனமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தின் திட்டங்களுக்குப் பொதுமக்கள் இடையில் நல்ல வரவேற்பும் உள்ளது.

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு நன்றாக உள்ளதால் ஒரு பங்கின் மதிப்பு 507 ரூபாய் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 FIEM நிறுவனங்கள்

FIEM நிறுவனங்கள்

FIEM நிறுவனம் 95 சதவீத வருவாயினை ஆட்டோமொபைல் பிரிவில் இருந்த தான் பெற்று வருகின்றது. கோடாக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று உறுதி செய்துள்ளது.

இதனால் FIEM நிறுவனத்தின் ஒரு பங்குடைய விலை 1,254 ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் (DHFL)

திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் (DHFL)

திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த இரண்உ வருடத்திற்கு 23 சதவீதம் வரை இருக்கும் என்றும் 28 சதவீதம் வரை வருவாய் வளர்ச்சி இருக்கும் என்று ஏஞ்சல் புரோக்கிங் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை 650 ரூபாய் வரை முன்னேறும் என்றும் கூறப்படுகின்றது.

பாட்டா இந்தியா

பாட்டா இந்தியா

ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனம் பாட்டா இந்திய பங்குகள் 925 ரூபாய் வரை செல்லும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாட்டா 24 சதவீதம் வரை வளர்ச்சியினைப் பெறும் என்றும் கூறப்படுகின்றது.

பஜாஜ் பின்சர்வ்

பஜாஜ் பின்சர்வ்

ஷேர்கான் நிறுவனம் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தினை இந்தத் தீபாவளியின் போது முகூர்த் டிரேங்கில் வாங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ

இரண்டு சக்கர வாகனச் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2018 நிதி ஆண்டில் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்றும் இதனால் பங்குகளின் விலை 3,820 ரூபாய் வரை செல்ல இருப்பதாகவும் எச்டிஎப்சி செக்யூரிட்டிஸ் கூறியுள்ளது.

ஏசியன் கிரானிடோ

ஏசியன் கிரானிடோ

கோடாக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஏசியன் கிரானிடோ நிறுவனப் பங்குகள் மிது சாதகமாக 603 ரூபாய் வரை செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்தில் 8 ஆலைகளை ஏசியன் கிரானிடோ நிறுவனம் 33 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

முகூர்த் டிரேடிங்

முகூர்த் டிரேடிங்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+