வீடு வாங்கலாமா வாடகைக்கு எடுக்கலாமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒருவர் வீட்டை இப்போதே வாங்கலாமா அல்லது பிறகு வாங்கலாமா அல்லது அதற்குப் பதிலாக வாடகைக்கு எடுக்கலாமா என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்? நல்ல விலையும் மற்றும் கிடைக்கப்பெறும் தன்மையும் மட்டுமே ஒரு சொத்தை வாங்குவதற்குப் போதுமான காரணங்கள் அல்ல. ஏனென்று கண்டறியுங்கள்.

வீடு மனை கட்டுமானார்களும் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களும் சொத்துக்களின் விலைகள் அடிமட்டத்திற்கு வந்து விட்டதாகவும் வீடு வாங்கும் வாய்ப்புள்ளவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னாடி எடுத்து வைத்து சொந்த வீடு வாங்க வேண்டுமென்கிற அவர்களது கனவை இப்போது நனவாக்கிக் கொள்ளலாம் என்றும் வாதிடுகிறார்கள். இந்தத் துறையில் விலைகளில் திருத்தம் செய்துள்ள தொடர்ச்சியான தீர்மானங்களின் பின்னணியில் இந்த வாதம் வந்துள்ளது. எது எப்படி இருப்பினும், விலைகள் குறைந்துள்ளது என்கிற ஒரே காரணத்திற்காக இப்போது சொத்துக்களை வாங்குவது புத்திசாலித்தனமா? எப்போதும் அப்படி இருப்பதில்லை.

எப்போது வாங்கக் கூடாது?

ஒரு வீட்டை வாங்கும் போது விலையைத் தவிரக் கருத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு காரணிகள் இருப்பதாக நிதியியல் திட்டமீட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் இந்தக் காரணிகள் உங்கள் வாழ்க்கை சூழலுக்கு முக்கியமானதாக இருந்தால், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் குடியிருப்பது உங்களுக்கு அதிக அனுகூலமானதாக இருக்கும்.

நெகிழ்வுத்தன்மை

உங்கள் வேலையோ அல்லது தொழிலோ சரியான நிலைப்பாட்டில் இல்லை என்று நீங்கள் கருதினால் நீங்கள் அடுத்தச் சில வருடங்களுக்கு எங்கே வசிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாத உங்களுடைய இப்போதைய வாழ்க்கை சூழ்நிலையில் புதிய வீட்டை வாங்கி விட்டு அடுத்தச் சில வருடங்களில் அதை விற்கப் போராடுவதை விட, வாடகை வீட்டில் தங்குவதைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம். உங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையின் தொடக்கத்திலேயே சொந்தமாக வீடு வாங்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய நாட்களில் மக்கள் அவர்களுடைய வேலை அவர்களை எங்குக் கொண்டு செல்கிறதோ அப்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று வாழ்கிறார்கள். எனவே, ஒரு இடத்தில் வீடு வாங்கி விட்டு அவர்கள் தங்கள் வேலையைப் பின்தொடர்வதற்காக வேறு ஒரு இடத்திற்கு நகரும் போது வீடு அவர்களுக்குப் பயன்படப் போவதில்லை," என்கிறார் மும்பையைச் சேர்ந்த நிதியியல் திட்டமிட்டாளரான சுரேஷ் சடகோபன்.

தாங்குதிறன்

தூய நிதியியல் மொழியில் சொல்வதென்றால், வீடு வாங்குவதை விட வாடகைக்கு எடுத்துக் கொள்வதே சிறந்ததாக இருக்கும். பொதுவாகப் பெருநகரங்களில் ஒரு வீட்டின் ஆண்டு வாடகை அந்தச் சொத்து மதிப்பின் 1.5 முதல் 2.5% வரை இருக்கும். "நிதியியல் ரீதியாக ஒரு சொத்தின் மதிப்பை விட அதன் வாடகை 2 முதல் 3% குறைவாக இருந்தால், நீங்கள் தொடர்ந்து வாடகை வீட்டிலேயே வசிப்பதைப் பற்றி யோசிக்கலாம்," என்கிறார் பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் திட்ட நிறுவனமான இன்டர்நேஷனல் மணி மேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லோவய் நவ்லக்கி.

