2017-ம் ஆண்டு அதிக லாபம் அளித்த ஸ்மால் கேப் பங்குகள் ஒரு பார்வை..!

பங்கு சந்தை முதலீடுகளில் ரிஸ்க் இருக்கும் என்பது அனைவரும் தெரியும், அதுவும் ஸ்மால் கே பங்குகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அதிக ரிஸ்க் மற்றும் அதிக லாபம் வேண்டும் நினைப்பவர்கள் அதான் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வார்கள்.

அப்படி 2017-ம் ஆண்டு 500 முதல் 1100 சதவீதம் வரை லாபம் அளித்த ஸ்மால் கேப் பங்குகள் என்னென்ன என்று இங்குப் பார்க்கலாம்.

எச்ஈஜி

எச்ஈஜி

எலக்ட்ரோட்ஸ் - கிராப்பைட்ஸ் துறை சார்ந்த நிறுவனமான எச்ஈஜி பங்கின் விலை 2016 டிசம்பர் 30-ம் தேதி 150 ரூபாயாக இருந்தது. அதுவே 2017 டிசம்பர் 14-ம் தேதி வரை 1,899.8 ரூபாய் உடன் 1167 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.

 இந்தியாபுல்ஸ் வெஞ்யூர்ஸ்

இந்தியாபுல்ஸ் வெஞ்யூர்ஸ்

ஃபினாஸ் நிறுவனமான இந்தியாபுல்ஸ் வெஞ்யூர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2016 டிசம்பர் 30-ம் தேதி 20.6 ரூபாயாக இருந்தது. இதுவே 2017 டிசம்பர் 14-ம் தேதி 1107 சதவீத லாபத்துடன் 248.1 ரூபாய் ஒரு பங்கு என லாபம் அளித்துள்ளது.

காலிபோர்னியா மென்பொருள் நிறுவனம்

காலிபோர்னியா மென்பொருள் நிறுவனம்

மென்பொருள் நிறுவனமான காலிபோர்னியா சாப்ட்வேர் 2016 டிசம்பர் 30 வரை 7.5 ரூபாய் ஒரு பங்கு என இருந்தது 2017 டிசம்பர்-ம் தேதி 1087 சதவீதத்துடன் 89.4 ரூபாய் ஒரு பங்கு என லாபம் அளித்துள்ளது.

எஸ்ஓஆர்ஐஎல் ஹோல்டிங்ஸ் & வெஞ்யூர்ஸ்

எஸ்ஓஆர்ஐஎல் ஹோல்டிங்ஸ் & வெஞ்யூர்ஸ்

டிரேடிங் நிறுவனமான எஸ்ஓஆர்ஐஎல் ஹோல்டிங்ஸ் & வெஞ்யூர்ஸ் 2016 டிசம்பர் 30 வரை 20.3 ரூபாய் ஒரு பங்கு என இருந்தது தற்போது 2017 டிசம்பர் 14-ம்ட் தேதி வரை ஒரு பங்கு 226.1 ரூபாய் என லாபம் அளித்துள்ளது.

கிரேப்பைட் இந்தியா

கிரேப்பைட் இந்தியா

2016 டிசம்பர் 30 வரை கிரேப்பைட் இந்தியா நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 73 ரூபாய் என இருந்தது, இதுவே 2017 டிசம்பர் 14 வரை 633.4 ரூபாய் ஒரு பங்கு என லாபம் அளித்துள்ளது.

வேஜிமன் ஃபோரெக்ஸ்

வேஜிமன் ஃபோரெக்ஸ்

ஃபினான்ஸ் நிறுவனமான வேஜிமன் ஃபோரெக்ஸ் 2016 டிசம்பர் 30ம் தேதி வரை 172 ரூபாய் ஒரு பங்கு என 2017 டிசம்பர் 16 தேதி வரை 1,141 ரூபாய் ஒரு பங்கு ஆக லாபம் அளித்துள்ளது.

சான்வாரியா கன்ஸ்யூமர்

சான்வாரியா கன்ஸ்யூமர்

2016 டிசம்பர் 30ம் தேதி வரை உணவு நிறுவனமான சான்வாரியா கன்ஸ்யூமரின் ஒரு பங்கின் விலை 2.5 ரூபாயாக இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 14ம் தேதி 664 சதவீத வளர்ச்சியுடன் 19 ரூபாய் ஒரு பங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவா கார்பன்

கோவா கார்பன்

கோவா கார்பன் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2016 டிசம்பர் 30ம் தேதி 105.8 ரூபாயாக இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 31-ம் தேதி 794.5 ரூபாய் ஒரு பங்காக லாபம் அளித்துள்ளது.

பன்சாலி எஞ்சினியரிங் பாலிமர்ஸ்

பன்சாலி எஞ்சினியரிங் பாலிமர்ஸ்

பன்சாலி எஞ்சினியரிங் பாலிமர்ஸ் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2016 டிசம்பர் 30ம் தேதி 22.4 ரூபாயாக இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 31-ம் தேதி 166.3 ரூபாய் ஒரு பங்காக லாபம் அளித்துள்ளது.

யூகென் இந்தியா

யூகென் இந்தியா

யூகென் இந்தியா ஹைடிராலிக் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 2016 டிசம்பர் 30ம் தேதி 421.3 ரூபாயாக இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 31-ம் தேதி 3,024.1 ரூபாய் ஒரு பங்காக லாபம் அளித்துள்ளது.

 ஜிண்டால் வார்ல்டுவைடு

ஜிண்டால் வார்ல்டுவைடு

ஜிண்டால் வார்ல்டுவைடு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 2016 டிசம்பர் 30-ம் தேதி 177 ரூபாய் என இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 14ம் தேதி வரை 602 சதவீத வளர்ச்சியுடன் ஒரு பங்கு 1,243.4 ரூபாயாக லாபம் அளித்துள்ளது.

 கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக்

கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக்

டெலிகாம் சாதனங்கள் நிறுவனமான கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக் பங்குகள் 2016 டிசம்பர் 30-ம் தேதி 26.7 பங்காக இருந்தது. இதுவே 2018 டிசம்பர் 14-ம் தேதி ஒரு பங்கின் விலை 588 சதவீத உயர்வுடன் 26.7 ரூபாயாக லாபம் அளித்துள்ளது.

 ரெயின் இண்டஸ்ட்ரீஸ்

ரெயின் இண்டஸ்ட்ரீஸ்

டிரேடிங் நிறுவனமான ரெயின் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 568 சதவீதத்துடன் 2017 டிசம்பர் 14 தேதி ஒரு பங்கின் விலை 366 ரூபாயாக லாபம் அளித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+