என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்?

தலைப்பைப் படித்த உடன் கிளிக் பெறுவதற்காக இந்தக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை தேசிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் என்பிஎஸ்-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் ஏமார்ந்து போவீர்கள் என்று தெரியுமா?

பல வயது உடைய முதலீட்டாளர்கள் வருமான வரி வரம்பைக் குறைப்பதற்காக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதைப் பார்த்து வருகிறேன். ஆனால் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வரிச் சேமிப்பை விடப் பெரிய நண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

வரி விலக்கு

வரி விலக்கு

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குப் படிவம் 80 சிசி-ன் கீழ் 50,000 ரூபாய் வரை வரி விலக்குப் பெறலாம். ஆனால் இத்திட்டத்தில் முதலீடு செய்தால் ஆத்திர அவரசத்திற்குப் பணத்தினை எடுக்க முடியாது. 60 வயது நிரம்பிய பிறகு மட்டுமே பணத்தினைப் பெற முடியும். ஆனால் பணத்தினை முன்கூட்டியே எடுக்கச் சில வழிகள் உண்டு.

அரசாங்க ஊழியர்கள்

அரசாங்க ஊழியர்கள்

இத்திட்டத்தில் முதலீடு செய்வது என்பது 60 வயது வரை அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். இரண்டு மாதம் வரை வேலை இல்லை என்றால் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள பணத்தினை எளிதாக எடுத்துவிட முடியும்.

கட்டாய வரம்பு

கட்டாய வரம்பு

நீண்ட காலம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது மட்டும் இல்லாமல் ஆண்டுக்கு கண்டிப்பாக இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற வரம்பும் உண்டு. ஒரு முறை என்பிஎஸ் கணக்கை துவங்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட திகையினை முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் ஓய்வு காலத்திற்காகத் தான் சேமித்துவிட்டதாகவும், வரி விலக்கு கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும், முதலீட்டுக் காலத்திற்கு மட்டும் தான் வரி விலக்கு. முதிர்வு அடைந்த பிறகு பெறும் தொகைக்கு வை செலுத்த வேண்டும்.

என்பிஎஸ் முதலீடு முதிர்வடைந்த பிறகு எப்படிக் கிடைக்கின்றது?

என்பிஎஸ் முதலீடு முதிர்வடைந்த பிறகு எப்படிக் கிடைக்கின்றது?

வரி விலக்கிற்காக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது தேவை இல்லாத ஒன்று என்ற நிலையில் முதிர்வு தொகையினைப் பெறும் போது 40 சதவீத கார்ப்பஸ் தொகைக்கு மட்டுமே வரி விலக்கு. 20 சதவீத கார்ப்பஸ் தொகைக்கு மார்ஜினல் வரி விகிதத்தின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். மீதம் உள்ள 40 சதவீதத்தினை மாதாந்திர பென்ஷனுக்காகக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பென்ஷம் மூலம் வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதனால் நீண்ட கால முதலீடாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வந்தாலும் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. 60 சதவீத தொகை பெயிலாகவும், மீதம் உள்ள 40 சதவீத தொகை காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்பது போன்றது ஆகும்.

 ரிஸ்க்

ரிஸ்க்

தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது குறிப்பிட்ட வருவாயினை அளிக்கும் என்பது கிடையாது. பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டு இருப்பது. வரியையும் செலுத்திவிட்டு ரிஸ்க்கையும் எடுத்துத் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ரிஸ்க் உடன் முதலீடு செய்யப் பல முதலீடு திட்டங்கள் சந்தையில் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+