நீண்ட கால முதலீடுக்கு ஏற்ற 50 முதல் 100 சதவீதம் வரை லாபம் அளிக்கக் கூடிய 4 மிட்கேப் பங்குகள்..!

இந்திய பங்கு சந்தைக் கடந்த 3 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. அதிலும் சென்ற 12 மாதத்தில் மட்டும் 24 முதல் 25 சதவீதம் வரை இந்திய பங்கு சந்தை குறியீடுகள் லாபம் அளித்துள்ளன.

இப்படி வேகமாக வளர்ந்து வரும் இந்திய பங்கு சந்தை அவ்வப்போது ஏற்ற இறக்குகள் வந்து கொண்டு தான் உள்ளன. இருந்த போதிலும் முதலீடு செய்த அடுத்த ஒரு வருடத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை லாபம் அளிக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கும் 4 மிட்கேப் பங்குகள் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

நாகார்ஜூனா கட்டுமான நிறுவனம்

நாகார்ஜூனா கட்டுமான நிறுவனம்

சென்ற ஒரு ஆண்டில் மட்டும் நாகார்ஜூனா கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 50 சதவீதம் வரை லாபம் கிடைத்துள்ளது. என்சிசி எனப்படும் இந்தப் பங்குகள் தற்போது 120 ரூபாய் ஒரு பங்கு என்றுள்ள நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்குள் 134 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. எனவே 2017 முதல் 2019 வரை இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கோடாக் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிம்ப்ளக்ஸ் இன்பிராஸ்ட்ரக்ச்சர்ஸ்

சிம்ப்ளக்ஸ் இன்பிராஸ்ட்ரக்ச்சர்ஸ்

சிம்ப்ளக்ஸ் இன்பிராஸ்ட்ரக்ச்சர்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வடத்தில் முதலீட்டாளர்களுக்கு இரண்டு மடங்கு லாபத்தினை அளித்துள்ளது. ஒரு வருடத்திற்குமுன்பு 292 ரூபாய் என்ற இருந்த சிம்ப்ளக்ஸ் இன்பிராஸ்ட்ரக்ச்சர்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று 593.80 ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் 17.9 சதவீதம் வரை உயரந்து 668 ரூபாய் ஒரு பங்கு என லாபம் அளிக்க வாய்ப்புள்ளதாகக் கோடாக் செக்யூரிட்டிஸ் கூறுகிறது.

கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்

கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்

கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடத்ஹ்டில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக லாபம் அளித்துள்ளதாகவும், இந்தப் பங்குகளை வாங்கினால் 169 சதவீதம் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது சந்தையில் 279.90 ரூபாய் ஒரு பங்கு என்று உள்ள நிலையில் இதுவே அடுத்த ஒரு வருடத்தில் 322 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கோடாக் செக்யூரிட்டிஸ் கூறுகிறது.

பிஎன்சி இன்பிராடெக்

பிஎன்சி இன்பிராடெக்

கடந்த 12 மாதத்தில் பிஎன்சி இன்பிராடெக் நிறுவனம் 65 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் தற்போது 187 ரூபாய் என்று உள்ள ஒரு பங்கின் விலை 198 ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாகவும் முதலீடு செய்து 5 வருடம் காத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கோடாக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.

 குறிப்பு

குறிப்பு

இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+