மூத்த குடிமகன்களுக்கான பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை?

அன்மை காலங்களில் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடியும் அதிக வருமானம் மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தைப் பெறும் வகையிலும், ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேற விரும்புகிறார்கள். அதே நேரத்தில் மேற்கூறியவர்களின் பெற்றோர் இந்திய மண்ணிலேயே தொடர்ந்து வசிக்க விரும்பினாலும், அவ்வப்போது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டு தங்களின் அன்புக்குரியவர்களைச் சந்திக்க ஏங்குகிறார்கள். ஆனால் வயது முதிர்ச்சியின் விளைவாகப் பல உடல் உபாதைகள் ஏற்படுவதால், இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பயணக் காப்பீடு அளிக்கக் காப்பீட்டு நிறுவனத்தினர் இன்று வரை தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது சில காப்பீட்டு நிறுவனத்தினர், மூத்த குடிமக்களுக்கான பயணக் காப்பீட்டுத் திட்டத்தை அளிக்க முன்வந்துள்ளனர். இந்தத் திட்டங்கள் குறித்து முக்கியக் காரியங்களை இன்று அறிந்து கொள்வோம்.

பாதுகாப்பு மற்றும் அம்சங்கள்

பாதுகாப்பு மற்றும் அம்சங்கள்

வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து மேற்கூறிய திட்டங்கள் வேறுபடுகின்றன. வழக்கமாகக் காப்பீடு அளிக்கப்படும் நபருக்கு, துவக்க வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதோடு, 70 வயது வரை பொதுவாகக் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் மூத்த குடிமகன்களுக்கான பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் 71 வயதில் துவங்கி, 80 வயது வரை காப்பீடு வழங்குகின்றன. மேலும் ஒவ்வொரு திட்டங்களும் வேறுபடுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டில் பின்வரும் காரியங்கள் உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

  • உயிரிழப்பு உத்தரவாதம்
  • மருத்துவச் சிகிச்சை
  • இக்கட்டுக் கால உதவி
  • அவசரக் கால மருத்துவ உதவி
  • பல் சிகிச்சை
  • இறந்த உடலைத் தாய்நாட்டிற்குக் கொண்டு செல்லுதல்
  • கடவுச்சீட்டு தொலைந்து போவது
  • தனிப்பட்ட விபத்து
  • தனிப்பட்ட இழப்புகள்
  • ஒட்டுமொத்த இழப்பு / சோதிக்கப்பட்ட போக்குகளின் காலதாமதம்
  • அவசர நிதியுதவி
  • இந்திய குடிகளுக்காக உள்ளூர் கொள்ளைக் காப்பீடு

 

இந்தியாவில் இந்தத் திட்டங்களுக்கான வரவேற்பு

இந்தியாவில் இந்தத் திட்டங்களுக்கான வரவேற்பு

பெரும்பாலான உயர்மட்ட காப்பீட்டு நிறுவனங்களான அப்போலோ முனிச், ரிலையன்ஸ் ஜெனரல், ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் உள்ளிட்டவை, தங்களின் பயணக் காப்பீட்டுப் பட்டியலில் மூத்த குடிமக்களுக்கான திட்டங்களை உட்படுத்தி உள்ளன. ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்திலும், ஒரு பிரிமியம் கணக்கீட்டைக் காண முடிகிறது. இதன்மூலம் உங்கள் வயது, விசா வகை, தங்கியிருக்கும் காலம் போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையைக் கணக்கிடலாம். ஆனால் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களும் சில முன் நிபந்தனைகளை முன் வைக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, காப்பீட்டுத் தேவைப்படும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; காப்பீட்டிற்காக விண்ணப்பிக்கும் போது இந்தியாவில் இருக்க வேண்டும்; காப்பீட்டுக் காலம் 180 நாட்களுக்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும்; மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் ஆகியவற்றைக் கூறலாம்.

பிரிமியம்

பிரிமியம்

பிரிமியம் தொகையைப் பொறுத்த வரை, பயணம் செல்லும் இடம் மற்றும் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. எடுத்துக்காட்டாக, ஐசிஐசிஐ லம்பார்ட்டை எடுத்துக் கொண்டால், ஒரு 76 வயது நிரம்பிய மூத்த குடிமகன் 15 நாட்கள் செல்லும் வெளிநாட்டுப் பயணத்திற்கு, 50,000 அமெரிக்க டாலர்கள் (அதிகபட்ச அளவு) காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, அமெரிக்கா / கனடா என்று வைத்துக் கொண்டால், ரூ.7,587 பிரிமியம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஒரு திட்டத்தைப் பெறுவதற்கு முன், அதற்குச் செலவாகும் தொகையைக் கணக்கிட்டு பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவை பெரிய அளவில் வேறுபடலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசியைப் பெறுவதற்கு 85 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவையில்லை, உலகின் எல்லாப் பகுதிகளிலும் இலவச மருத்துவச் சேவைகள் போன்ற சில சிறப்பான தன்மைகளும் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பாலிசியை இணையத்திலேயே நீட்டித்துக் கொள்ளவும் வசதி உள்ளது.

காத்திருப்புக் காலங்கள், உள் கட்டுப்பாடுகள் மற்றும் விதிவிலக்குகள்

காத்திருப்புக் காலங்கள், உள் கட்டுப்பாடுகள் மற்றும் விதிவிலக்குகள்

பொதுவாக, மருத்துவச் சிகிச்சை, சோதிக்கப்பட்ட போக்குகளின் காலதாமதம் மற்றும் மருத்துவமனை பண அளிப்பு போன்ற சில காரியங்கள் விதிவிலக்குகளின் கீழ் வருகின்றன. மேலும், ஒட்டுமொத்த காப்பீட்டு தொகைக்குள் துணை வரம்புகள் உட்பட்டதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அப்போலோ முனிச்சில் உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான ஈடுசெய்யும் தொகையானது முறையே 15,000 அமெரிக்க டாலர் மற்றும் 25,000 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறான விலக்குகளைப் பொறுத்த வரை, சூழ்நிலைகளுக்குள் நுழையும் முன் மற்றும் சாகசம் மிகுந்த சூழ்நிலைகள் ஆகியவை வழக்கமாகக் காப்பீட்டிற்குள் உட்படுத்தப்படுவதில்லை. அதே நேரத்தில் பஜாஜ் அலையன்ஸ் மூலம் அளிக்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களில், நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கான சாகசம் மிகுந்த சூழ்நிலைகளும் உட்படுத்தப்படுகின்றன.

முடிவுரை

முடிவுரை

தொழில் சார்ந்த தேவைகளுக்காக எல்லைகளைக் கடப்பது அதிகரித்துள்ள நிலையில், அவர்களைக் காண சந்தித்த விரும்பும் மூத்த குடிமக்களின் எல்லை கடந்து செல்லும் பயணங்களும் அதிகரித்துள்ளன. எனவே உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்கள் எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளுக்கு வந்து உங்களைச் சந்திக்கும் முன், அவர்கள் சந்திக்கும் வாய்ப்புள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில், அவர்களுக்கான தகுந்த காப்பீட்டுத் திட்டத்தை அளித்துப் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+