இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 4 விஷயங்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
கடைசித் தேதி முடிந்துவிட்டால் கவலை வேண்டாம்!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி எனப்படும் ஜூலை 31 தேதியைக் கடந்துவிட்டோம் என்று பயப்பட வேண்டாம். உதாரணத்திற்கு 2017-2018 நிதி ஆண்டு முடிவுக்குப் பிறகு ஜூலை 31க்குள் செலுத்தப்பட வேண்டிய வரியினைத் தாமதமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செலுத்த அனுமதி உண்டு.
நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ததை உறுதி செய்யுங்கள்
நீங்கள் பணிபுரியும் நிறுவனம் டிடிஎஸ் பிடித்தம் செய்து அதற்குப் படிவம் 16-ஐ அளித்தாலும் நீங்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
வட்டி வருவாய்
சேமிப்பு வங்கி கணக்கு மூலமாக 10,000 ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வருவாய் பெற்று இருக்கும் போது அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும். இதில் மூத்த குடிமக்களுக்கு 2018-2019 நிதி ஆண்டில் 50,000 ரூபாய் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை
ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் போது மாத வாடகை 50,000 ரூபாயினை விட அதிகமாக இருந்தால் டிடிஎஸ் 5 சதவீதம் பிடித்தம் செய்துவிட்டே செலுத்த வேண்டும். உங்கள் வீட்டின் உரிமையாளருக்கு டிடிஎஸ்-க்குக் கிரெடிட் கிடைக்கும் ஆனால் உங்கள் வரி பொறுப்புடன் இதை அமைக்க முடியாது.


Click it and Unblock the Notifications