பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் குறித்து இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

வேலை இல்லாதவர்களுக்கு அரசு அளிக்கும் தொழில் கடன் திட்டம் பற்றித் தெரியுமா?

நீங்கள் பார்த்து வந்த வேலையில் இருந்து அன்மையில் ராஜினாமா செய்துள்ளீர்களா அல்லது வேலை பார்த்துக்கொண்டே நிறுவனம் ஒன்றைத் துவங்க விரும்புகிறீர்களா? நீங்கள் இறுக்கு சிறிய நகரத்தில் சொந்தமாகத் தொழில் துவங்க திட்டமிட்டு வருகிறீர்களா?

சரி, இந்திய அரசு உங்களுக்காகவே ஒரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா என்ற இந்தத் திட்டம் வேலை இல்லாத வணிகம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வாங்கும் போது உங்களது சம்பளம் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. உங்கள் கிரெடிட் மதிப்புச் சரியாக இருந்து முறையாகத் தொழில் துவங்கி நடத்துவதற்கான திட்டம் உங்களிடம் இருந்தால் போதும் கடன் அளிக்கப்படும்.

பிரதான் மந்திரியின் ரோஜர் பிரோத்ஷன் யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரியின் ரோஜர் பிரோத்ஷன் யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரியின் ரோஜர் பிரோத்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு உற்பத்தி, வணிகம், சேவை அல்லது டிரேடிங் நிறுவனம் போன்றவற்றைத் துவக்கக் கடனாக நிதி அளிக்கப்படும்.

தகுதி

தகுதி

1) வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, முன்னால் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 10 வருடங்கள் விலக்கு உண்டு. வக கிழக்கு மாநிலத்தவர்களுக்கு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2) நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குறைந்தது 3 வருடங்கள் வரை தொடர்ந்து இருந்து இருக்க வேண்டும்.
3) குறைந்தது 8வது வரை படித்து இருக்க வேண்டும்.
4) மத்திய அரசு சார்ந்த டிரேடிங் நிறுவனங்களில் குறைந்தது 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
5) விண்ணப்பதாரர், அவரைச் சார்ந்தவர்கள், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.

யாருக்கெல்லாம் தகுதி இல்லை?

யாருக்கெல்லாம் தகுதி இல்லை?

1) பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களில் கடன் பெற்று இருந்து அதனைச் செலுத்தாமல் இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
2) இதுப்போன்று பிற அரசு திட்டங்களின் கீழி கடன் பெற்று இருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது.

திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட நடவடிக்கைகள்

திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட நடவடிக்கைகள்

அனைத்துப் பொருளாதார ரீதியாக வெற்றி அளிக்கக் கூடிய தொழில்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படும். விவசாயம் சார்ந்தவற்றுக்கு இந்தத் திட்டம் கீழ் கடன் அளிக்கப்படாது. ஆனால் விவசாயப் பொருட்கள் மூலமாக நடைபெறும் வணிகத்திற்குக் கடன் வழங்கப்படும்.

எவ்வளவு கடன் அளிக்கப்படும்

எவ்வளவு கடன் அளிக்கப்படும்

வணிகத் துறை: ரூ. 2 லட்சம்
சேவை துறை: ரூ. 5 லட்சம்
தொழிற்துறை: ரூ. 5 லட்சம்
கூட்டு நிறுவனங்கள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் துவங்கும் போது 10 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்.

வட்டி விகிதம் எவ்வளவு

வட்டி விகிதம் எவ்வளவு

கடன் பெறும் நேரம், வங்கிகள் மற்றும் வணிகத்தினைப் பொருத்து வட்டி விகிதம் எவ்வளவு போன்ற விவரங்கள் மாறும். இதனை விண்ணப்பிக்கும் போது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

மானியம்

மானியம்

பிரதான் மந்திரியின் ரோஜர் பிரோத்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது 15 சதவீத கடன் தொகை முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும்.

காலமும் பயிற்சியும்

காலமும் பயிற்சியும்

காலம்
3 முதல் 7 ஆண்டுகள்

பயிற்சி

பயிற்சி தேவைப்பட்டால் 7 முதல் 20 நாட்கள் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாகப் பெற முடியும்.

 

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

உங்கள் மாவட்ட தொழில் மையத்தின் பொது நிர்வாகியை அணுகினால் எப்படி விண்ணப்பிப்பது மற்றும் கடன் பெறுவது போன்ற விவரங்களை அளிப்பார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+