வசதி

பெரும்பாலும், இட அமைவு அல்லது அளவின் அடிப்படையில் ஒருவர் வாங்கும் வீடு மிகவும் பொருத்தமானதாக இருப்பதில்லை. ஒரு இளம் குடும்பம் அவர்களுடைய குழந்தைகளின் பள்ளிக்கு அருகில் அவர்களின் வீடு இருக்க வேண்டுமென்று நினைக்கலாம், இதற்காகச் சற்று தூரத்திலுள்ள சிறந்த வீட்டை வாங்குவதைக் கைவிடலாம். சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்பது உங்கள் வாழ்க்கையின் இலட்சியமாக இல்லாவிட்டால், இத்தகைய மற்றும் இதர சூழ்நிலைகளில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வது வாழ்க்கையை எளிதாக்கும். வாடகைக்கு வீடு எடுப்பது உங்கள் பணியிடத்திற்கு அருகாமையில் வசிக்க உங்களை அனுமதிக்கும் அல்லது உங்களுக்கு முக்கியமான இதர சௌகரியங்களைக் கொண்டிருக்கும். எனவே, உங்கள் வாடகை பட்ஜெட்டிற்க்குள் உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமாக வீடு கிடைத்தால், உங்கள் வாங்கும் தகுதிக்கு அப்பாற்பட்ட உங்களுக்குப் பொருந்தாத ஒரு சொத்தையோ அல்லது இருப்பிடத்தையோ தேர்வு செய்வதை விட வாடகைக்குச் செல்வதே சிறந்தது.

நீண்ட கால ஒப்பந்தம்

கடனில் வீடு வாங்குவது நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் பொறுப்பாகும். வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கங்கள் மேலும் சில நேரங்களில் வேலை இழப்பு போன்ற கடினமான சூழ்நிலைகளைக் கூடத் தாங்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். இருந்தாலும் தொடர்ந்து மாதாந்திரத் தவணைத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். மிக அருகாமையில் அல்லது நடுத்தரக் கால அளவில் எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயமற்ற சூழல்களால் பாதிப்புக்குட்படுவீர்கள் என்று நீங்கள் நம்பினால், வீடு என்பது ஒரு சொத்தாக இல்லாமல் மிகப் பெரிய கடன் பொறுப்பாக மாறிவிடும்.

பெரும்பாலும், மக்கள் தங்கள் வீடு வாங்கப் பெரிய கடன் வாங்கி அதை நீடிக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்னர், "மாதாந்திர தவணையைச் செலுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு உங்களுக்கு வருமானம் இல்லையெனில், என்ன மாற்றுத் திட்டம் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என்று நவ்லாக்கி கூறுகிறார். மாதாந்திர தவணையை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் விருப்பத்திற்கு அதைக் குறைக்க முடியாது. வாடகைக்கு விடுவதாக இருந்தால், நீங்கள் நிதி நெருக்கடியின் காரணமாகக் குறைந்த வாடகை வீட்டுக்குச் செல்லலாம். மேலும் ஒரு வீடு நெருக்கடியில் விற்கப்படும் போது விற்பனையாளருக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

 

மற்ற வாழ்க்கை இலக்குகள்

ஒரு வீட்டை வாங்குதல் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடு ஆகும். இருப்பினும், அந்த வீட்டிற்கு நிதியளிப்பதில், மற்ற வாழ்க்கை இலக்குகளுக்கான பங்களிப்பில் எந்தக் குறையும் ஏற்படக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். "பணம் தேவைப்படும் சில விஷயங்கள் உள்ளன. அவை திருமணம், குழந்தைகளின் கல்வி, பயணம் ஆகியவை ஆகும். இவை அனைத்தும் வாழ்க்கை வாழத் தேவையானது" எனச் சடகோபன் கூறுகிறார். ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்குவதற்காக இதை யாரும் தியாகம் செய்யக்கூடாது.

