ஒவ்வொரு நாளும் நிதி துறையில் டிஜிட்டல் மையத்தின் ஆதிக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் ஒரு காட்டமாக மத்திய வங்கி பேமெண்ட்ஸ் வங்கி சேவைகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. பேமெண்ட்ஸ் வங்கி சேவையும் பிற வங்கிகளைப் போன்றே அனைத்து நிதி சேவைகளையும் வழங்கினாலும் கடன் மட்டும் வழங்காது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனம் தனது சேவையினை வணிக ரீதியாகத் துவங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி என நான்கு வங்கிகள் சேவையில் உள்ளன. எனவே பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கும் சாதாரண வங்கி சேவைக்கும் என்னவெல்லாம் வித்தியாசம் என இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
வட்டி விகிதம்
சாதாரணமாக வங்கிகளில் 3.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகைக்கு லாபம் அளிக்கப்படுகிறது. இதுவே ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 7.25 சதவீதமும், பேடிஎம் வங்கி சேவை 4 முதல் 7 சதவீதம் வரையிலும், இந்தியா போஸ்ட் பேமெம்ட்ஸ் வங்கி சேவை 4.5 சதவீத முதல் 5.5 சதவீதம் வரை லாவம் அளிக்கிறது. இதுவே ஆர்பிஎல் மற்றும் யெஸ்பேங்க் போன்ற வங்கிகள் 7 சதவீதம் வரை சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகைக்கு லாபம் அளிக்கின்றன.
குறைந்தபட்ச இருப்புத் தொகை
பல வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கின்றன. ஆனால் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கட்டணங்கள்
பொதுவாக வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிப்பது வழக்கம். இந்தியா போஸ்ட் பேமென்ஸ் வங்கியும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை செய்யும் போது 5 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி பிற வங்கிகளுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 0.5 சதவீதம் கட்டணமாக வசூலிக்கிறது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கட்டணம் ஏதும் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறியுள்ளது.
செயல்பாடுகள்
பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆதார் உதவியுடன் உருவாக்க முடியும். ஆனால் ஆவணச் சரிபார்ப்பிற்கு மட்டும் அருகில் உள்ள கிளைக்குச் செல்ல வேண்டும்.
டெபிட் கார்டுகள்
போஸ்டல் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இரண்டு முதல் வருடத்திற்கு இலவச ரூபே டெபிட் கார்டும், இரண்டாம் வருடம் முதல் ஆண்டுக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கின்றன.
செக் புக்குகள்
மேலும் செக் புக்குகள் வேண்டும் என்றாலும் 100 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications