குறைந்த விலை பங்குகள் என்றால் அவை எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் அளிப்பதில்லை, அதிக ரிஸ்க் வாய்ந்தவை என்று முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் சில பங்குகள் நீண்ட கால முதலீடாகச் செய்யும் போது அதிக லாபத்தினை அளிக்கும். எனவே இங்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ள, அதிக ரிஸ்க் உள்ள, அதிக லாபம் அளிக்கக் கூடிய பங்குகளை அளித்துள்ளோம்.
ஐவிஆர்சிஎல்
ஐவிஆர்சிஎல் நிறுவனம் நாடு முழுவதும் பல முக்கியக் கட்டுமான திட்டங்களை முடித்துள்ளதுடன் பல புதிய திட்டங்களுக்கான வேலையையும் பெற்றுள்ளது. அன்மையில் ஐவிஆர்சிஎல் தன்னிடம் இருந்த இரண்டு நெடுஞ்சாலை சொத்துக்களைச் சிங்கப்பூர் சார்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு விற்றது. இதனை விற்றதன் மூலம் 8,500 கோடி கடனில் இருந்து சற்று குறைக்க முடிவு செய்துள்ளது.
நீர்ப்பாசன துறை, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறந்த திட்டங்களை ஐவிஆர்சிஎல் செயல்படுத்தி வருகிறது. தற்போது 4.95 ரூபாயாக உள்ள ஒரு பங்கின் விலை கடனை சரியாக நிர்வகித்துத் தங்களது செயல்பாட்டில் வளர்ச்சியினைக் காண்பித்தால் அதிகளவில் லாபம் அளிக்கும்.
ஜீ லர்ன்
இந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனமான ஜி லர்ன் நாடு முழுவதும் பல பள்ளிகளைக் கிட்ஜீ என்ற பெயரில் துவங்கியுள்ளது. ஜீ இன்ஸ்டிடுயூட் ஆப் மீடியா என்ற பெயரிலும் மும்பையில் கல்வி நிலையங்களை ஜீ நிறுவியுள்ளது.
வரும் நாட்களில் ஜீ லர்ன் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் நோக்கத்தில் இயங்கி வருகிறது. எனவே தற்போது 44.50 ரூபாய் என உள்ள பங்கின் விலை ஒரு வருடத்திற்குள் 60 ரூபாயினைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு.
சவுத் இந்தியன் வங்கி
வங்கி நிறுவனப் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள் என்றால் அது நீண்ட கால முதலீடு திட்டமாகவே இருக்க வேண்டும். வரா கடன் அளவு 2017 டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் 3.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இதுவே செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 3.57 சதவீதமாக இருந்தது.
தற்போது 28.20 ரூபாய் என உள்ள சவுத் இந்தியன் வங்கி பங்குகளில் 1,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 1,300 ரூபாய் வரை லாபம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு.
இந்துஸ்தான கன்ஸ்ட்ரக்ஷன்
இந்துஸ்தான கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் இந்தியாவில் பல முக்கியமான கட்டுமான பணிகளைச் செய்து வருகிறது. மும்பையில் அனல் மின் நிலையம், பீகாரில் இன்று, மேற்கு வங்கத்தில் ஒரு அணு உலை திட்டம்.
முதலீடு குறித்த உரிமைத்துறப்பு
கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications