மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதிக லாபம் பெற வெண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அதனை எளிமையாகச் செய்யவே எஸ்பிஐ ஒரு செயலியினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனையினை எளிதாக நிர்வகிக்கலாம்.
இந்தச் செயலியானது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்கு தளங்களிலும் கிடைக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்க
மியூச்சுவல் ஃபண்டுகள் பரிவர்த்தனையினை நிர்வகித்தல் மற்றும் ஃபண்டுகளை வாங்குவதுடன் உங்களது நிதி இலக்குகளை அடையவும் இந்தச் செயலி உதவும். பான் கார்டு இருந்தால் போது எளிதாக இந்தச் செயலியில் உங்கள் மியூச்சுவல் ஃபண்டு போர்ட்போலியோவை எளிதாக நிர்வகிக்க முடியும்.
கடவுச்சொல் தேவையில்லை
பிற சேவைகள் போன்று இதில் கடவுச்சொல் போன்றவை தேவையில்லை. இன்வெஸ்டேப் வாடிக்கையாளர்கள் 6 இலக்க எம் பின்னை உருவாக்கி லாக் இன் செய்யலாம். இல்லை என்றால் ஒரு முறை கடவுச்சொல் வாயிலாகவும் உள்நுழையலாம்.
ஃபண்டுகள் ஒப்பிடுதல்
முதலீடுகள் குறித்து முடிவுகளை எடுக்க இந்தச் செயலியில் 3 ஃபண்டுகளை ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மேலும் இந்தச் செயலியில் உங்கள் போர்ட்போலியோவில் டிராக் செய்வது மட்டும் இல்லாமல் தினசரி உள்ள நிகரச் சொத்து மதிப்பைப் பொருத்து சலுகைகளை அளிக்கும்.
பணம் செலுத்தும் முறை
இணையதள வங்கி சேவை, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு, யூபிஐ எனப் பல வழிகளில் பணத்தினைச் செலுத்தி முதலீடு செய்ய இந்தச் செயலி அனுமதி அளிக்கிறது.
முதல் முறை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா?
இந்தச் செயலியில் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து எஸ்ஐபி மூலமாக 5 நாட்களில் முதலீடுகளைத் துவங்க முடியும்.
உங்கள் முதலீட்டில் இருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
எஸ்ஐபி எப்படிச் செயல்படுகின்றது என்பது செயலியில் உள்ள கேல்க்குலேட்டர் மூலமாக உங்கள் போர்ட்போலியோவில் கடந்த 6 மாதம், 1 வருடம் , 3 வருடம், 5 வருடம் எவ்வளவு லாபம் அளித்துள்ளது என்று கணக்கிட முடியும்.


Click it and Unblock the Notifications