எப்போது வாங்குவது

இருப்பினும், ஒரு வீட்டை வாங்குவது பல சூழ்நிலைகளில் சொத்து விலையைப் பொறுத்தது. நீங்கள் ஒரு பொருத்தமான வீட்டைக் கண்டுபிடித்து அதை வாங்குகிறீர்களானால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நிலைப்புத்தன்மை

5-7 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நகரத்தில் தங்கியிருப்பீர்களானால், நீங்கள் ஒரு வீட்டை வாங்கத் தீர்மானிக்கலாம். மேலும், நீண்ட கால நோக்கில் உங்கள் வாடகை உங்கள் மாதாந்திர தவணையை விட வேகமான விகிதத்தில் நிச்சயமாக அதிகரிக்கும். உண்மையில் மாதாந்திர தவணை ஒட்டுமொத்த வட்டி விகித நிலைமையைப் பொறுத்து மேலும் குறையலாம்.

நிதி ஸ்திரத்தன்மை

உங்களுடைய மற்ற நிதி இலக்குகளைச் சமரசம் செய்யாமல், அதிக முன்பணத்தை (20% க்கும் அதிகமானவை) செலுத்த போதுமான நிதி இருந்தால் ஒரு வீட்டை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் நிதியுதவி இருந்தால் மட்டுமே ஒரு வீட்டை (முதல் வீடு அல்லது இறுதி பயன்பாட்டிற்கான வீடு) வாங்க அறிவுறுத்துகிறார்கள்.

வரிச் சலுகைகள்

வீட்டுக் கடன்கள் திருப்பிச் செலுத்துவதில் கணிசமான வரிச் சலுகைகள் உள்ளன என்பதால் மொத்த வீட்டுக் கடனை 25-30 லட்சம் என்று வழங்கினால், அதிகபட்ச வரி அடைப்புக்குறிக்குள் 2% முதல் 2.5% வரை கடன் வாங்கலாம். வட்டி திருப்பிச் செலுத்துவதன் மீதான பயன் ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் என்ற அளவில் உள்ளது, எனவே இந்த நன்மை பெரிய வீட்டுக் கடனுக்காகக் குறைகிறது.

குறைந்த வீட்டுக் கடன் விகிதங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில், வீட்டுக் கடன் விகிதம் சுமார் 2% குறைந்து, மாதாந்திர தவணையானது 25 லட்ச ரூபாய் மற்றும் 20 வருட வீட்டுக்கடனுக்கு 3,400 ரூபாய் குறைந்துள்ளது. எனவே, வரி நலனுடன் சேர்ந்து ஒரு வீடு வாங்குவது சில ஆண்டுகளுக்கு முன்பைவிடச் சில பிரிவில் இப்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு சொத்து உருவாக்குதல்

உங்களுடைய நிதி நல்ல வடிவத்தில் இருக்கும்போது, உங்கள் நகர மற்றும் இருப்பிடங்களின் விருப்பப்படு சொத்து விலைகள் அடக்கமான விலையில் இருக்கும் போது, நீங்கள் ஒரு சொத்து உருவாக்கலாம். மாதாந்திர வாடகைக்குப் பதிலாக மாத தவணை செலுத்தலாம்.

ஒரு வீட்டை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் மேலே உள்ளன. நீங்கள் அவற்றை மதிப்பீடு செய்து இப்போது நீங்கள் வீடு வாங்க வேண்டுமா அல்லது வாடகைக்கு இருப்பது சிறந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், உங்களுக்கும் உங்களுடைய குறிப்பிட்ட சூழ்நிலைக்கும் எந்த முடிவு பொருத்தமானது என்பதைப் பார்க்க வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

To buy, or rent a home, that is the question

To buy, or rent a home, that is the question
Story first published: Thursday, November 23, 2017, 17:29 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns